திரு.தமிழருவி மணியன் அவர்கள் கொஞ்ச நாட்களாக அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். பல வருடங்களாக அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து நடுநிலையோடு அவர் எழுதி உள்ளதை, நடுநிலையோடு படித்ததால் வந்த சிந்தைனைதான் இங்கே பதிவாக வருகிறது.
பெரும்பகுதி நான் எழுதுவதெல்லாம் எனது அனுபவத்தில் கிடைத்தவைகள் மட்டுமே. இங்கேயும், என்னுடன் பிறந்தவர்கள், படித்தவர்கள், எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என்னையும் சேர்த்து பல வருடங்களாக எங்களின் செயல்கள் எப்படி உள்ளது என்று சிந்தித்தேன்.
1. எனது நண்பர் (பெயரைத் தவிர்த்துவிட்டேன்) அவரின் 13-வது வயதில், ஒரு வருடம் மட்டுமே அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதே சிந்தித்து பேசுவார். அவரின் நடையில் ஒரு கம்பீரம் தெரியும்.எல்லோரிடமும் மரியாதையாக பேசுவார். அந்த நண்பரை பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளராகச் சந்தித்தேன். அப்பொழுதும், நான் பார்த்த குணங்களுடன், பணியில் நேர்மையாகவும், சிறந்த மேலலாளராக பணியாற்றி வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.
மோசமான உதாரணங்களைச் சொன்னால், தேவையற்ற பிரச்சினைகள் வரும். அதனால், அவைகளைத் தவிர்க்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இப்போதைய குணம், பல ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்தக் குணம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
'விளையும் பயிர் முளையிலையே தெரியும்' 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' போன்ற வழக்கு மொழிகளையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அண்மையை அரசியல் சூழ்நிலையையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுதும், ஒருவர் தனது பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தோன்றுகிறது.
.
படங்கள் உதவி: கூகிள்