நேரம் கிடைக்கும் பொழுது பதிவை எழுதி டிராப்ட்-ல் சேமித்து வைத்து, பிறகு ஒவ்வொன்றாகா வெளியிடுவது நாம் எல்லோரும் செய்வதுதான். இது ஏனெனில், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நமது பதிவுகள் வெளியாகவில்லை என்றால், நம்மை பதிவுலகிலிருந்து ஓரம் கட்டி வைத்துவிடுவார்கள். தினம் தோறும் புதிய பதிவர்கள் வரிசைக்கட்டி வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். 'தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டு தூங்க வேண்டும்' என்பார்கள். அப்படி ஒரு நிலை இன்றைய பதிவர்களுக்கு.
ஒரு சில பதிவர்கள் "என்னிடம் இரண்டு வருடத்திற்கு வெளியிட போதுமான பதிவுகள் டிராப்ட்-ல் உள்ளது" என்று சொல்வதையும் நான் அறிந்திருக்கிறேன். அப்படி என்றால் குறைந்த பட்சம் நூறு பதிவுகளாவது அவர் டிராப்ட்-ல் சேமித்து வைத்திருப்பார் என்று புரிந்துக் கொள்ளலாம். பெரும்பகுதியினர், குறைந்தது பத்து பதிவுகளாவது சேமித்து வைத்திருப்பார்கள். இது நல்ல பழக்கம்தான். ஆனால், இதில் வரும் பிரச்சினைக் குறித்து விளக்குவதே இந்தப் பதிவு.
மூளையைக் கசக்கி, கை வலிக்க தட்டச்சு செய்து டிராப்ட்-ல் சேமித்து வைத்துவிட்டு, அதனை வெளியிட நேரம் பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு நாம் சிரமப்பட்டு எழுதிய பதிவை சில நாட்கள் கழித்து படித்தால் அது நமக்கே பிடிக்காமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நாம் எழுதுவதில் முதிர்ச்சி அடைந்திருப்போம் அல்லது நாம் எழுதிய நேரத்தில் உள்ள சூழ்நிலை மாறியிருக்கும்.
உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். சில மாதங்களுக்கு முன், கலைஞர் அவர்கள் "கூடா நட்பு கேடாய் முடியம்" என்று சொன்னபோது 'கூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை!' என்ற தலைப்பில் பதிவு எழுத ஆரம்பித்தேன். நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்து விட்டேன். ஆனால், பதிவை வெளியிடாமல் அன்றைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழியில் பதிவை எழுதி வெளியிட்டு வந்தேன். இப்பொழுது அதைப் படித்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. இப்பொழுதான் அரசியலில் நட்பே(கூட்டணி) இல்லாமல் போய்விட்டதே. அதனால், அதே தலைப்பில் அரசியல் கலக்காமல், நட்புக் குறித்து மட்டும் எழுதி வெளியிட உள்ளேன்.
நீண்ட காலம் வெளியிடப்படாமல் பெட்டியில் முடங்கி கிடந்தப் படங்கள், காலம் கடந்து வெளியிடப்படும் பொழுது வெற்றிப் பெறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
இதனால் அறிய வருவது, எழுதிய பதிவுகளை உடனுக்குடன் வெளியிடுங்கள். இல்லையெனில், உங்கள் உழைப்பு வீணாகிப் போகும்!
.
படம் உதவி : கூகிள்.
நல்ல ஆலோசனையே:)! சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteஇந்த பிரச்சனை நமக்கில்லை.
ReplyDeleteநமக்கெல்லாம் ட்ராப்டில் வைக்கும் பழக்கமே இல்லை... உடனுக்குடனே எழுதி போஸ்ட் தான்..
நல்ல கருத்து
ReplyDeleteஆறு மாதங்களில் நம்முடைய வளர்ச்சியும்
பதிவுலகின்போக்கும் கூட
தலைகீழாக மாறி இருக்க வாய்ப்பு உண்டு
என்வே ஃபிரிட்ஜில் வைத்து சூடு பண்ணாது
அவ்வப்போது சமைப்பதே சாலச் சிறந்தது
இந்த பிரச்சனை நமக்கில்லை.
ReplyDeleteநமக்கெல்லாம் ட்ராப்டில் வைக்கும் பழக்கமே இல்லை... உடனுக்குடனே எழுதி போஸ்ட் தான்...
Ama naanum thamizhvaasi polaththaan. eppo ezhuthureno appo pakirvu.
S.Kumar.
http://vayalaan.blogspot.com
ராமலக்ஷ்மி said...
ReplyDelete// நல்ல ஆலோசனையே:)! சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.//
மிக்க நன்றி மேடம்.
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete//இந்த பிரச்சனை நமக்கில்லை.
நமக்கெல்லாம் ட்ராப்டில் வைக்கும் பழக்கமே இல்லை... உடனுக்குடனே எழுதி போஸ்ட் தான்..//
சுட சுட செய்தி போடுவதுதான் சரி. முன்னணி பதிவர்கள் இதைத்தான் செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
மிக்க நன்றி சார்.
Good Advise! But, evergreen matters kooda undu. athai mattum than naan draft il vaipen. Thanks for your kind advise sir!
ReplyDeleteநல்ல ஆலோசனை .நானும் அண்ணன் தமிழ்வாசியைப் போல் தான் உடனுக்கு உடன் பதிவை வெளியிடுவது.
ReplyDeleteநீங்கள் சொல்வது சரியே!
ReplyDeleteஆமாங்க!சுடச்சுட சாப்பிடுவது தான் நல்லது.பார்சலெல்லாம் பதிவுலகத்துக்கு சரிவராது சரியா சொன்னிங்க!
ReplyDeleteகணேஷ் அவர்கள் சொன்ன மாதிரி சில படங்கள் எப்ப வேணும்னாலும் பாக்கலாம்.அது போல சில பதிவுகளும்.
அதனால தரம் பிரிச்சு கையாண்டால் நிச்சயம் நல்ல பலனிருக்கும்!பகிர்வுக்கு நன்றி!
நீங்க சொல்வது ரொம்ப சரிதான் நல்ல ஆலோசனையும் கூட. நானும் பதிவை எழுதி ட்ராப்டில் தான் வச்சிருப்பேன்.இனி யோசிச்சுக்கனும்.
ReplyDeletehaa haa எனக்கு இந்த பிரச்சனை இல்லை, 234 பதிவு ரெடி ஆல் ஜோக்ஸ் தான்
ReplyDeleteஅந்த தப்பை நான் செய்வதில்லை...
ReplyDeleteவணக்கம்! உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.
ReplyDeleteRamani said...
ReplyDelete// நல்ல கருத்து//
மிக்க நன்றி சார்.
// ஃபிரிட்ஜில் வைத்து சூடு பண்ணாது
அவ்வப்போது சமைப்பதே சாலச் சிறந்தது//
ஆமாம் சார், நன்றி.
//90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a said...
ReplyDeleteஇந்த பிரச்சனை நமக்கில்லை.
நமக்கெல்லாம் ட்ராப்டில் வைக்கும் பழக்கமே இல்லை... உடனுக்குடனே எழுதி போஸ்ட் தான்...
Ama naanum thamizhvaasi polaththaan. eppo ezhuthureno appo pakirvu.
S.Kumar.
http://vayalaan.blogspot.com//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
//
ReplyDeleteஇதனால் அறிய வருவது, எழுதிய பதிவுகளை உடனுக்குடன் வெளியிடுங்கள். இல்லையெனில், உங்கள் உழைப்பு வீணாகிப் போகும்!
//
உண்மைதான்
கணேஷ் said...
ReplyDelete// Good Advise! But, evergreen matters kooda undu. athai mattum than naan draft il vaipen. //
உண்மைதான்.அப்படி உள்ள பதிவுகளை வைக்கலாம்.
//Thanks for your kind advise sir!//
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார்.
தனிமரம் said...
ReplyDelete//நல்ல ஆலோசனை.//
மிக்க நன்றி சார்.
//நானும் அண்ணன் தமிழ்வாசியைப் போல் தான் உடனுக்கு உடன் பதிவை வெளியிடுவது.//
அண்ணன் எவ்வழியோ நாமும் அவ்வழி! நல்ல பாலிசி.
nalla pathivu
ReplyDeleteநான் shedulded-ல் தான் வைப்பேன்
அவசியமான பதிவுதான் நன்றி
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDelete// நீங்கள் சொல்வது சரியே!//
மிக்க நன்றி சார்.
கோகுல் said...
ReplyDelete//ஆமாங்க!சுடச்சுட சாப்பிடுவது தான் நல்லது.பசலெல்லாம் பதிவுலகத்துக்கு சரிவராது சரியா சொன்னிங்க!//
மிக்க நன்றி சார்.
Lakshmi said...
ReplyDelete//நீங்க சொல்வது ரொம்ப சரிதான் நல்ல ஆலோசனையும் கூட.//
மிக்க நன்றி அம்மா.
//நானும் பதிவை எழுதி ட்ராப்டில் தான் வச்சிருப்பேன்.இனி யோசிச்சுக்கனும்.//
கவனிச்சு போஸ்ட் பண்ணிட்டா பிரச்சினை இல்லை. நன்றி அம்மா.
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete///haa haa எனக்கு இந்த பிரச்சனை இல்லை, 234 பதிவு ரெடி ஆல் ஜோக்ஸ் தான்//
234 ஆ..., அதிர்ச்சியில பேச்சு வரல!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
suryajeeva said...
ReplyDelete//அந்த தப்பை நான் செய்வதில்லை...//
அப்படியா, நன்று.
வருகைக்கு நன்றி சார்.
தி.தமிழ் இளங்கோ said...
ReplyDelete// உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.//
எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து பகிர்ந்துக் கொண்டேன். அது எல்லோருக்கும் பயன் பட்டால் மிக்க மகிழ்ச்சி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ஷைலஜா said:
ReplyDelete//அவசியமான பதிவுதான் நன்றி //
nanri.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete##// //இதனால் அறிய வருவது, எழுதிய பதிவுகளை உடனுக்குடன் வெளியிடுங்கள். இல்லையெனில், உங்கள் உழைப்பு வீணாகிப் போகும்!//
உண்மைதான்//##
மிக்க நன்றி சார்.
This comment has been removed by the author.
ReplyDelete