இன்று, கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு வீரட் ஹோலி-ஐ தெரியாமல் இருக்காது. அவர், அண்மைக் காலமாக மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் இதுவரை இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அவரை யாருடனும் யாரும் ஒப்பிடவில்லை. ஆனால், இன்று அவரை சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். இப்பொழுதான், நானும் யார் இந்த வீரட் ஹோலி? அவர் எப்பொழுது கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார்? அவருடைய சாதனை என்னவென்று தேடிப் படிக்க ஆரம்பித்தேன். 2008 -ல் மாலேசியாவில் நடந்த பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை வென்ற அணியின் தலைவர் என்பதை அறிந்தேன். அந்தப் போட்டியில் டருவர் ஹோலி (TARUWAR KOHLI) என்பவர் விளையாண்டார் என்பதும், அவர் இப்பொழுதும் சிறாப்பாக விளையாண்டு வருகிறார் என்பதும், இந்த ஹோலியைப் பற்றி தேடும்பொழுது கிடைத்தக் கூடுதல் தகவல்!
வீரட் ஹோலி 2008 முதல் சர்வேதச கிரிக்கெட்டில் விளையாண்டு வந்தாலும், அவர் இந்தளவுக்கு உச்சத்திற்கு வருவார் என்று பெரும்பான்மையினரால் கணித்திருக்க முடியாது. இந்திய அணியிலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்பதே இதற்கு சான்று. அதே நேரத்தில், அவர் முதல் போட்டியில் ஒரு அதிரடி சதம் அடித்திருந்தால் எல்லோரது கவனத்தையும் பெற்றிருப்பார். பத்திரிகைகள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சும்மா விட்டுவைத்திருப்பார்களா? ரசிகர்களும் அவர் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்திருப்பார்கள். அனால், அதன் பிறகு இன்றைய உச்சத்தைத் தொட்டிருப்பாரா என்பது கேள்விக்குறி.
சரி, தலைப்புக்கு வருவோம். இப்பொழுது +2 தேர்வு முடிந்து மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைப் பெறவுள்ளது. அடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்தநிலையில், உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வாங்காமல் போகலாம் அல்லது உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாமல் போகலாம். அதற்காக அவர்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள். இன்றைக்கு சாதாரண நிலையில் உள்ள குழந்தைகள், எப்பொழுது வேண்டுமானாலும் சாதனை புரியலாம். அதுவரை பொறுமைக் காத்திடுங்கள். அவசரப்பட்டு அவர்களை ஊதாசினப்படுத்தி, ஒன்றுக்கும் உதவாமல் செய்து விடாதீர்கள். பொறுமையாக இருந்தால், நீங்கள் நினைத்த உயரத்தை உங்கள் பிள்ளைகளும் ஒருநாள் அடைவார்கள் என்பதே வீரட் ஹோலி நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். நம் பிள்ளைகள் இன்று இல்லாவிட்டாலும் இன்னொருநாள் சாதனைப் புரிவார்கள் என்று நம்புங்கள். இது எனக்கும் பொருந்தும். இப்பொழுது, எங்கள் வீட்டில் ஒரு 'வீரட் ஹோலி' இருப்பதை உணர்ந்ததால்தான் இந்தப் பதிவு!
.
தலைப்பு ‘பிள்ளைகளை கிரிக்கெட்டுக்கு தயார் செய்யச் சொல்லுகிறதோ’ என பொதுவில் எண்ண வைக்கலாம். ஆனால் அமைதி அப்பா அப்படி சொல்ல மாட்டார் என்பது தெரியும்:)!
ReplyDeleteபாடத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லும் நல்ல பகிர்வு.
/எண்ண வைக்கலாம்/ தோனி படம் வந்திருக்கும் நேரமல்லவா?
ReplyDelete/அவசரப்பட்டு அவர்களை ஊதாசினப்படுத்தி, ஒன்றுக்கும் உதவாமல் செய்து விடாதீர்கள். பொறுமையாக இருந்தால்,/ அவசியமான ஆலோசனை.
நல்ல பதிவு அமைதி அப்பா. அவரை பொதுவாய் விராட் கோலி என்பர். கோலி என்பது கோழியை நினைவூட்டும் என்பதால் தவரித்து விட்டீர்கள் போலும்.
ReplyDeleteபெற்றோர் தங்கள் ஆசைகளை பிள்ளை மேல் திணிக்காமல் அவர்கள் முடிவெடுக்க உதவினால் மட்டுமே போதும் !
//இப்பொழுது, எங்கள் வீட்டில் ஒரு 'வீரட் ஹோலி' இருப்பதை உணர்ந்ததால்தான் ....//
ஏன்.. என்ன ஆச்சு?
மிகச் சரியான நேரத்தல்
ReplyDeleteமிக அவசியமான பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வு...
ReplyDeleteநல்ல சிந்தனை .. கண்டிப்பாக பெற்றோர்கள் படிக்கவேண்டும்
ReplyDeleteநல்ல எடுத்துக்காட்டு பதிவு... இன்றைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு.
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDelete//தலைப்பு ‘பிள்ளைகளை கிரிக்கெட்டுக்கு தயார் செய்யச் சொல்லுகிறதோ’ என பொதுவில் எண்ண வைக்கலாம். ஆனால் அமைதி அப்பா அப்படி சொல்ல மாட்டார் என்பது தெரியும்:)!//
தங்கள் நம்பிக்கைக்கு நன்றி.தலைப்பு மற்றும் ஆரம்ப வரிகளை மட்டும் படித்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
ராமலக்ஷ்மி said...
ReplyDelete/எண்ண வைக்கலாம்/ தோனி படம் வந்திருக்கும் நேரமல்லவா?
/அவசரப்பட்டு அவர்களை ஊதாசினப்படுத்தி, ஒன்றுக்கும் உதவாமல் செய்து விடாதீர்கள். பொறுமையாக இருந்தால்,/ அவசியமான ஆலோசனை//
தங்களின் விரிவான கருத்துகளுக்கு நன்றி மேடம்.
மோகன் குமார் said...
ReplyDelete//நல்ல பதிவு அமைதி அப்பா. அவரை பொதுவாய் விராட் கோலி என்பர். கோலி என்பது கோழியை நினைவூட்டும் என்பதால் தவரித்து விட்டீர்கள் போலும்.//
கோலி அல்லது ஹோலி என்று எனக்குப் புரியவில்லை. சிலர் இப்படி 'வீரட் ஹோலி' ஏற்கனவே எழுதியிருந்தார்கள்.அதனால், அப்படியே எழுதிவிட்டேன்.
***************
//பெற்றோர் தங்கள் ஆசைகளை பிள்ளை மேல் திணிக்காமல் அவர்கள் முடிவெடுக்க உதவினால் மட்டுமே போதும் !//
நல்ல ஆலோசனை சார்!
**************
// //இப்பொழுது, எங்கள் வீட்டில் ஒரு 'வீரட் ஹோலி' இருப்பதை உணர்ந்ததால்தான் ....//
ஏன்.. என்ன ஆச்சு?//
அமைதி விரும்பி எந்தத் துறைக்கு சென்றாலும் அதில் பெயர் சொல்லும் அளவுக்கு வரவேண்டும் என்பது எனது கனவு அல்லது ஆசை!
அதன்படி 'அமைதி விரும்பி' நல்ல வழக்கறிஞராக முத்திரை பதிக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
'அவன் உடனடியாக சாதிக்கவில்லையே என்று நான் நினைக்க கூடாது. அதற்கான காலம் வரும்' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டதுதான் இந்தப் பதிவு.
இது மற்றவர்களுக்கும் பயன்பட்டால் மகிழ்ச்சியே!
******************
தங்களின் விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி சார்.
Ramani said...
ReplyDelete// மிகச் சரியான நேரத்தல்
மிக அவசியமான பதிவு //
மிக்க நன்றி சார்.
நல்ல பகிர்வு. எல்லா பெற்றோருக்கும் இந்த உணர்வு வருவது கடினம். கூட படிப்பவர்களுடன் கம்பேர் செய்து ஒரு மார்க் குறைந்தாலே சொல்லிச் சொல்லிக் காட்டும் காலம் இது. நம் குழந்தைகளிடம் பெற்றோராகிய நாமே நம்பிக்கை வைக்கா விட்டால் வேறு யார் வைப்பார்கள்!
ReplyDeleteபெற்றோர்கள் கவனிக்க வேண்டிய பதிவு
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteமிக அவசியமான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
Celeb Saree
For latest stills videos visit ..