Monday, October 18, 2010

இளைமையை மீட்டெடுக்க எளிய வழி!(40+)

நாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


கல்லூரியில் படித்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரியை எனது ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, மற்ற நண்பர்களின் முகவரியை மட்டும் எழுதி வைத்துக் கொண்டேன். காலப்போக்கில், வாழ்க்கைப் போராட்டத்தில் ஞாபகத்திலிருந்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரிகள் மறந்து போய்விட்டது. இப்பொழுது அவர்களைக் கண்டறிய பல வழிகளில் முயற்சி செய்தேன். என் ஞாபகத்தில் உள்ள ஊர் பெயரைக் கொண்டு, சிலருக்கு கடிதம் எழுதினேன். அதன் படி ஒரு நண்பரை கண்டறிந்தேன். அவர் மூலம் மற்றவரைப் பிடிக்கலாம் என்றால், அவரும் மற்றவர்களின் பெயரை மட்டும் சொல்கிறார். மற்றபடி ஒரு முன்னேற்றமும் இல்லை.


அண்மையில் தமிழக அரசு, என்னுடன் படித்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க உள்ளதை அறிந்தேன். இணையத்தில் பதிவு மூப்பு பட்டியலில் நண்பர்களின் பெயரைத்தேடினேன். அவர்களின் பெயர் இருந்ததும், அவர்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் பணி நியமன ஆணை வாங்க வரும் தேதியறிந்து, அங்கு சென்று நண்பர்களை மீட்டெடுத்தேன். அவர்கள் நான் அங்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தகவல் தொடர்பும் இல்லாமல், திடிரென்று நண்பர்களைச் சந்தித்ததில் என்னுடைய கல்லூரி நாட்களின்
நினைவுகளும், அந்த மனநிலையும் எனக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது.


இப்பொழுது எனக்குள் ஓர் இருபது வயது இளைஞன் இருப்பதாக உணர்கிறேன்.
நீங்களும், நீண்டநாள் சந்திக்காத உங்களுடைய 'நெருங்கிய' கல்லூரி தோழர்கள்/தோழிகளை சந்தித்து, புத்துணர்ச்சிப் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

.

40 comments:

  1. நல்லதொரு வழி. கல்லூரி நினைவுகள் நம்மை திரும்பவும் இளமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  2. Meeting our old friends really will make us very happy & feel energetic.

    ReplyDelete
  3. கலக்குங்க.... என்ஜாய்!

    ReplyDelete
  4. நன்று... தற்போதைய காலக்கட்டத்தில் இந்த அளவிற்கு சிரமப்பட்டு நண்பர்களை கண்டுபிடிக்க அவசியம் இருக்காது என்றே கருதுகிறேன்... ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர் எல்லாம் இருக்கிறதே...

    ReplyDelete
  5. இப்பல்லாம் நிறைய கல்லூரிகளிலேயே பழைய மாணவர் சந்திப்புகள் நடக்குதே..

    ReplyDelete
  6. வெங்கட் நாகராஜ் said...

    நல்லதொரு வழி. கல்லூரி நினைவுகள் நம்மை திரும்பவும் இளமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை.//

    நன்றி.

    ReplyDelete
  7. மோகன் குமார் said...

    Meeting our old friends really will make us very happy & feel energetic.//

    நன்றி.

    ReplyDelete
  8. Chitra said...

    கலக்குங்க.... என்ஜாய்!//

    நன்றி.

    ReplyDelete
  9. philosophy prabhakaran said...

    நன்று... தற்போதைய காலக்கட்டத்தில் இந்த அளவிற்கு சிரமப்பட்டு நண்பர்களை கண்டுபிடிக்க அவசியம் இருக்காது என்றே கருதுகிறேன்... ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர் எல்லாம் இருக்கிறதே...//

    உண்மைதான். நன்றி.

    ReplyDelete
  10. அமைதிச்சாரல் said...

    இப்பல்லாம் நிறைய கல்லூரிகளிலேயே பழைய மாணவர் சந்திப்புகள் நடக்குதே..//

    உண்மைதான். நான் படித்தக் கல்லூரி விதிவிலக்கு.
    நன்றி.

    ReplyDelete
  11. ஆமா, நண்பர்களைச் சந்தித்தால் தனி உற்சாகம்தான்!!

    ReplyDelete
  12. பழைய நண்பர்களை சந்திப்பது என்பதே ஒரு இனிய நிகழ்வு தான்....! அங்கே பெரிய பதவி சின்ன பதவியில் இருப்பவர்கள் என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி நண்பர்கள் என்ற ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கும்.....!

    நல்லதொரு பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஹுஸைனம்மா said...

    ஆமா, நண்பர்களைச் சந்தித்தால் தனி உற்சாகம்தான்!!//

    ஆமாம் ஹுஸைனம்மா, நன்றி.

    ReplyDelete
  14. மனசாட்சியே நண்பன் said...

    அப்படியா//

    அப்படித்தான்...., நன்றி.

    ReplyDelete
  15. Mrs.Menagasathia said...

    nice,enjoy!!//

    நன்றி.

    ReplyDelete
  16. Kousalya said...

    பழைய நண்பர்களை சந்திப்பது என்பதே ஒரு இனிய நிகழ்வு தான்....! அங்கே பெரிய பதவி சின்ன பதவியில் இருப்பவர்கள் என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி நண்பர்கள் என்ற ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கும்.....!

    நல்லதொரு பகிர்வு. வாழ்த்துக்கள்.//

    உண்மைதான் மேடம். நன்றி.

    ReplyDelete
  17. பசுமை நிறைந்த நினைவுகள்..ஆகா..

    ReplyDelete
  18. நல்ல குறிப்பு

    ReplyDelete
  19. எஸ், எஸ்..............................அந்த நினைவுகளே நம்மை உற்சாகப் படுத்துதே.....

    ReplyDelete
  20. தாராபுரத்தான் said...

    பசுமை நிறைந்த நினைவுகள்..ஆகா..//

    மகிழ்ச்சியானது, நன்றி.

    ReplyDelete
  21. தியாவின் பேனா said...

    நல்ல குறிப்பு//

    நன்றி.

    ReplyDelete
  22. நாஞ்சில் மனோ said...

    எஸ், எஸ்..............................அந்த நினைவுகளே நம்மை உற்சாகப் படுத்துதே.....//

    ஆமாம், நன்றி.

    ReplyDelete
  23. why not primary school mates to feel even younger?

    ReplyDelete
  24. இளைமையில் தோழமை என்பதை விடவும் முதுமையில் தோழமை என்பது, வாழ்க்கையில் பல அனுபவங்களை அடைந்து சோர்ந்த பின், ஆசுவாசமாக உட்கார்ந்து அமைதியை அனுபவிப்பதற்கும் தொலைந்துபோன இளமை உணர்வுகளை சிறிதாவது மீட்டு எடுப்பதற்கும்தான்!
    அந்த சுகமான அமைதியை அனுபவிக்க என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  25. Anonymous said...

    why not primary school mates to feel even younger?//

    ............!? thank you.

    ReplyDelete
  26. மனோ சாமிநாதன் said...

    இளைமையில் தோழமை என்பதை விடவும் முதுமையில் தோழமை என்பது, வாழ்க்கையில் பல அனுபவங்களை அடைந்து சோர்ந்த பின், ஆசுவாசமாக உட்கார்ந்து அமைதியை அனுபவிப்பதற்கும் தொலைந்துபோன இளமை உணர்வுகளை சிறிதாவது மீட்டு எடுப்பதற்கும்தான்!
    அந்த சுகமான அமைதியை அனுபவிக்க என் வாழ்த்துக்கள்!!//

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  27. Thanks that is what I am doing now...using google etc to trace my friends..keep tracking

    ReplyDelete
  28. M.Kalidoss said...

    Thanks that is what I am doing now...using google etc to trace my friends..keep tracking//

    thank you!

    ReplyDelete
  29. I started to enter my response in Tamil text, when I submitted, it got aborted with some technical error notified by blogger. So, this thought of sharing my thoughts in English, sorry for not writing in Tamil.

    Anyway, I fully agree with your thoughts. That reminds me with our experience in our friends' circle.

    Way back in 1980s, we were group of 7 friends from Kumbakonam who were so friendly, cooperative, enthusiastic and we had common thoughts and approach to life. We also had separate friends' jointly and severally, outside this 7 circle.

    We had innate family-wise friendship and personal bond. Life went on, we had to separate due to making a living elsewhere, and now it's almost 25 years since we left our native place, and each are settled in different city or country.

    During our career path, some of us helped each other in our pursuit for employment in finding suitable openings with each other's help.

    Life went on, some of us severally had exchange of communication and interactive relationship, but not amongst all.

    Recently in 2009, after 25 years of our acquaintance, we all assembled with our family. It was nearly 15 friends coming together, with next of kin and spouse/s and we had a nice gathering and togetherness in Chennai.

    It was an awesome experience, recalling our past life, reliving the past for few hours during that dinner meeting, then we departed.

    We have somehow inculcated this friendliness to our next generation and I am sure they would pick from us, imbibe these good qualities and get some inspiration for their continued livelihood in maintaining their friendship and good togetherness with their respective friends.

    I thought of sharing this with you. Cheers.

    ReplyDelete
  30. Sivasankaran said...

    //I thought of sharing this with you. Cheers. //

    yes, i enjoyed.

    எனக்கு சரளமாக ஆங்கிலம் எழுதத் தெரியாது. தங்களுடைய அனுபவம், என்னுடைய அனுபவத்தோடு ஒத்து போவது மகிழ்ச்சி.

    எனது பதிவுகளுக்கு நெடிய பின்னூட்டம் போட்டு என்னைத் தொடர்ந்து இன்னும் நல்ல பதிவுகளை எழுதத் தூண்டும் உங்களுக்கு நன்றி.

    நான் பொழுது போக்குக்காக எழுதவில்லை. எனக்கு சரி எனப்படுவதையும் அனுபவத்தையும் மற்றவர்களுக்கு தெரிவிக்கவே விரும்புகிறேன்.

    எனக்கு இதில் ஒரு திருப்தி கிடைகிறது. எனது கருத்துக்கள் மற்றவர்கள் பார்வையில் தவறெனப் பட்டால் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

    தொடர்ந்து வாருங்கள், கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

    ReplyDelete
  31. ஆங்கிலத்தில் புலமை இருப்பினும், எனக்கு தமிழில் ஏதாவது எங்காவது கண்ணில் இன் விருப்பங்களுக்கேற்ற தகவல், பின்னூட்டங்கள், கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். எழுத்தாளர்களில் சுஜாதா, பாலகுமாரன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் எழுத்துக்கள் நான் தொடர்ந்து வாசிப்பதில் சில. இன்னும் நிறைய எழுத, ஆர்வம்தான். சந்திப்போம்.

    ReplyDelete
  32. I am Guruprasad here. I'm one of the 7 friends mentioned by Sivasankaran. I'm not all that net savvy, thus I'm writing in english and not in downloaded tamil font, any way thoughts are more important than language. I'm also one of those caught with 40+ syndrome. That syndrome comes after 40 becoz from 20 to 40/45 we run behind our career and we look back only after passing a certain phase in our job/profession, also the feeling that we are slowly growing old also adds to our feelings, thus we long to reach back to our past, any way life is like that. Let's reunite with our old friends atleast this way and rejoice our past.

    ReplyDelete
  33. Anonymous said...

    I am Guruprasad here. I'm one of the 7 friends mentioned by Sivasankaran. I'm not all that net savvy, thus I'm writing in english and not in downloaded tamil font, any way thoughts are more important than language. I'm also one of those caught with 40+ syndrome. That syndrome comes after 40 becoz from 20 to 40/45 we run behind our career and we look back only after passing a certain phase in our job/profession, also the feeling that we are slowly growing old also adds to our feelings, thus we long to reach back to our past, any way life is like that. Let's reunite with our old friends atleast this way and rejoice our past.//

    வணக்கம் சார், தாங்கள் இந்த பிளாக்-ஐ படித்து கருத்து சொன்னதற்கு நன்றி சார். நீங்களும் எழுதலாமே?

    ReplyDelete
  34. Thanks Guru, for your comments.

    நன்றிகள் பல, அமைதி அப்பா.

    ReplyDelete
  35. உங்களுடைய பல பதிவுகளையும் இன்று படித்தேன்.ரொம்ப நல்ல பதிவுகள்..

    ReplyDelete
  36. முதுமை இளமை ஆக மனதை இளமையிலேயே வைத்திருப்பதுதான். அதற்கு மலரும் நினைவுகளாக பழைய நண்பர்கள்..

    ReplyDelete