Monday, November 8, 2010

நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

போர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க.
பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்னு கஸ்ட்டமர் திட்றது வேற கதை!

எனக்கு நகைச்சுவையாகப் பேசுவது ரொம்பப் பிடிக்கும். நகைச்சுவை என்பது பெரும்பகுதி மற்றவர்களை கிண்டல் கேலி செய்வதுதான்.
கௌண்டமணி செந்தில் காலம் முதல் வடிவேல் காலம் வரை ஒருவர் மற்றவரை அவமானப்படுவது(அடி, உதை) மட்டுமே நகைச்சுயாக ரசிக்கப்பட்டு வருகிறது.

நகைச்சுவையாகப் பேசுவதில் பல வகை உண்டு.
நம் அருகில் இல்லாதவரைக் கிண்டல் செய்து பேசுவது.
தன்னையே கிண்டல் செய்து கொள்வது.
எதிரில் உள்ளவரைக் கிண்டல் செய்து பேசுவது.

முதல் வகையில், சிலர் எப்போதும் அருகில் இல்லாதவரைப் பற்றியோ, அவர்களின் குடும்பத்தைப் பற்றியோ கிண்டல் செய்து பேசுவார்கள். கேட்டுக் கொண்டிருக்கும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அப்படி பேசுபவரை 'சிரிப்பாக பேசுவார்' என்று சர்ட்டிபிகேட் வேறு கொடுப்பார்கள்.

இரண்டாம் வகை தம்மைப் பற்றியோ தம் குடும்பத்தைப் பற்றியோ(பட்டிமன்ற நகைச்சுவை) கிண்டல் செய்து பேசுவது; இதையும் ரசித்து சிரிப்பார்கள்.

மூன்றாம் வகை இதுதான் அபாயகரமானது, தம் எதிரில் இருப்பவரைக் கிண்டல் செய்வது. இதைப் பெரும் பகுதியினர் ரசிப்பதில்லை(உண்மையாக நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் விதிவிலக்கு)
மற்றவர்களைக் கிண்டல் செய்து பேசுவதை ரசிப்பவர்கள். தாங்கள் கிண்டல் செய்யப்படும் பொழுது அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
இதனால் நட்பில் முறிவு கூட ஏற்படும் என்பது எனது அனுபவ உண்மை.

நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களை மகிழ்விக்க நினைத்தால், நம்மை நாமே கிண்டல் செய்து பேசுவது மட்டுமே நகைச்சுவையாக பேசுவதில் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி!

.

21 comments:

  1. “If you can't laugh at yourself, then who can you laugh at?”

    Tiger Woods quotes (American Golfer, b.1975)

    ReplyDelete
  2. நம்மை நாமே கிண்டல் செய்து நகைச்சுவையாக பேசுவதில் தப்பில்லை. ஆனால் அடுத்தவரை வைத்து நகைச்சுவையாக்குவது எப்போதுமே மனஸ்தாபத்தில் தான் முடியும். நல்லதொரு கருத்தினை பகிர்ந்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete
  3. // தன்னையே கிண்டல் செய்து கொள்வது. //

    என்னுடைய செலக்ஷனும் இதுதான்... முதல் ஆப்ஷனின் படி செய்தால் புறம் பேசுபவன் என்ற பெயரே மிஞ்சும்...

    ReplyDelete
  4. சிரிப்பை தரம் பிரித்து சொன்னது அருமை!

    ReplyDelete
  5. தன்னையே கேலி செய்து கொள்வது ரிஸ்க் இல்லாதது. நமக்கும் அடுத்தவங்க கிண்டல் செய்யும் முன் நாமே நம்மளை செஞ்சுகிட்டா கிண்டல் குறையும்:-)

    ReplyDelete
  6. சிரிப்புமூட்டிகள் பலவிதம். கவுண்டமணி-செந்தில் கூட்டணி திரையில் வெற்றிபெற்றதன் காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நகைச்சுவை என்று எடுத்துக்கொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை. எனக்கு எந்த ஆப்ஷனும் பிரச்சனை இல்லை ஒரு எல்லைக்குள் இருக்கும் வரை. எது எல்லை என்று அறிந்து சோக்கு அடிப்பவன் புத்திசாலி! இன்னும் நிறைய இருக்கு.. அப்புறம் பின்னூட்டம் பதிவாயிடும்... நல்ல பதிவு அ.அப்பா.. ;-)

    ReplyDelete
  7. நல்ல ஆய்வு அமைதி அப்பா. கடைசியாக சொன்னது மிகச் சரி.

    ReplyDelete
  8. //நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களை மகிழ்விக்க நினைத்தால், நம்மை நாமே கிண்டல் செய்து கொண்டால் மட்டுமே நமக்கு எந்தப் பிரச்சினையும்
    வராது.//

    வழி மொழிகிறேன்

    ReplyDelete
  9. உண்மை தான் சார். நமக்கு பொதுவாகவே நகைச்சுவை உணர்வு கம்மி. அதிலும் நம்மை கிண்டல் செய்தால் சற்று சீரியஸ் ஆகி விடுவோம். நண்பர்களிடம் பேசும் போது அரசியல் வாதிகள், சினிமா காரர்கள் போன்ற நாம் நேரில் பார்க்காத நபர்களை கிண்டல் செய்தால் தான் சிரிக்கலாம் போலும்

    ReplyDelete
  10. நல்லதொரு கருத்து

    ReplyDelete
  11. கரீட்டு பா

    நன்றி

    ReplyDelete
  12. neenga soldradhu 100% absolutely correct..... nice post

    ReplyDelete
  13. SARY MARAVALAI THUNPADUTHAMAL YESITHU PESUVATHU NAALATHU FRIEND

    ReplyDelete
  14. Be careful, whenver you make comedy about yourself, sometimes your personality may be gone down.
    rajan

    ReplyDelete
  15. //தாங்கள் கிண்டல் செய்யப்படும் பொழுது அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
    இதனால் நட்பில் முறிவு கூட ஏற்படும் என்பது எனது அனுபவ உண்மை// எனக்கும் அந்த அனுபவம் உண்டு

    ReplyDelete
  16. நகைச்சுவையாய் பேசவேண்டுமென்பதால்,
    கண்டபடி பேசாமல், கட்டுப்பாட்டோடு,
    கருத்துடன் பேசலாம். நம்மைப் பற்றியே
    பேசும்போது இதை கவனத்தில் கொள்ளல்
    அவசியம். மற்றவர்களை கிண்டல், கேலி
    செய்வதை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

    ReplyDelete
  17. ஆஹா நகைச்சுவைக்குள் ஒரு நகைச் சுவையா..???

    ReplyDelete
  18. இதில் கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. சில பின்னூட்டங்கள் தவறுதலாக/அறியாமல் அழித்து விட்டேன். மன்னிக்கவும்.

    ReplyDelete
  19. நகைச்சுவையாகப் பேசுபவர்களின் வேதனையும் வலியும் கூட அடுத்தவர்களுக்கு சமயத்தில் நகைச்சுவையகி விடுகிறது.

    Be careful, whenver you make comedy about yourself, sometimes your personality may be gone down.
    இது யாரோ அனானிமஸ் சொன்னது அதுவும் உண்மைதான்

    ReplyDelete
  20. //போர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க.
    பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்னு கஸ்ட்டமர் திட்றது வேற கதை!//

    //நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களை மகிழ்விக்க நினைத்தால், நம்மை நாமே கிண்டல் செய்து பேசுவது மட்டுமே நகைச்சுவையாக பேசுவதில் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி!//

    ஆரம்பமும இறுதியும் நீங்கள் சொல்ல வந்த கருத்துக்கு எடுத்துக்காட்டு. நன்று.

    -பா.ரவி, பூம்புகார்.

    ReplyDelete