கடந்த இரண்டு வருடங்களாக நானும் பதிவெழுதி வருகிறேன். இப்பொழுது எனக்கு வந்துள்ள சோர்வு, இதற்கு முன்பு வந்ததில்லை. எவ்வளவோ வேலைகள் இருந்த போதும் தொடர்சியாக எழுத வேண்டும் என்கிற ஒரு விதமான எண்ணம் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும். ஆனால், இப்பொழுது அது 'ஆப்சென்ட்' டாகி விட்டது. இதற்கு காரணமாக நான் நினைப்பது, கடந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களால் பிளாக் பக்கம் வராமல் 'விடுப்பில்' சென்றுவிட்டேன்.
பதிவெழுத முக்கியத் தகுதியே எதையாவது தொடர்ச்சியாக எழுத வேண்டும். இல்லையெனில், எழுதுவதிலிருந்து விலகி விடுவோம். பிரபலமான பதிவர்கள்கூட, சிறு இடைவெளிக்குப் பிறகு, எழுதுவதை தவிர்த்து விடுகிறார்கள் அல்லது மீண்டும் அவர்களால் பழைய மாதிரி முழு திறனோடு எழுத முடியாமல் சிரமப் படுவதை கூர்ந்து கவனித்தால் அறிந்துக் கொள்ளலாம்.
சரி, எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி ஒரு நிலை வருமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிவெழுதுவது என்பது சும்மா ஒரு பொழுது போக்குக்காக எழுதுவது அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்காக எழுதுவது. பதிவெழுதாமல் இருக்கிற காலத்தில் பொழுது போக்குவதற்கோ அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்கோ வேறு வழியைக் கண்டுப் பிடித்து விடுவோம். அதனால், பதிவெழுதும் ஆர்வம் குறைந்து விடுகிறது. பதிவு எழுதாமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் இழப்பு வந்துவிடப் போவதில்லை. இதுவே, இதில் வருமானம் கிடைப்பதாக இருந்தால் இப்படி ஆர்வம் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு.
இனி, பதிவுலக நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும். நானும் என்னென்னவோ எழுதிப் பார்க்கிறேன் முன்ன மாதிரி சிந்தனை(?!) வர மாட்டேங்குது:-))))!
இதுவும் பதிவருக்கான எனது அனுபவ ஆலோசனை...!
பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!
படம் உதவி: கூகிள்.
