கெட்டவன் அழிந்ததைக் குறிக்கும் மகிழ்ச்சியான பண்டிகைதான் தீபாவளி என்பதை நாம் அறிவோம்.
அப்படி என்றால் கெட்டவனே இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்காது.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நம்மோடுதான் நரகாசுரர்கள்( இனி வில்லன் என்று எழுதுகிறேன், இதுவரை தலைப்புக்காக) இருக்கிறார்கள்.
அண்மையில் கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றார்களே இவர்கள் யார்? இது போன்றவர்கள் எப்போதாவதுதான் செய்திகளில் அடிபடுவார்கள்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நம்மோடு பல வில்லன்கள் கலந்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
பெற்றோரை கவனிக்காமல் விடும் பிள்ளைகளும்,
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு மேலேயோ அல்லது கீழேயோ பணிபுரியும் சிலர், மற்றவரின் மனநிலையும் நியாமும் அறியாமல் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பவர்களும்.
தனக்கு ஒரு ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதற்காக தொன்னூற்றி ஒன்பது ரூபாயை வீணடிக்கும் ஊழல் பேர்வழிகளும் .
தனது வீட்டில் மிஞ்சியிருக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் பையில் கட்டி சாக்கடையில் வீசுபவர்களும்.
தனது வீட்டிள் உள்ள தென்னை மட்டை வீணாகி விடுகிறது என்பதற்காக மற்றவர்களைப் பற்றியும் சுற்றுசூழல் போன்றவற்றிலும் அக்கறையில்லாமல் கொல்லைப்புறம் அடுப்பை வைத்து புகைத்து, ஊரையே புகை மண்டலமாக மாற்றி வெந்நீர் போட்டுக் குளிப்பவர்களும்.
நடு வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நேரெதிரே நிற்கும்போது, இருக்கிற சிறு இடைவெளியிலும் ஆட்டோ அல்லது பைக்கை கொண்டு நிருத்துபவர்களும்.
இப்படி நம்மிடையே நிறைய வில்லன்கள் உள்ளார்கள்.
என்னால் பட்டியல் போடவும் முடியவில்லை, உங்களால் படிக்கவும் முடியாது. இந்த வில்லன்கள் திருந்தினால் மட்டுமே உண்மையான தீபாவளி, அதுவரை மற்றவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே!
இப்படி நம்மிடையே நிறைய வில்லன்கள் உள்ளார்கள்.
ReplyDeleteஎன்னால் பட்டியல் போடவும் முடியவில்லை, உங்களால் படிக்கவும் முடியாது. இந்த வில்லன்கள் திருந்தினால் மட்டுமே உண்மையான தீபாவளி, அதுவரை மற்றவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே!
...... உண்மை சுடுகிறது.
// நடு வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நேரெதிரே நிற்கும்போது, இருக்கிற சிறு இடைவெளியிலும் ஆட்டோ அல்லது பைக்கை கொண்டு நிருத்துபவர்களும். //
ReplyDeleteஎன் மனதை கடுமையாக பாதித்த விஷயங்களில் இதுவும் ஒன்று... சாதாரணமான விஷயம் போல தெரியும் ஆனால் ரணமான விஷயம்...
நல்லா இருக்குங்க.
ReplyDeleteஉண்மைதான் பட்டியல் போடவும் முடியாது. நம் ஆதங்கம் தீருமா என்றும் தெரியாது.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் அமைதி அப்பா!
கோவை சம்பவம் ஒரு மிகப்பெரிய வருத்தத்தையும் அதிர்ச்சியையும் என்னுள் ஏற்ப்படுத்தியது. நவீன நரகாசுரர்களை அழிக்க நிச்சயம் தெய்வம் துணை புரியும்.
ReplyDeleteஅ.அப்பா ! என்ன அந்நியன் ரேஞ்சுக்கு ஆரம்பிச்சுட்டீங்க..
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். ;-)
Chitra said...
ReplyDeleteஇப்படி நம்மிடையே நிறைய வில்லன்கள் உள்ளார்கள்.
என்னால் பட்டியல் போடவும் முடியவில்லை, உங்களால் படிக்கவும் முடியாது. இந்த வில்லன்கள் திருந்தினால் மட்டுமே உண்மையான தீபாவளி, அதுவரை மற்றவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே!
...... உண்மை சுடுகிறது.//
நன்றி மேடம்.
philosophy prabhakaran said...
ReplyDelete// நடு வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நேரெதிரே நிற்கும்போது, இருக்கிற சிறு இடைவெளியிலும் ஆட்டோ அல்லது பைக்கை கொண்டு நிருத்துபவர்களும். /
என் மனதை கடுமையாக பாதித்த விஷயங்களில் இதுவும் ஒன்று... சாதாரணமான விஷயம் போல தெரியும் ஆனால் ரணமான விஷயம்...//
எல்லோரையும் பாதிக்கும் விஷயம். சிறிது நேரம் பொறுமை காக்காமல், பலரை சங்கடப் படுத்தும் செயல்.
நன்றி சார்.
DrPKandaswamyPhD said...
ReplyDeleteநல்லா இருக்குங்க.//
நன்றிங்க ஐயா.
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஉண்மைதான் பட்டியல் போடவும் முடியாது. நம் ஆதங்கம் தீருமா என்றும் தெரியாது.
தீபாவளி வாழ்த்துக்கள் அமைதி அப்பா!//
நன்றி மேடம்.
RVS said...
ReplyDelete//கோவை சம்பவம் ஒரு மிகப்பெரிய வருத்தத்தையும் அதிர்ச்சியையும் என்னுள் ஏற்ப்படுத்தியது. நவீன நரகாசுரர்களை அழிக்க நிச்சயம் தெய்வம் துணை புரியும்.//
இந்த செய்தியை பத்திரிகையில் முழுமையாக படிக்க மனசு இடம் தரவில்லை. இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்கக் கூடாது என்பதே நமது எதிபார்ப்பு.
*****
//அ.அப்பா ! என்ன அந்நியன் ரேஞ்சுக்கு ஆரம்பிச்சுட்டீங்க..//
அப்படியெல்லாம் இல்லை சார். நான் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடாமல் இருக்க, இது உதவும் என்பதற்காகவே இந்த விதத்தில் எழுதுகிறேன்.
இது மற்றவர்களுக்கும் பயன்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.
*****
//என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். ;-)//
நன்றி சார்.
தீபாவளி என்றதும் நரகாசுரனும் வில்லன்களும் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது. எனக்கு இன்னும் கூட இனிப்புகளும் வெடியும் தான் .. :))
ReplyDeleteமோகன் குமார் said...
ReplyDeleteதீபாவளி என்றதும் நரகாசுரனும் வில்லன்களும் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது. எனக்கு இன்னும் கூட இனிப்புகளும் வெடியும் தான் .. :))//
உங்களுக்கு குழந்தை மனசு என்பது இதன் மூலம் புரிகிறது சார்:-))
நன்றி சார்.
தினம் தினம் இது போல பல நரகாசுரன்கள்/ வில்லன்களை நாம் சந்த்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இவர்களை அழிக்கவும் ஆளில்லை, கொண்டாடவும் முடிவதில்லை.
ReplyDeleteநல்ல பகிர்வு சார்.
//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteதினம் தினம் இது போல பல நரகாசுரன்கள்/ வில்லன்களை நாம் சந்த்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இவர்களை அழிக்கவும் ஆளில்லை, கொண்டாடவும் முடிவதில்லை.
நல்ல பகிர்வு சார்.//
இவர்கள் திருந்த வேண்டுமென்பதே நமது விருப்பம்.
நன்றி சார்.