Tuesday, November 24, 2020
மனிதனும் தெய்வமாகலாம்...!
Friday, October 2, 2020
குற்றவாளிகளும் இன்றைய சமூகமும்!
Wednesday, September 9, 2020
நீங்களும் IAS ஆகலாம்...!
Sunday, September 6, 2020
அரசுப் பள்ளியும் ஆசிரியர்களும்...!
Monday, August 31, 2020
கேள்விக்குறியாகும் எதிர்காலம்!
Tuesday, August 25, 2020
திருட்டு - விமர்சனம்
Thursday, August 13, 2020
மாற்றமில்லாத ஏமாற்றம்!
Wednesday, August 12, 2020
நிஜமல்ல கதை...!
அந்த கிராமத்தில் யார் தவறு செய்தாலும் தமிழாசிரியர் மணி அய்யா, தட்டிக்கேட்க தயங்கமாட்டார். அவரிடம் படிக்கும் மாணவர்கள் தவறு செய்தால், தன் கையில் எப்பொழுதும் வைத்திருக்கும் பிரம்பால் அடி பின்னி எடுத்துவிடுவார். அதனால், அவர் மீது அனைவருக்கும் பயம்.
ஒரு மாணவனின் எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்கும் அபார திறமையும் அவரிடமுண்டு.
இப்போ, கொஞ்சம் வயதாகிவிட்டதால், அவருடைய கோபமும் கொஞ்சம் குறையத்தொடங்கியிருந்தது.
ஒருநாள் அவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு ரவுடியை பொதுமக்கள் பிடித்து கட்டிப்போட்டு சரமாரியாக அடித்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து அடிப்பதை நிறுத்தும்படி சைகை செய்துவிட்டு வந்த வழியே அவசரமாக திரும்பி சென்றுவிட்டார்.
உடனே, அங்கிருந்தவர்கள் தனது வீட்டிலுள்ள பிரம்பை எடுத்துவந்து அடிக்கப் போகிறார் என்று பேசிக் கொண்டனர். சற்று நேரத்தில் கையில் மாலையுடன் திரும்பிவந்தார் மணி அய்யா. "என்ன அய்யா, பிரம்பு எடுத்து வந்து அடிப்பீங்கன்னு நினைச்சோம். இப்படி மாலையோட வர்றீங்க?" என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர். அவர் பதில் எதுவும் சொல்லாமல், கூட்டத்தை விலக சொல்லிவிட்டு நேரே ரவுடியின் அருகில் சென்று அவனின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு தன் கையிலிருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். பிறகு, சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, "நீங்க எதிர்காலத்தில் இவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு வரிசையில் நின்று மாலைப்போடுவீர்கள். நான், இப்போதே செய்கிறேன்!" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.
Tuesday, August 11, 2020
கொரானா மீண்டும் எழுத வைத்துள்ளது!
Saturday, August 8, 2020
ஆவி பிடித்தலும் எனது அனுபவும்!
Monday, August 3, 2020
யார், உன் நண்பன்?
Sunday, August 2, 2020
நவீன பொம்மலாட்டக்காரர்கள்!
Saturday, August 1, 2020
தொலைபேசியும் நானும்...!
Wednesday, July 29, 2020
தெரியாத குற்றமும் தெரிந்த தண்டனையும்!
Tuesday, July 28, 2020
நம்பிக்கை தரும் ஓவியம்!
Saturday, July 25, 2020
தனி ஒருவன்!
நான், 1983-86 வருடத்தில் தஞ்சை சரபோஜி கல்லூரியில் பி.எஸ்சி படித்தபோது நடந்த சம்பவம்.
அப்போதெல்லாம், அந்தக் கல்லூரிக்கு சுற்றுபுற சுவர் கிடையாது.
பேராசிரியர்கள் உட்பட, தஞ்சாவூரிலிருந்து வாகனங்களில் வருபவர்கள், கல்லூரியின் முகப்பு வாயிலுக்கு செல்லாமல், குறுக்கு வழியில்தான் வருவார்கள். சைக்கிளில் வரும் எனது வகுப்பு தோழர் ஸ்ரீதர் மட்டும், முகப்பு வாயில் வழியாகத்தான் வருவார். இதனை வேடிக்தையாகத்தான் நண்பர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள்.
மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், அவர் மட்டும் அப்படி நடந்துக்கொண்ட விதம், அப்போது என்னிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.
இரண்டாமாண்டு படித்தபோதே போட்டித்தேர்வை எழுதி மத்திய அரசு வேலைக்கு சென்றுவிட்ட ஸ்ரீதர் - ஐ பற்றிய நினைவுகளில், தனிவொருவனாக முகப்பு வாயில் வழியாக வந்ததுதான் நினைவுக்கு வரும். வாழ்க்கையில் நான் ஓரளவுக்காவது நேர்மையை கடைப்பிடிப்பதற்கு ஸ்ரீதர் போன்ற முன்னோடிகள்தான் காரணம்.
அவர் கல்லூரியை விட்டு சென்ற பிறகு இதுநாள் வரை சந்திக்க முடியவில்லை. எஞ்சிய வாழ்நாளில் அவரை கண்டுபிடித்து, சந்தித்து நன்றி சொல்ல வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.
ஃபிளாஷ் பேக் முடித்து நிகழ்காலத்திற்கு வருவோம். நேற்றைய தினம், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவர் திரு சுப்புராமன் அவர்கள், ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை வெளிப்படையாக பொதுமக்களுக்கு சமூக ஊடகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இதுநாள் வரை இப்படி யவரும் வெளியிட்டதாக நான் அறிந்திருக்கவில்லை. மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், தன்னளவில் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் திரு சுப்புராமன் அவர்கள், எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழப்போகிறார் என்பதில் சந்தேகமில்லை...!
Thursday, July 23, 2020
சண்டையும் அதன் காரணமும்...!
Tuesday, July 21, 2020
நாம்தான் காரணம்...!
Sunday, July 19, 2020
நம்பிக்கை...!
Tuesday, July 14, 2020
மாஸ்க்கும் குல்லாவும்!
Saturday, July 11, 2020
கற்பனை கலந்த நிஜம்!
Sunday, July 5, 2020
கொரோனா அச்சமும் விளைவும்...!
Sunday, May 24, 2020
தாத்தாவின் நண்பர்!
Tuesday, April 28, 2020
கரோனா ஆயுதம்...!
கண்னெதிரே எதிரி வந்தான்
கம்பெடுத்தேன் ஓடவில்லை.
கத்தியை எடுத்தேன்
கலவரப்படவில்லை அவன்.
துப்பாக்கியை நீட்டினேன்
தூ என்றான்.
தும்மினேன்...
தூரமாக ஓடி மறைந்தான்!