'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்காகச் சொன்னார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இங்கு, எனக்குத் தெரிந்த கூடா நட்பையும், நட்பிற்கு கூடாதவைகளையும் பார்ப்போம்.
இது நாள் வரை என்னுடைய அனுபவத்தில் நிகழ் காலத்தில் நமக்கு விரோதிகளாகத் தெரிபவர்கள், கடந்தக் காலத்தில் நமக்கு நண்பர்களாக இருந்திருப்பார்கள். பெரும்பகுதியான விரோதிகள் நண்பராக இருந்து, பிறகுதான் விரோதியாக மாறியிருப்பார்கள். அண்ணாமலை திரைப்படத்தில் கூட, நண்பர்கள்தான் எதிரியவதாக கதை அமைத்திருப்பார்கள். எல்லோரும் அந்தப் படத்தை ரசித்தனர்.பொதுவாக பலர் "அப்பாவின் நண்பர் எங்கள் அப்பாவை ஏமாற்றிவிட்டார்" என்று கூறுவதை கேட்டிருப்போம். நட்பை முதலீடாகக் கொண்டு செய்யும் எந்த செயலும் நட்பை அழித்துவிடும். இந்த மாதிரி நண்பர்கள் எதிரியாவதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். இருந்தும் ஓர் உதாரணம் மட்டும் இங்கே!
'கூடா நட்பு' பற்றி நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் கேட்டால் இன்னும் சிறப்பாக சொல்வார். இறுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். 'நட்பு என்பது நட்புக்காக மட்டும் இருக்க வேண்டும்'. அதில் எந்தவிதமான லாபத்தையும் எதிர்பார்க்க கூடாது.
என்னிடம் பலர், "உங்களுக்கு உள்ள பழக்கத்திற்கு, இந்த தொழிலை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும் " என்று் அணுகியுள்ளார்கள். அப்படி அவர்கள் செய்யச் சொன்னது, MLM என்கிற சங்கிலித் தொடர் தொழில். எப்பொழுது யார் வந்துக் கேட்டாலும் அவர்களுக்கு என்னுடைய பதில் ஒன்றுதான். அது, "நட்பை விலை பேச மாட்டேன்" என்பதாகும். அதனால், ஆள் பிடிக்கும் எந்த தொழிலிலும் இது வரை என்னை இணைத்துக் கொண்டது கிடையாது.
என்னிடம் பலர், "உங்களுக்கு உள்ள பழக்கத்திற்கு, இந்த தொழிலை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும் " என்று் அணுகியுள்ளார்கள். அப்படி அவர்கள் செய்யச் சொன்னது, MLM என்கிற சங்கிலித் தொடர் தொழில். எப்பொழுது யார் வந்துக் கேட்டாலும் அவர்களுக்கு என்னுடைய பதில் ஒன்றுதான். அது, "நட்பை விலை பேச மாட்டேன்" என்பதாகும். அதனால், ஆள் பிடிக்கும் எந்த தொழிலிலும் இது வரை என்னை இணைத்துக் கொண்டது கிடையாது.
இன்றைக்கு பரபரப்பாக பேசப்படும் பிரிந்த நட்பும், கூடா நட்புதான். அதாதவது நட்பை முதலீடாகக் கொண்டு செய்த செயல்கள் தான் பிரிவினைக்கு காரணம். எனவே, நட்பு நட்பாக மட்டும் இருக்கும்பொழுது 'கூடா நட்பு' என்ற வார்த்தை அவசியமில்லை. ஆனால், இவைகள் 'கூடாது நட்பிற்கு' என்று சிலவற்றை வேண்டுமானால் குறிப்பிட்டுச் சொல்லலாம்!
படம் உதவி: கூகிள்
நட்பைப் பற்றி நல்லதொரு அலசல்.
ReplyDeleteநன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். என் வாழ்க்கையிலேயே நிறைய அனுபவித்துவிட்டேன்.
ReplyDeleteசங்கிலி தொடர் வியாபாரத்தில் நீங்கள் மாட்டாதது மகிழ்ச்சி. என்னையும் அவ்வப்போது அதற்கு சிலர் அணுகுவர். மீ தி எஸ்கேப் :))
ReplyDeleteநான் கூட "தங்கள் பழக்க வழக்கத்திற்கு
ReplyDeleteஒரு ஏஜென்ஸி தொழில் சரியாக வரும் " என ஒரு நண்பர்
தொடர்புகொண்டபோது திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்
நிம்மதியாய் இருக்கிறேன்
அனைவருக்கும் பயனுள்ள கருத்தைச் சொல்லிப் போகும்
அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
த.ம3
நல்ல பதிவு. எதிரிகளை கண்டு நாம் கவலைப்பட தேவையில்லை ஆனால் நெருங்கிய கூடாநட்புகளை தான் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சில நட்புகளின் பொறாமைத்தீயால் நாம் அழிந்துவிட வாய்ப்பு உண்டு
ReplyDelete'கூடா நட்பு' என்ற வார்த்தை அவசியமில்லை. ஆனால், இவைகள் 'கூடாது நட்பிற்கு' என்று சிலவற்றை வேண்டுமானால் குறிப்பிட்டுச் சொல்லலாம்!
ReplyDeleteசரியாகச்சொன்னீர்கள்..
அன்போடு அழைக்கிறேன்..
இறப்பதை எதிர்பார்க்கிறோம்
அருமை!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//நட்பைப் பற்றி நல்லதொரு அலசல்.//
மிக்க நன்றி மேடம்.
Palaniappan Kandaswamy said...
ReplyDelete//நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி சார்.
மோகன் குமார் said...
ReplyDelete// சங்கிலி தொடர் வியாபாரத்தில் நீங்கள் மாட்டாதது மகிழ்ச்சி. என்னையும் அவ்வப்போது அதற்கு சிலர் அணுகுவர். மீ தி எஸ்கேப் :))//
ரொம்ப மகிழ்ச்சி சார். நன்றி.
Ramani said...
ReplyDelete//அனைவருக்கும் பயனுள்ள கருத்தைச் சொல்லிப் போகும் அருமையான பதிவு//
மிக்க நன்றி சார்.
Avargal Unmaigal said...
ReplyDelete// நல்ல பதிவு. //
மிக்க நன்றி.
அருமையா எழுதிருக்கீங்க. ரொம்ப கரெக்ட். பிஸினஸ் செய்றவங்களைப் பாத்து இதத்தான் ரொம்ப யோசிப்பேன்.
ReplyDeleteஎப்படி பிஸினஸ் செய்றதுக்கு நட்பு ஒரு தடங்கலோ, அதமாதிரி நண்பர்கள் பிஸினஸ்காரங்களாயிருந்தா, அவங்ககிட்ட பேரம் பேசவும் முடியாது.
ஹுஸைனம்மா said...
ReplyDelete//அருமையா எழுதிருக்கீங்க.//
மிக்க நன்றி மேடம்.
இந்தப் பதிவை 'தினமணி வலைப்பூ' பகுதியில் முதல் பக்கத்தில் வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு நன்றி.
ReplyDeleteரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க. நட்பு நட்புக்காக மட்டுமே இருக்கணும். அதை விட்டுட்டு, அந்த நட்பை சுய லாபத்துக்காக உபயோகப் படுத்த நினைச்சா நட்பே காணாமப் போயிடுதே..
ReplyDelete'நட்பு என்பது நட்புக்காக மட்டும் இருக்க வேண்டும்'. அதில் எந்தவிதமான லாபத்தையும் எதிர்பார்க்க கூடாது. சரியா சொன்னிங்க சார், அருமையான பதிவு சார் .
ReplyDeleteஉங்கள்;ல பதிவைப் பற்றி அதீதம் வலையோசையில் சொல்லி உள்ளோம்
ReplyDeletehttp://atheetham.com/story/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-8
ஆம், அதீதம் புத்தாண்டு இதழின் வலையோசையில்.. அமைதி அப்பா!
ReplyDeleteவரும் ஆண்டில் மேலும் சிறப்பாகத் தொடர அதீதம் வாழ்த்துகிறது!
ReplyDeleteஉண்மைதான் எங்கள் சொந்த அனுபவமே இருக்கிறது, இன்றும் கூட என் கணவரிடம் சொல்வேன், நிம்மதியா வேலை செய்து கொண்டு இருந்தோம். வீடு தேடி வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டார் உங்கள் நண்பர் என்று சொல்வேன். இந்த இழப்பில் இருந்து நங்கள் மீண்டு வர எட்டு வருடம் ஆகிவிட்டது.