Tuesday, November 16, 2010

வாழும் கடவுள்...!

18/11/2010 புதிய தலைமுறை இதழில் 30 -ம் பக்கத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதன் சுருக்கம் இதோ...

அவர், செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.


அந்தப் பத்திரிக்கையில், அவர் கைபேசி எண் கொடுக்கப் பட்டிருந்தது. அதற்கு நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். அதில், அவரை 'வாழும் கடவுள்' என்று குறிப்பிட்டிருந்தேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அதில், 'வணக்கம் நண்பரே, உங்கள் மெசேஜ் கிடைத்தது. நன்றி. நீங்கள் சொல்லி இருப்பது போல் நான் ஒன்றும் கடவுள் கிடையாது. ஒரு சாதாரண மனிதன் தான். என் மன திருப்திக்காக என்னால் முடிந்ததைச் செய்கிறேன், அவ்வளவுதான். நன்றியுடன் பி.கிருஷ்ணராஜ்' என்ற அவரின் பதில் மேலும், அவரைப் பற்றிய உயர்வான என்னத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டதால், இந்தப் பதிவு.


இன்றைக்கு அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வர விரும்புகிறவர்களும், ஒரு நோட்டு அல்லது பேனாவை குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு அதைப் போட்டோ எடுத்து பிளெக்ஸ் போர்டில் போட்டு 'கல்வி வள்ளல்' என்று பட்டம் போட்டுக்கொள்ளும் காலத்தில், ஒரு தனிமனிதர் இந்த மாதிரி கல்விப் பணிக்காக தனது சேமிப்பை பிரதிபலன் பாராது செலவழித்துவருபவர் 'வாழும் கடவுள்' தானே? நீங்களே சொல்லுங்கள்.

அவரின் கைபேசி எண்:9790531456. முடிந்தால் நீங்களும் இவரது சேவையைப் பாராட்டலாமே!

.

4 comments:

  1. இதில் கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பின்னூட்டங்கள் தவறுதலாக/அறியாமல் அழித்து விட்டேன். மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. nalla visyam amaithi appaa.. ivara eppadi paaratta irukka mudiyum???

    ReplyDelete
  3. //இதில் கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பின்னூட்டங்கள் தவறுதலாக/அறியாமல் அழித்து விட்டேன். மன்னிக்கவும்.//

    அமைதி அப்பா, பலருக்கும் அவசரத்தில் நிகழுகிற தவறுதான். தங்கள் ஜிமெயில் அக்கவுண்டில் மடலாக அப்பதில்கள் இருக்குமே. அதை காப்பி செய்து போடலாமே!

    ReplyDelete