Thursday, October 8, 2026

திருமதி P. வாசுகி அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐

சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு  மருத்துவமனையில் தலைமை மருந்தாளுநராகப் பணியாற்றி, 6.10.26 அன்று விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் திருமதி P. வாசுகி அவர்கள் என்கிற தகவல், அவருடன் நான் அறிமுகமான நாட்களை நினைவுக்கு கொண்டுவருகிறது.

1995-ல் ஆயக்காரன்புலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மாறுதலில் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, ஆயக்காரன்புலம் திரு. G. பன்னீர்செல்வம் அவர்களுடனும், முத்துப்பேட்டை திருமதி P. வாசுகி அவர்களுடனும் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.

அவர்கள் இருவரோடு சேர்ந்துப் பணியாற்றிப் பெற்ற அனுபவம், எனது பணிக்காலத்தில் மற்ற இடங்களில் பணியாற்றுபவர்களுடன் நட்போடு பழகுவதற்கும், செய்யும் வேலையை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பதற்கும் அடித்தளமாக அமைந்தது.

அன்றைய காலக்கட்டத்தில் பத்திரிகைகளுக்குத் துணுக்கு எழுதும் பழக்கம் என்னிடமிருந்தது. அதனைப் படித்து என்னை ஊக்கப்படுத்தியவர் திருமதி P. வாசுகி அவர்கள். 

எங்களது மகன் ‘அமைதி விரும்பி’-ஐ அவனது ஆறு வயதில் பார்த்தபோது, “அமைதியின் கண்கள் பிரகாசமாக இருக்கு, மிகச் சிறந்த இடத்தை அடைவான்!” என்று அன்று சொன்ன வார்த்தைகள், அமைதியின் முன்னேற்றத்தை நினைக்கும் போதெல்லாம் திருமதி P. வாசுகி அவர்களின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வரும்.

தான் மட்டுமல்ல, தன்னுடன் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையும் மனதினையும், நன்றி உணர்வையும் இயல்பிலேயே பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இவரது கணவர், ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் திரு. த. வீரையன் அவர்களும், அவர்களது மகளும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்குநரகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வரும் திருமதி எழில் சீனிவாசன், M.Sc. (Entomology), ICMR அவர்களும், எங்களது குடும்பத்தில் ஒருவராக இன்றளவும் நட்போடு பயணிப்பவர்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

திருமதி P. வாசுகி அவர்கள் ஓய்வுகால வாழ்க்கையை குடும்பத்தினர் மற்றும் தனது பேத்தி கல்கியுடனும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

திருமதி P. வாசுகி அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐

சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமை மருந்தாளுநராகப் பணியாற்றி, 6.10.26 அன்று விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் திருமதி P. வாசுகி அவர்கள் என்கிற தகவல், அவருடன் நான் அறிமுகமான நாட்களை நினைவுக்கு கொண்டுவருகிறது.

1995-ல் ஆயக்காரன்புலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மாறுதலில் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, ஆயக்காரன்புலம் திரு. G. பன்னீர்செல்வம் அவர்களுடனும், முத்துப்பேட்டை திருமதி P. வாசுகி அவர்களுடனும் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.

அவர்கள் இருவரோடு சேர்ந்துப் பணியாற்றிப் பெற்ற அனுபவம், எனது பணிக்காலத்தில் மற்ற இடங்களில் பணியாற்றுபவர்களுடன் நட்போடு பழகுவதற்கும், செய்யும் வேலையை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பதற்கும் அடித்தளமாக அமைந்தது.

அன்றைய காலக்கட்டத்தில் பத்திரிகைகளுக்குத் துணுக்கு எழுதும் பழக்கம் என்னிடமிருந்தது. அதனைப் படித்து என்னை ஊக்கப்படுத்தியவர் திருமதி P. வாசுகி அவர்கள். 

எங்களது மகன் ‘அமைதி விரும்பி’-ஐ அவனது ஆறு வயதில் பார்த்தபோது, “அமைதியின் கண்கள் பிரகாசமாக இருக்கு, மிகச் சிறந்த இடத்தை அடைவான்!” என்று அன்று சொன்ன வார்த்தைகள், அமைதியின் முன்னேற்றத்தை நினைக்கும் போதெல்லாம் திருமதி P. வாசுகி அவர்களின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வரும்.

தான் மட்டுமல்ல, தன்னுடன் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையும் இயல்பையும், நன்றி உணர்வையும் இயல்பிலேயே பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இவரது கணவர், ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் திரு. த. வீரையன் அவர்களும், அவர்களது மகளும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்குநரகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வரும் திருமதி எழில் சீனிவாசன், M.Sc. (Entomology), ICMR அவர்களும், எங்களது குடும்பத்தில் ஒருவராக இன்றளவும் நட்போடு பயணிப்பவர்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

திருமதி P. வாசுகி அவர்கள் ஓய்வுகால வாழ்க்கையை குடும்பத்தினர் மற்றும் தனது பேத்தி கல்கியுடனும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

Wednesday, October 7, 2026

கிராமம் டூ நகரம்!

1988-இல் D. Pharm. படித்து முடித்திருந்த காலத்தில் மருந்துக் கடை தொடங்குவது சம்பந்தமாக செம்போடை டாக்டர் சொக்கலிங்கம் அவர்களை சந்திக்க, நண்பர்களோடு சென்றிருந்தேன்.

அப்போது, அவருடன் மெலிந்த தோற்றத்தில் ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். அவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள்.

அவர் சிதம்பரத்தில் ‘எம்பில் மியூசிக்' படிப்பதாக எங்களிடம் தெரிவித்தார்.
நானோ, என்னுடன் வந்திருந்த நண்பர்களோ அவருடன் உரையாடலைத் தொடராமல், டாக்டரிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்துவிட்டோம்.

சரியாக இரண்டு வருடங்கள் கழித்து கருப்பம்புலம் ராமர் கோவில் திருவிழாவில் நாட்டுப்புற இசைக் கச்சேரி நடப்பதாக அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். மிகப்பெரிய கூட்டம். எங்கோ தூரத்திலிருந்து அந்தக் கச்சேரியைக் கேட்டு ரசித்தேன்.

கச்சேரியில் பாடியவர் செம்போடையில் டாக்டர் சொக்கலிங்கம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இளைஞர் தான் என்று அன்று என்னுடன் வந்திருந்த நண்பர்கள் எனக்கு நினைவூட்டினார்கள். ஆம், அவர்தான் டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்.
அதன் பிறகு சென்னையில் என்னுடைய ஊரை விசாரிக்கும் நண்பர்கள், வேதாரண்யம் என்றவுடன் "புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் ஊரா?" என்று கேட்பார்கள். வேதாரண்யத்திற்கு அவர் ஓர் அடையாளமாக மாறிப் போனார்.

இன்று அவருக்கு தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை தமிழக அரசு வழங்கியுள்ள தகவல் அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் இந்தப் பதவியில் சிறப்பாகச் செயல்பட்டு, நமது பாரம்பரியக் கலைகள் மற்றும் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை.

அவருடைய பணி சிறப்பாக அமைய வாழ்த்துவோம் 💐💐💐 வாருங்கள்!
Pushpavanam Kuppusamy