Saturday, July 26, 2014

'சதுரங்க வேட்டை'யும் நானும்!

சதுரங்க வேட்டை!

 
நேற்று நான் பார்த்த 'சதுரங்க வேட்டை'  படம்
இன்றைக்கு மனிதன் 'பணம்' என்கிற மூன்றெழுத்து சொல்லுக்கு எப்படி அடிமையாகிக் கிடக்கிறான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.

ஊரில் உள்ள ஏமாற்று வேலைகள் அனைத்தையும் விலாவாரியாக காட்டியவர்கள், 'சென்னைக்கு அருகே' திண்டிவனத்தில் உள்ள 'லே அவுட்' பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏனோ?


'நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுன்னு நினைக்கிறவன்தான் சேர்த்து வைப்பான்' போன்ற வசனங்கள் நச்!
 
படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்பொழுது, பணம் முக்கியமில்லை மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்று நமது மனதில் தோன்ற வைப்பதே இப்படத்தின் வெற்றி!


சமூகத்திற்கு செய்தி சொல்லும் படங்கள் ஒன்றும் வருவதில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்பொழும் உண்டு. அதற்கு பதில் சொல்லும் படமே சதுரங்க வேட்டை.

இனி நான்....
  
என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ 'எம்.எல்.எம்' நிறுவனத்திலிருந்து என்னை தொடர்பு கொண்டு சேர்ந்துக் கொள்ளுமாறு கட்டயாப் படுத்திய நண்பர்கள் பலர்! என்னிடம் அவர்கள் எல்லோரும் சொன்னது, "உங்களுக்கு நண்பர்கள் அதிகம். நன்றாகவும் பேசுகிறீர்கள். உங்களால் இந்த 'பிசினெஸ்' ஐ வெற்றிகரமாக செய்யமுடியும்!" என்பதே. நான் ஒரு நிரந்தரப் வேலையில் உள்ள பொழுது, எனக்கு எதற்கு இன்னொரு வேலை? என்கிற என்னுடைய கேள்விக்கு "உங்களுடைய தேவைக்கு, நீங்கள் சம்பாதிக்கும் பணம் பத்தாது" என்பார்கள்.

பணம் சம்பாதிப்பது பற்றி பேசும்பொழுது அண்மையில் ஒரு நண்பரிடம் சொன்னேன், "மூன்று வேலை சாப்பிடும் அளவுக்கு பொருளாதாரம் என்னிடம் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் 108 வரும், அரசாங்க மருத்துவமனை போதும் எனக்கு வைத்தியம் செய்ய. அதனால், பணம் சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை!" என்றேன்.

இதற்கு பொருள், எல்லோரும் சோம்பேறியாக இருக்க வேண்டுமென்று அல்ல. பேராசைப் படாமல், நம்மால் முடிந்த வேலைகளை செய்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, பிறருக்கும் உதவிகரமாக அன்புடன் வாழவேண்டும் என்பதே!

4 comments:

  1. தங்கள் வாழ்க்கை அனுபவத்தையும் முன் வைத்து அளித்திருக்கும் விமர்சனம் நன்று..

    ReplyDelete

  2. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. நல்ல பதிவு! அறிவுக் களஞ்சியம் பதிவையும் நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி.

    ReplyDelete