தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த வியாதி அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அதற்கு, உதாரணம் தொலைக் காட்சித் தொடர்களில் முதல் நாள் முடிந்த நிகழ்வின் தொடர்ச்சியை அறிய மறுநாள் ஆவலுடன் காத்திரும் மக்களே சாட்சி.
முன்பெல்லாம், உறவினர்கள் வெளியூருக்குச் சென்றால் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்துவிட்டு, நம்முடைய வேலையைப் பார்ப்போம். பிறகு, ஒரு வாரம் கழித்து அவர்களிடமிருந்து 'நல்ல படியாக, ஊர் வந்து சேர்ந்தோம்' என்று ஒரு கடிதம் வரும். ஆனால், இன்று நிலைமை வேறு. வீட்டிலிருந்து அவர்கள் புறப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் நாம் அறிய விரும்புகிறோம். பஸ் கிடைத்ததா, வழியில் சாப்பிட்டார்களா, எப்பொழுது வீடு போய் சேர்ந்தார்கள்? போன்ற விபரங்களை அறிந்து கொள்ள நமது மனது ஆசைப்படுகிறது. அதனால், செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை.
மற்றவர்களின், ஒவ்வொரு அசைவையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். உதாரணமாக, நாம் தொடர்ந்து படித்து வரும் பிளாக்கர், ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ புதிய பதிவுகளிடவில்லை என்றால் அவருக்கு என்ன ஆச்சு? உடல் நலமில்லையோ அல்லது குடும்பத்தில் எவருக்கேனும் பிரச்சினையோ என்பது போன்ற எண்ணங்கள் வந்துவிடுகிறது.
எப்பொழுதோ, உறவினர் போட்டித் தேர்வு எழுதியிருப்பார். அவர் எழுதிய தேர்வை அவரே மறந்திருப்பார். ஆனால், நாம் நினைவு வைத்திருந்து முடிவு என்னாச்சு? என்று அறிய ஆவலோடு தொடர்பு கொள்வோம்.
இது, மற்றவர்கள் மீது உள்ள அக்கறையா அல்லது அடுத்தவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமா? என்று எனக்குப் புரியவில்லை.
சில நேரங்களில் அக்கறை;சில நேரங்களில் அதீத ஆர்வம்!
ReplyDeleteசில சமயங்களில் நமக்கே தொல்லை எனத் தோன்றிவிடுகிறது.... நிஜமாகவே வியாதி தானோ... :)
ReplyDeleteஅக்கறையாக இருந்தால்
ReplyDeleteஆரோக்கியமானதுதான்
சேதி அறிய என்றால்
சங்கடம் தான்
நாம் தொடர்ந்து படித்து வரும் பிளாக்கர், ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ புதிய பதிவுகளிடவில்லை என்றால் அவருக்கு என்ன ஆச்சு? உடல் நலமில்லையோ அல்லது குடும்பத்தில் எவருக்கேனும் பிரச்சினையோ என்பது போன்ற எண்ணங்கள் வந்துவிடுகிறது.
ReplyDeleteசரி தான் நண்பரே
சரியா சொன்னீங்க,
ReplyDeleteஇது ஒரு வகையில் மனவியாதி.
அக்கறை என்றால் சரியானது
ReplyDeleteஅடுத்தவர்கள் விசயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் என்றால் சரியானது அல்ல
விடுங்க சார். தொழில் நுட்ப வளர்ச்சியில் நல்லது, கேட்டது ரெண்டுமே இருக்கு விடுங்க சார். நாம தான் பாத்து நடந்துக்கணும்
ReplyDeleteவிடுங்க சார். தொழில் நுட்ப வளர்ச்சியில் நல்லது, கேட்டது ரெண்டுமே இருக்கு விடுங்க சார். நாம தான் பாத்து நடந்துக்கணும்
ReplyDelete//பஸ் கிடைத்ததா, வழியில் சாப்பிட்டார்களா, எப்பொழுது வீடு போய் சேர்ந்தார்கள்? போன்ற விபரங்களை//
ReplyDeleteஎன்னது ஆர்வமா? போங்க சார். அப்படிக் கூப்ப்ட்டுக் கேக்கலைன்னா, அதுக்கும் குத்தம் சொல்வாங்கங்க!!
அக்கறைக்கு கை கொடுக்கின்றன இக்கால வசதிகள். அதீத ஆர்வம் அநாவசியத் தொந்திரவாக முடியலாம். ஹுஸைனம்மா சொல்வதும் நடக்கிறது. பார்த்து நடக்க வேண்டியதுதான்:)!
ReplyDeleteமிகவும் யோசிக்க வேண்டிய விசயம்.
ReplyDeleteதொழில்நுட்பம் வளராத காலங்களிலும் பொதுவாக் நம்மை சார்ந்தவர்களை பின் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறோம் (வேலைக்கு போன கணவர், ஸ்கூலுக்கு போன பையன், மார்க்கெட்டுக்கு போன மனைவி, வெளியே போன அப்பா, அம்மா, ஊருக்கு செல்லும் சொந்தக்காரர்கள் குடும்பம்)
இப்போது முன்பை விட அதிகம் பேரை தெரிந்திருப்பதால் (தொலைக்காட்சி தொடரில் வருபவர் முதற்கொண்டு) அவர்களின் பிரச்சனைகளும் தெரிந்திருப்பதால் இயல்பாகவே ஆர்வமும், கவலையும் ஒரு சேர நம்மை ஆட்கொள்கிறது என நினைக்கிறேன்.
எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் என்னாவாகும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. இது எனக்கும் சேர்த்தே.
பெரும்பாலும் அக்கறையில் கேட்பவர்கள் தான்... சில வம்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
ReplyDeleteநமக்கு ரொம்ப பிடித்தவர்களை அக்கறையுடன் கவனிக்கிறோம் அவளவுதான்.சார்
ReplyDeleteபெரும்பாலும் அக்கறையாகத்தான் இருக்கும். சில தருணங்களில் தேவையற்று மூக்கை நீட்டும் அசிங்கமும்தான்.
ReplyDeleteஅக்கரையில் செய்தால் நலம்தான்..அதுவும் இந்த கலத்தில் அக்கரையா அது எங்கேயிருக்கு இக்கரையிலா அப்படிம்பாங்களாம்..
ReplyDeleteபொறுமை அவசியம் தேவை அப்படின்னு தலைப்பில் ஏன் எழுதியிருக்கு புரிஞ்சிக்கிட்டேன். கிட்ட தட்ட 15 நிமிடத்துக்குமேல தான் பிளாகே ஓப்பனானிச்சி அப்பாடா..
:)நல்ல கேள்வி ..
ReplyDeleteஉங்களுக்கு ஏன் இப்படித் தோணுச்சு..
அதைக்கொஞ்சம் சொல்லுங்க யாரு உங்களை அப்படி தொந்தரவு செய்தாங்க..( ஒரு அக்கறை தான்)
சென்னை பித்தன் said...
ReplyDelete//சில நேரங்களில் அக்கறை;சில நேரங்களில் அதீத ஆர்வம்!//
ஆமாம் சார். மிக்க நன்றி!
வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// சில சமயங்களில் நமக்கே தொல்லை எனத் தோன்றிவிடுகிறது.... நிஜமாகவே வியாதி தானோ... :)//
எனக்கு அப்படித் தோன்றியதால்தான் இப்படி ஒரு பதிவு.
நன்றி சார்.
A.R.ராஜகோபாலன் said...
ReplyDelete//அக்கறையாக இருந்தால்
ஆரோக்கியமானதுதான்
சேதி அறிய என்றால்
சங்கடம் தான்//
உண்மைதான் சார். நன்றி!