தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசியவாதிகள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுவார்கள். நாமும் சும்மாயிருந்தா எப்படி? அதனால, என்னால முடிஞ்சத செய்யலாம்னு நினைச்சதன் விளைவு, இப்போ நீங்க படிக்கிறீங்க!
எனக்கு, இப்போ இருக்கிற அரசியல் கட்சிகளிடம் பெரிய வேறுபாடு தெரியவில்லை. கொடியைக் காட்டி இது எந்தக் கட்சியோட கொடின்னுக் கேட்டாலோ, கட்சிப் பெயரச்சொல்லி அதோட தலைவர் பெயரையோ அல்லது தலைவர் பெயரைச் சொல்லி கட்சிப் பெயரயோக் கேட்டா, இரண்டு மூன்று கட்சிகளைத் தவிர நிச்சயமா சொல்லத் தெரியாது. கொள்கைகள், செயல்பாடு இதில் எல்லாக்கட்சிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. இந்த நிலமையில எந்தக் கட்சிக்கு ஒட்டு போடுறது அப்படின்னு யோசிச்சப்ப நாம நினைக்கிறத யார் செய்யிறதா சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் நாம ஒட்டு போடணுமுன்னு முடிவு செஞ்சேன்.
அப்படி, அவங்க என்ன சொல்லனுமுன்னு இனி தொடர்ந்து நான் சொல்லலாமுன்னு இருக்கேன். அதுல ஒன்னு இது.
இலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.
அப்படி, அவங்க என்ன சொல்லனுமுன்னு இனி தொடர்ந்து நான் சொல்லலாமுன்னு இருக்கேன். அதுல ஒன்னு இது.
இலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.
இப்ப எங்கப் பார்த்தாலும் CCTV (கண்காணிப்பு கேமெரா) வந்துவிட்டது. விலையும் குறைச்சல். அதனால அரசு அலுவலகங்களில் குறிப்பாக ஆர்.டி.ஒ. ஆபீஸ், அதாங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பதிவாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையம், அரசு மருத்துவமனைகள், நியாயவிலைக்கடைகள், பள்ளிகள், மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் CCTV -யை பொருத்திவிட்டால் லஞ்சம், கையெழுத்துப் போட்டுவிட்டு ஊர் சுற்றுவது, புரோக்கர்கள் மற்றும் சமுக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
.
அமைதி அப்பா, அப்போ நீங்க இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்பது சந்தேகமாய் இருக்கிறதே:)!!!
ReplyDeleteaalosanai palamaaththaan irukku.... aanaal saripattu varumaa...? pakirvukku vaalththukkal
ReplyDelete//அமைதி அப்பா, அப்போ நீங்க இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்பது சந்தேகமாய் இருக்கிறதே:)!!!//
ReplyDeleteமனசாட்சிக்குப் பயந்த மனிதன், இப்பொழுது இயந்திரத்துக்கு மட்டுமே பயப்படுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது.
ReplyDelete.....வேதனையான உண்மை.
///மூவாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவரையே இப்படிக் கண்காணிக்கும் போது, லட்சக்கணக்கில் மக்கள் பணம் சம்பளமாக செலவிடப்படும் நிறுவனங்களை, ஏன் CCTV மூலம் கண்காணிக்க கூடாது?
ReplyDelete///
இந்த விஷயங்கள பேச மட்டும் தான் நல்லாயிருக்கும்.
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅமைதி அப்பா, அப்போ நீங்க இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்பது சந்தேகமாய் இருக்கிறதே:)!!!//
சோம்பேறித் தனத்தால, ஓட்டுப் போடாம இருந்தா ஜனநாயகக் கடமையை தவறிட்டேன்னு கெட்டப்பெயர் வரும். அதான் இப்படி!
மிக்க நன்றி மேடம்.
மதுரை சரவணன் said...
ReplyDeleteaalosanai palamaaththaan irukku.... aanaal saripattu varumaa...? pakirvukku vaalththukkal//
நிச்சயம் வரும் சார். நாம் கேட்கலன்னாலும், எதிர்காலத்தில் இது வரப்போற ஒன்றுதான்.
மிக்க நன்றி சரவணன் சார்.
THOPPITHOPPI said...
ReplyDelete//அமைதி அப்பா, அப்போ நீங்க இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்பது சந்தேகமாய் இருக்கிறதே:)!!!//
மிக்க நன்றி சார்.
Chitra said...
ReplyDeleteமனசாட்சிக்குப் பயந்த மனிதன், இப்பொழுது இயந்திரத்துக்கு மட்டுமே பயப்படுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது.
.....வேதனையான உண்மை.//
வேதனையை உண்மை என்று சரியா சொன்னீங்க..., நன்றி மேடம்.
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete///மூவாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவரையே இப்படிக் கண்காணிக்கும் போது, லட்சக்கணக்கில் மக்கள் பணம் சம்பளமாக செலவிடப்படும் நிறுவனங்களை, ஏன் CCTV மூலம் கண்காணிக்க கூடாது?
///
இந்த விஷயங்கள பேச மட்டும் தான் நல்லாயிருக்கும்.//
சும்மாதான். எனக்குத் தெரியும் இத நூறு பேருக்கு மேல படிக்கமாட்டாங்கன்னு. எங்கோ மூலையில் இருக்கும் ஒருவனின் மூளையில் இப்படித் தோன்றுகிறது என்பதை சொல்வதற்குத்தான்.
மற்றபடி இதுவெல்லாம் காலத்தின் கட்டாயம். ஒருநாள் நடக்கும்.
நன்றி சார்.
//மற்றபடி இதுவெல்லாம் காலத்தின் கட்டாயம். ஒருநாள் நடக்கும்.//
ReplyDeleteநம்பிக்கை ஒரே ஒருவரின் மனதில் ஏற்பட்டாலும் போதும். அதன் சக்தி அபிமிருதமானது. அலையாக அது எழும்பி இதை சாத்திப்படுத்தும். அந்த நாளுக்காகக் காத்திருப்போம். ஜனநாயகக் கடமையையும் ஆற்றி வைப்போம்.
சார் பணத்தை அங்கே வாங்காம ஹோட்டலில் வாங்குவாங்க. நம்ம ஆளுங்கலுக்கா இதிலெல்லாம் தப்பி வர தெரியாது?
ReplyDeleteநீங்க நினைப்பதுபோல் cctv வைத்தால் முடியாது சார், காரணம் லஞ்சம் வாங்குகிற அதிகாரிகளின் வீட்டிற்கே போய்விடுகிறது.இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடன் பிடிக்கும் போது அப்புறம் ஏன்
ReplyDeleteகோர்ட்? அடுத்த நிமிடமே வீட்டிற்கு அனுப்புவோம் என்று தேர்தல் வாக்குறிதி இருக்கும் கட்சிக்குத்தான்
என் வாக்கு.
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//மற்றபடி இதுவெல்லாம் காலத்தின் கட்டாயம். ஒருநாள் நடக்கும்.//
நம்பிக்கை ஒரே ஒருவரின் மனதில் ஏற்பட்டாலும் போதும். அதன் சக்தி அபிமிருதமானது. அலையாக அது எழும்பி இதை சாத்திப்படுத்தும். அந்த நாளுக்காகக் காத்திருப்போம். ஜனநாயகக் கடமையையும் ஆற்றி வைப்போம்.//
நிச்சயாமாக. நன்றி மேடம்.
மோகன் குமார் said...
ReplyDeleteசார் பணத்தை அங்கே வாங்காம ஹோட்டலில் வாங்குவாங்க. நம்ம ஆளுங்கலுக்கா இதிலெல்லாம் தப்பி வர தெரியாது?//
நாம ஒரு வழிக் கண்டு பிடிச்சா, எதிரி இன்னொரு வழிக் கண்டுப்பிடிப்பான். அதுக்காக விட்டுட முடியுமா சார்? எல்லோரும் முகத்த மூட பழக்கிக்குவாங்க, அப்படியாவது வெட்கப்படட்டுமே!
நன்றி சார்.
manivannan said...
ReplyDeleteநீங்க நினைப்பதுபோல் cctv வைத்தால் முடியாது சார், காரணம் லஞ்சம் வாங்குகிற அதிகாரிகளின் வீட்டிற்கே போய்விடுகிறது.இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடன் பிடிக்கும் போது அப்புறம் ஏன்
கோர்ட்? அடுத்த நிமிடமே வீட்டிற்கு அனுப்புவோம் என்று தேர்தல் வாக்குறுதி இருக்கும் கட்சிக்குத்தான்
என் வாக்கு.//
நல்ல முடிவு.
நன்றி சார்.
Attendance in office invoves coming and going also.
ReplyDeleteNot only sitting on chair.
Attendance is nowadays monitored through Biometic attendance system. Not through CCTV.
When employes comes to office, he should register his attendance by pressing the machine on which his fingure lines were already registered. Exact he enters will be known.
When he goes out of office, during office hours, he can go, but all those entering do press the machine to show when they enter. The employee movements will be monitored. Similarly, leaving office in the evening. No one can leave before the office hours. Everything will be known.
The purpose of CCTV is to see whether he is present at office in his place. But it cant monitor whether he actually dispose off his files; and just pass his time.
Bribes can be offered outside office too. Mostly for big officers it is done at 5 star hotel and guest houses; or at their houses.
How will you know all with your CCTV ?
Anonymous
ReplyDeleteto me
show details 1:46 PM (6 hours ago)
Anonymous has left a new comment on your post "யாருக்கு என் ஒட்டு!":
There is no principle in politics throughout India. Every party and every politician is opportunist, and has joined public life, for name, fame and money.
If you go for independent candidate, he may appear to be good today, but what he will become after tasting power, is easy to guess.
Further, as an independent MLA, he can be purchased by other party secretly for money. Outward independent, Inward having a party.
Indenpendent MLA cant do any help to the constituency. For that he need the support of the ruling party. So, he cant be helpful. He can help only a few individuals for some misc things.
So, voting independent is out of question.
The only thing left is to vote for a party and hope, the party in power will chart out needy and useself development programmes like drinking water, road, employment to youth, welfare programmes for weaker sections like women and children; and implement them.
வணக்கம் நண்பரே, எனது பதிவைப் படித்து பொறுமையாக இவ்வளவு பெரிய பின்னூட்டம் எழுதிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கடைசியாக தாங்கள் எழுதிய பகுதியை என்னால் வெளிட முடியாத நிலையில் உள்ளேன். மேலும் இது ஒரு கட்சி சார்பான வலைப்பூவாக கருதப்படும். அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து படித்து நிறை குறைகளை தெரிவியுங்கள்.