கடந்த வாரம் வேதாரண்யம் அருகே செட்டிப்புலம் என்ற கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல முயன்ற தலித் சமூகத்தினரை ஒரு பிரிவினர் மறித்து வன்முறையில் இடுபட்டதாக செய்தித் தாள்களில் படித்தபோது மிகவும் வேதனையடைந்தேன்.
தலித் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுளுக்கு தீட்டு பட்டுவிடும். தலித் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுளின் சக்தி குறைந்துவிடும். என்பன போன்ற மூட நம்பிக்கைகள் இப்போது இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் திருப்பதியிலோ, மேல்மருவத்தூரிலோ,சபரிமலையிலோ சக்தி குறைந்து விட்டதாக செட்டிப்புலம் கிராம மக்கள் நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
பின் என்னதான் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு சென்றிக்கிறது என்று யோசித்தால் நமக்கு அடிமையாக, நமக்கு சேவகம் செய்துகொண்டிருந்தவன் இன்று கல்வி, பொருளாதாரம், நாகரீகம், சிந்தனை போன்றவற்றில் நம்மைவிட மேன்மையான நிலைக்கு சென்றுவிட்டனே என்று தலித்கள் மீது உள்ளூர பொறாமை வந்துவிட்டது என்பதுதான் உண்மையாகயிருக்கமுடியும்.
தலித்களைவிட இவர்கள் மேன்மையானவர்களாக காட்டிக்கொள்ளஅவர்களை ஆலயத்துக்குள் சென்று வழிபடாமல் தடுப்பது ஒன்றே வழியென்ற கேவலமான சிந்தனையை முதலில் கைவிட வேண்டும். உழைத்துமற்றவர்களும் முன்னேறி, தலித்களுடன் போட்டியிட வேண்டும்.
கேவலமான முறையில் நடந்து, தமிழ்நாட்டில் பெரியார், காந்தி போன்றோர் காட்டிச் சென்ற வழியில் நடக்கும் பலருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தாதீர். பெரியார் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கவிட்டால் மற்றைய ஜாதி ஹிந்துக்கள் நிலை என்னவாக இருந்திருக்கும் என்றும் சிந்திக்கவேண்டும். தற்பொழுது உள்ள அரசியல் தலைவர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு மக்கள் தொடர்ந்து கோதரர்களாக வாழ வழிகான வேண்டும். இதில் தமிழனாகிய நம் ஒவொருவருக்கும் பங்கு உள்ளது.
வேறு ஒரு வழியும் உள்ளது அதாவது அந்த ஊரோடு தொடர்பு வைத்துள்ள வெளியூர் உறவினர்கள், நண்பர்கள் அந்த மக்களிடம் மேன்மையான சிந்தனை வளர அவர்களுக்கு எடுத்துக்கு கூறி அவர்களின் அறியாமை விலகி மற்ற மக்களோடு மக்களாக சேர்ந்து வழ வழிவகை காணவேண்டும்.
நான் கூட முதலில் காவல் துறையின் உதவியோடு தலித்களை கோவிலுக்குள் அழைத்து செல்லாமல் இருக்கிறார்களே என்று வேதனையடைந்தேன். அது நிரந்தரமான தீர்வல்ல. அந்த மக்களின் அறிவுக்கண்ணை திறக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.
"எனக்கும் ஜாதிப் பேய் பிடித்திருந்தது, அனால் பெரியார் என்ற சாமியார் அதை அடித்துவிரட்டினார்" என்று எனது நண்பர் சொன்னதுதான் இங்கே எனக்கு ஞாபகம் வருகிறது.
தலித்கள் கடவுளை வணங்கும்போது மீண்டும் பெரியார் பிறக்கவேண்டும் என்பதையும் சேர்த்து வேண்டிக்கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.
தங்கள் கருத்தோடு நான் முழுதும் ஒத்து போகிறேன். மனிதரில் பேதங்கள் இருப்பது மிகவும் தவறே. என்ன செய்வது ..இது சிலருக்கு புரிவதில்லை.
ReplyDeleteமோகன் குமார்
thank you sir.
ReplyDeletekovilil same irukkirathu enpathae muda numpikkaithanae.
ReplyDeleteநன்றி பாலா சார்,
ReplyDeleteசார், நான் நாகைச் சேர்ந்தவன், தஞ்சை மாவட்டத்தில் பெரியாரின் தாக்கம் இருந்தும் இன்றும் கூட சாதி ரீதியிலான கொடுமைகள் நடந்தேறிவருவது கண்கூடுதான். காலம் அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது
ReplyDelete