பல வருடங்கள் வடிவேல் காமெடி மட்டுமே பார்த்து வந்த நமக்கு YouTube - ல் வரும் தனிநபர் வீடியோக்கள் இப்போது பலருக்கும் பொழுது போக்காக அமைந்துவிட்டது. அது போன்ற வீடியோக்களை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அதிகம் கிடைப்பதில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன், 'எனது வீட்டம்மா' ஒரு YouTube வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்த பொழுது, ஒரு இளைஞன் எளிய மேக்கப்போடு தனது உடல் மொழி மூலமாக பல்வேறு பாத்திரங்களாக மாறியிருந்தார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு பிரமிப்பாக இருந்தது. கன்னியாகுமரி - ஐ பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேசும் மொழி வித்தியாசமாகவும், நம்மை ஈர்க்கும் வகையிலும் உள்ளது.
'நயன்தாரா ஆண்டி' 'தமன்னா ஆண்டி' என்று எளிய மொழியில் பேசி செய்யும் நகைச்சுவை நம்மை சிரிக்க வைக்கிறது. திரைத்துறையில் இவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இவரின் youtube முகவரி : https://youtube.com/@vlogzofrishab