இன்றைய தினம் சென்னை, அரசு சட்டக் கல்லூரியில் BA LLB (5 Years) படிப்பதற்கு முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் செல்வி கே. வானதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
செல்வி வானதி என்னுடைய நண்பரும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் மேலக்காடு மறைந்த 'தாத்தா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு சு. முருகையன் அவர்களின் மகள் வழி பேத்தியாவார். மேலும், இயற்கை ஆர்வலர் திரு வானவன் - மாலதி தம்பதியரின் மூத்த மகளாவார்.
வானதியின் ஐந்தாவது வயதில் முதன் முதலாக சந்தித்தேன். அப்போதே, மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதோடு, பிறருக்கு யோசனைகளை அளிக்கக்கூடிய திறனுடையப் பெண்ணாக பார்த்தேன்.
பிறகு, எட்டாம் வகுப்பு படிக்கும்போது சந்தித்து பேசினேன். அப்போது, அவர் இயற்கை மருத்துவத்தின் மீது ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். இவர் இந்திய மருத்துவம் அல்லது விவசாயம் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
அதன்பிறகு, பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் படிக்கவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் மனவேதனையடைந்தேன்.
கடைசியாக +2 முடித்தப்பிறகு, சட்டக்கல்வி பயில வேண்டும் என்று வானதி விரும்பியதை அறிந்து ஒரு வழக்கறிஞரின் தந்தை என்கிற முறையில், மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தேன்.
இவருடைய திறமைக்கு ஏற்றது, சட்டக்கல்வி என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இவர் நன்றாக படித்து இந்த சமூகத்திற்கு நற்பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துவோம்!💐
No comments:
Post a Comment