Friday, October 2, 2009

அக்டோபர் -2 யும் நானும்...!


நான் சிறுவனாக இருந்தபோது அக்டோபர் 2 அன்று பள்ளிக்குச் செல்லவேண்டியதில்லை
என்பது மட்டும் தெரியும், வளர்ந்த பின்பு காந்திய கொள்கையில் ஈர்ப்பு
ஏற்பட்டு அதன் பொருட்டு சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றி வாழ முயற்சித்துக்
கொண்டுள்ளேன். என்னால் முழுமையாக காந்தியக் கொள்கைகளை பின்பற்ற
முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். இதில் மட்டுமாவது காந்திஜியை
(பொய் சொல்லாமல் இருக்க) பின்பற்ற வேண்டாமா?

எனது மகனுக்கு பெயர் வைக்க நினைத்தபோது "பெரியார்காந்தி" என்று பெயர்
வைக்க முடிவு செய்தேன்(எனக்கு பெரியார் கொள்கைகளும் பிடிக்கும்)
இருவருடைய கொள்கைகளிலும் துளி கூட சுயநலம் இருக்காது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.
அதன்படியே எந்தவித மத, ஜாதி அடையாளம் இல்லாமல் புதிய பெயர் வைக்க முடிவு செய்து சிந்தித்தபோது வந்ததுதான் "அமைதி விரும்பி" என்கிற பெயர்.

"அமைதி விரும்பி" என்று பெயர் வைத்ததோடு நான் முடித்துக்கொள்ள விரும்பாமல், இந்த சமுகத்தில் அமைதியை நிலைநாட்ட சிறிய அளவிலாவது அவனால் முடிய வேண்டும் என்ற நோக்கில், (அவனுக்கு மருத்துவக்கல்வி பயிலக்கூடிய தகுதி மதிப்பெண் கிடைத்தபோதும்)
மக்களுக்கு அமைதியை கொடுக்கவேண்டும் என்பதால், சட்டக்கல்வி பயில நான் அவனை சம்மதிக்க வைத்தேன். தற்போது சட்டக்கல்வி பயின்று வருகிறான். சுயனலமிலாத சிந்தனைகள் வெற்றியடையும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

காந்தியக் கொள்கைகள் என்வாழ்வில் ஏற்படுத்திய திருப்பங்கள் பல, அவற்றை பிறகொரு நாளில்
பார்ப்போம்...!








4 comments:

  1. Sir,

    I visited your website today. It is very good & interesting. Nice to know how you are bringing your son. By the way, I am also a lawyer & is working in Corporate companies and is not practising in courts.

    Glad that you have added my blog (veeduthirumbal) in the blogs that you follow. I shall read and give my comments about your blog when ever I have time.

    Pl. continue your good show.

    Regards

    A. Mohan Kumar
    http://veeduthirumbal.blogspot.com/

    ReplyDelete
  2. அமைதி அப்பா,

    இப்போது புரிந்து கொண்டேன் ஏன் நீங்கள் உங்கள் மகனை வக்கீலுக்குப் படிக்க வைத்தீர்கள் என. நன்றி.

    ReplyDelete
  3. ராமலக்ஷ்மி மேடம், நன்றி.

    ReplyDelete