தேர்தல் குறித்தப் பதிவுகள் தவிர்க்க முடியாதவையே. நானும் எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். எனினும், எனக்குத் தோன்றுவதை இப்பொழுது பதிவு செய்துவிட்டால், தேர்தல் முடிவு வந்தப் பிறகு பெருமைப்பட்டுக் கொள்ளலாம்/ அசடுவழியலாம்.,
இன்றைய சூழ்நிலையில், நடுநிலையோடு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று சிந்தித்தால், வேட்பாளரின் செல்வாக்கு மட்டுமே வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் என்பது எனது எண்ணம். இதற்கு விளக்கம் கொடுத்தால் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.
இரண்டு பெரிய அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். உங்கள் தொகுதியில், இரண்டு அணி வேட்பாளர்களில் யார் நல்லவர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்தான் வெற்றிபெறுவார். எனவே, அதிக அளவில் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலுக்குப் பிறகு விரிவாக பார்ப்போம்.
.
சார் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க !! பணம், கூட்டணி பலம் இவை பொறுத்து தான் வெற்றி என்று ஆகி ரொம்ப நாளாச்சு சார்.
ReplyDeleteமோகன் குமார் said...
ReplyDeleteசார் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க//
ரொம்ப நன்றி சார். தேர்தல் முடிவு வரும் வரையாவது இப்படி சொல்லிக் கொள்ளலாமே சார். மே' 13 அன்று என்னுடைய கணிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
//எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள்//
ReplyDeleteதந்தை சொல்மிக்க மந்திரமில்லை...இருந்தாலும் (அமைதி) அப்பாவின் சொல்லில் திருத்தம் செய்ய விரும்புகிறேன்.
எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'கொஞ்சம் நல்லவர், கொஞ்சம் நேர்மையானவர், கொஞ்சம் சுயநலமில்லாமல் கொஞ்சம் மக்களுக்கு பாடுபடுபவர், கொஞ்சம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், கொஞ்சம் மனிதநேயமிக்கவர், கொஞ்சம் அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள் ...ஹி ஹி...
கனினி,முன்னாடிஉக்காந்தா,எதவேனும்னாலும் பதிவா போடலாம்னு போட்டுக்கொல்ல நெரயபேர் கிளம்பிட்டாங்கப்பா,போதும் வேணாம் அழுதுடுவேன்.
ReplyDeleteமுருகன் .பொ
ஆதி மனிதன் said...
ReplyDelete//தந்தை சொல்மிக்க மந்திரமில்லை... இருந்தாலும் (அமைதி) அப்பாவின் சொல்லில் திருத்தம் செய்ய விரும்புகிறேன்.//
உங்கள் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நன்றி.
மே' 13 அன்று இந்தப் பதிவு குறித்து பேசலாம். அது வரை பொறுமைக் காப்பதை தவிர வேறு வழியில்லை.
B.MURUGAN said... கனினி,முன்னாடிஉக்காந்தா,எதவேனும்னாலும் பதிவா போடலாம்னு போட்டுக்கொல்ல நெரயபேர் கிளம்பிட்டாங்கப்பா,போதும் வேணாம் அழுதுடுவேன்.//
ReplyDeleteநன்றி.
மே' 13 அன்று இந்தப் பதிவு குறித்து பேசலாம். அவசியம், தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் இந்தப் பதிவின் தொடர்ச்சியை படிக்க வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!
மோகன் குமார் சொல்லியிருப்பதே சரி என்றாலும் தங்கள் உள்மன ஆதங்கத்தை இப்பதிவிலே பார்க்கிறேன்.
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDelete//தங்கள் உள்மன ஆதங்கத்தை இப்பதிவிலே பார்க்கிறேன்//
நன்றி மேடம், நிச்சயம் மே' 13 அன்று இந்தப் பதிவு குறித்து பேசலாம். தேர்தல் முடிவு வெளிவரும் நாளில், அவசியம் பிளாக் பக்கம் வந்து, இந்தப் பதிவின் தொடர்ச்சியை பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!
சோக்கு..... சோக்கு
ReplyDeleteநீங்க குறிப்பிட்ட பண்புகள் எந்த வேட்பாளரிடமும் இருக்க போவது இல்லை,அதனால ஒட்டு போடுவதற்கு பதிலா "o" போடவேண்டியதுதான்
ReplyDeleteI agreed with your view-points
ReplyDeletePl vote an Educated Independant candidate in ur assembly constituency!
This comment has been removed by the author.
ReplyDeleteதேர்தல் தொடர்பான எனது மற்றொரு பதிவு.
ReplyDeleteவிவசாயம் செய்வோம், வாருங்கள்...!
நன்றி.