Saturday, September 19, 2009

டாக்டர் YSR-ஒரு பாடம்



மறைந்த
ஆந்திர முதல்வர் நமக்கு பல பாடங்களை விட்டுச் சென்றிருக்கிறார், அவர் உண்மையில் மருத்துவப்பட்டம் பெற்ற டாக்டர் என்பது அவர் மறைந்த பின்னரே எனக்கு தெரியவந்தது. அவர் இந்த அளவுக்கு புகழ்ப் பெற்றவர் என்பதும் அவர் மறைந்த பின்னரே உணர்ந்தேன்.
நாம் இன்னமும் சினிமா நடிகர்கள் மட்டுமே கவர்ச்சியானவர்கள் என்று நம்புவதால்தான் விஜய், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர்களை நம்பி, நாமும் நம் தமிழ்நாடும் செல்வதாக ஊடகங்கள் கதை கட்டிக்கொண்டுள்ளது. கவர்ச்சி என்பது சினிமாவில் மட்டும்தான் என்றால் டாக்டர் YSR மறைந்த போது துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்டார்களே, அங்கே எங்கிருந்து வந்தது கவர்ச்சி (கவர்ச்சி என்றால் மனதை ஆக்கிரமிப்பது என்று பொருள் கொள்வோ ofம்) இதன் மூலம் நாம் அறிவது, மக்களுக்கு தொண்டாற்ற அழகிய முகம் தேவையில்லை , சாதாரண முகம் கொண்டவர்கள்கூட மக்களுக்கு தொண்டாற்றினால், அவர்களுக்கு மக்கள் ரசிகர்கலாகிவிடுவார்கள் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.
சரி, இனி என்ன செய்ய வேண்டும் நாம் என்ற கேள்வி எழலாம்...! நாம் கட்சி ஆரம்பிக்க முடியாது, நம்மிடம் பணமில்லை எனவே இளைஞர்கள், படித்தவர்கள், நல்லவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் நம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். அங்குள்ள தாதாக்கள், வாரிசுகள் இவர்களை மீறி நாம் என்ன செய்துவிட முடியும் என்று தயங்கக்கூடாது. நாம் ஒருவர் உள்ளேச் சென்று அங்குள்ள இருவரை நல்லவர்களாக மாற்றினால், நமது இலட்சியம் வெற்றி பெரும்.
நண்பர் சரத்பாபு மிக அதிகம் படித்தவர், எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனால், அவர் இனி செய்யவேண்டியது அவரும் அவர் நண்பர்களும்(டாக்டர் YSR பாணியில்) தன்னை ஓர் அரசியல் கட்சியில் இணைத்துக்கொண்டு அந்த கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நல்லது செய்வதற்கு சுழ்ச்சியைப் பயன்படுத்தலாம். நல்லவர்கள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment