எனது நண்பர், கடந்து ஞாயிற்றுக் கிழமை, சென்னை தேவி பாரடைசில் பில்லா 2 பார்க்க, தனது மகன், மகள், மனைவி மற்றும் அம்மா ஆகியோருக்கு, ஐந்து டிக்கெட் புக் செய்துவிட்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிறகுதான், தியேட்டர் நிர்வாகம் "சிறுவர்களை அனுமதிக்க முடியாது. இது பெரியவர்களுக்கான படம்" என்று சொல்லியிருக்கிறார்கள்.
"சரி, டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுங்கள்" என்று
கேட்டதற்கு
"விற்றது விற்றதுதான். நீங்கள் வேண்டுமானால் யாரிடமாவது
விற்றுக் கொள்ளுங்கள்" என்றார்களாம். கடைசியாக, பிள்ளைகள் மற்றும் அம்மாவை
வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கணவன் மனைவி மட்டும் படம் பார்த்துவிட்டு
வந்திருக்கிறார்கள். பலர் சிறுவர்களுடன் அங்குமிங்கும் அலைந்தது பரிதாபமாக இருந்ததாம்.
இப்பொழுது 'A' சர்டிபிகேட் படங்களை பார்ப்பதற்கு, சிறுவர்களை
கட்டாயம் அனுமதிக்க கூடாது என்று அரசு எச்சரிக்கை செய்திருப்பதாக
சொன்னார்களாம். இது நல்ல விஷயம்தான். ஆனால், விரைவில் ஒரு விடுமுறை
தினத்தில் நம்மைக் கேட்காமல் நம் வீட்டிற்கு வரப் போகிறதே? அப்பொழுது என்ன
செய்வது?!
.
.