Monday, May 9, 2011

+2 தேர்வு முடிவு - அடுத்து என்ன செய்ய வேண்டும்?!

இது ஒரு அவசரப் பதிவு. இன்று தேர்வு முடிவு. நிச்சயம் 85 சதவிகிதத்திற்கு மேல்தான் வெற்றி சதவிகிதம் இருக்கும். ஆனால், 85 சதவிகித குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவுமா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால், தேர்ச்சி மட்டும் பார்த்து சந்தோஷப்படுவது அந்தக்காலம். என்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வு எண் பத்திரிகையில் வந்ததும் துள்ளிக் குதித்தேன். பத்தாம் வகுப்பை பாஸ் செய்வது என்பது அவ்வளவு பெரிய விஷயம்.

இன்று மதிப்பெண்ணைப் பார்த்து சந்தோஷப் படுகிறோம். இன்று பலருக்கு எதிர் பார்த்த மதிப்பெண் வராமல் போகலாம். அதற்காக மனமொடிந்து விடக்கூடாது. இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன. முதலில், விடைத்தாளின் செராக்ஸ் வாங்கிப் பார்க்க வேண்டும். பிறகு, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். இதையெல்லாம், ஏன் சொல்கிறேனென்றால் எனது உறவினர்களுக்கு நண்பர்களுக்கு நிகழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் இது.

எனக்கு, உறவினர்கள் நண்பர்களின் பிள்ளைகளுக்கு மதிப்பெண் பார்த்து சொல்லும் வேலையிருப்பதால். இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

விரிவாக பின்னூட்டத்தில் பார்ப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

19 comments:

  1. இன்று பலருக்கு எதிர் பார்த்த மதிப்பெண் வராமல் போகலாம். அதற்காக மனமொடிந்து விடக்கூடாது.


    ....very good advice.

    ReplyDelete
  2. நல்ல அறிவுரை. தேவையானதும் கூட....

    ReplyDelete
  3. //நிச்சயம் 85 சதவிகிதத்திற்கு மேல்தான் வெற்றி சதவிகிதம் இருக்கும்.//

    இதுதான் என்னோட கணிப்பு. வந்த முடிவு 85.9 சதவீதம்.சரியா சொல்லிட்டேன். அவ்வளவுதான்!

    ***************

    இன்று மதிப்பெண் பார்த்த வகையில் பத்தாம் வகுப்பில் சாதனைப் புரிந்த உறவினர் மற்றும் நண்பர்களின் பிள்ளைகள் இப்பொழுது தடுமாறி விட்டார்கள். இடையில், என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.

    இன்னும் வினாத்தாளின் செராக்ஸ் வாங்கிப் பார்த்த பிறகுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். முதலில் குறைந்த மதிப்பெண் பெற்று, மறு மதிப்பீட்டில் மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்களின் வரலாறும் உண்டு.ஆனால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட அன்று அந்த மாணவன் மற்றும் உறவினரின் மன நிலை எப்படி இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. அமைதியாக,ஒரு அப்பா மாதிரி,அறிவுரை சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  5. இன்றைய தினத்துக்கு அவசியமான பதிவு.

    ReplyDelete
  6. அமைதி அப்பா மட்டும் இல்லை
    பொறுப்புள்ள அப்பா என்பதையும்
    இந்தப் பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....

    ReplyDelete
  7. பொறுப்பான பதிவு. ;-)

    ReplyDelete
  8. மிகவும் தேவையான பதிவு.

    ReplyDelete
  9. அவசிய அற்புத ஆதரவுப் பதிவு
    ரொம்ப நன்றிப்பா.

    ReplyDelete
  10. அவசர பதிவு என்றாலும் உங்களின் கருத்து கணிப்பு சூப்பர்,

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் said...

    // நல்ல அறிவுரை. தேவையானதும் கூட....//

    நன்றி சார்.

    ReplyDelete
  12. Chitra said...
    //இன்று பலருக்கு எதிர் பார்த்த மதிப்பெண் வராமல் போகலாம். அதற்காக மனமொடிந்து விடக்கூடாது.
    ....very good advice.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  13. சென்னை பித்தன் said...
    //அமைதியாக,ஒரு அப்பா மாதிரி,அறிவுரை சொல்லியிருக்கீங்க!//

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  14. ராமலக்ஷ்மி said...
    //இன்றைய தினத்துக்கு அவசியமான பதிவு.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  15. Ramani said...

    //அமைதி அப்பா மட்டும் இல்லை
    பொறுப்புள்ள அப்பா என்பதையும்
    இந்தப் பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்//

    தங்களின் பாராட்டுக்கு நான் தகுதியானவனா?!

    ****************************

    //அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..//

    அதுக்கென்ன எழுதிட்டாப் போச்சு..., பயப்படாதீங்க, அவ்வளவு சீக்கிரம் எழுதமாட்டேன்:-)))!


    *********************

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  16. RVS said...

    // பொறுப்பான பதிவு. ;-)//

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  17. A.R.RAJAGOPALAN said...

    //அவசிய அற்புத ஆதரவுப் பதிவு
    ரொம்ப நன்றிப்பா.//

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  18. Lakshmi said...

    //மிகவும் தேவையான பதிவு.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  19. manivannan said...

    //அவசர பதிவு என்றாலும் உங்களின் கருத்து கணிப்பு சூப்பர்,//

    நன்றி சார்.

    ReplyDelete