Saturday, December 5, 2009

நகைச்சுவை

நியுமராலஜிஸ்ட் வீட்டு வாசலில் இருவர்...!

"இந்த நியுமராலஜிஸ்ட் ரொம்பக் கெட்டிகாரர்"

"எப்படி சொல்லறீங்க?"

"என் பையன் ஒரே இடத்துல இடிச்சப் புளி மாதிரி உட்கார்ந்து இருந்தான்,
இவர்கிட்ட சொல்லி பேர் மாற்றி வச்ச பிறகு, இந்த பக்கம் அந்த பக்கம்ன்னு ஒடிகிட்டேயிருக்கான்"

"அப்படி என்னதான் பேர் வச்சார்?!"

"ராமதாசு"

Sunday, October 25, 2009

ஜாதியிம் தமிழக கோவிலும்...!

கடந்த வாரம் வேதாரண்யம் அருகே செட்டிப்புலம் என்ற கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல முயன்ற தலித் சமூகத்தினரை ஒரு பிரிவினர் மறித்து வன்முறையில் இடுபட்டதாக செய்தித் தாள்களில் படித்தபோது மிகவும் வேதனையடைந்தேன்.

தலித் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுளுக்கு தீட்டு பட்டுவிடும். தலித் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுளின் சக்தி குறைந்துவிடும். என்பன போன்ற மூட நம்பிக்கைகள் இப்போது இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் திருப்பதியிலோ, மேல்மருவத்தூரிலோ,சபரிமலையிலோ சக்தி குறைந்து விட்டதாக செட்டிப்புலம் கிராம மக்கள் நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

பின் என்னதான் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு சென்றிக்கிறது என்று யோசித்தால் நமக்கு அடிமையாக, நமக்கு சேவகம் செய்துகொண்டிருந்தவன் இன்று கல்வி, பொருளாதாரம், நாகரீகம், சிந்தனை போன்றவற்றில் நம்மைவிட மேன்மையான நிலைக்கு சென்றுவிட்டனே என்று தலித்கள் மீது உள்ளூர பொறாமை வந்துவிட்டது என்பதுதான் உண்மையாகயிருக்கமுடியும்.

தலித்களைவிட இவர்கள் மேன்மையானவர்களாக காட்டிக்கொள்ளஅவர்களை ஆலயத்துக்குள் சென்று வழிபடாமல் தடுப்பது ஒன்றே வழியென்ற கேவலமான சிந்தனையை முதலில் கைவிட வேண்டும். உழைத்துமற்றவர்களும் முன்னேறி, தலித்களுடன் போட்டியிட வேண்டும்.

கேவலமான முறையில் நடந்து, தமிழ்நாட்டில் பெரியார், காந்தி போன்றோர் காட்டிச் சென்ற வழியில் நடக்கும் பலருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தாதீர். பெரியார் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கவிட்டால் மற்றைய ஜாதி ஹிந்துக்கள் நிலை என்னவாக இருந்திருக்கும் என்றும் சிந்திக்கவேண்டும். தற்பொழுது உள்ள அரசியல் தலைவர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு மக்கள் தொடர்ந்து கோதரர்களாக வாழ வழிகான வேண்டும். இதில் தமிழனாகிய நம் ஒவொருவருக்கும் பங்கு உள்ளது.

வேறு ஒரு வழியும் உள்ளது அதாவது அந்த ஊரோடு தொடர்பு வைத்துள்ள வெளியூர் உறவினர்கள், நண்பர்கள் அந்த மக்களிடம் மேன்மையான சிந்தனை வளர அவர்களுக்கு எடுத்துக்கு கூறி அவர்களின் அறியாமை விலகி மற்ற மக்களோடு மக்களாக சேர்ந்து வழ வழிவகை காணவேண்டும்.

நான் கூட முதலில் காவல் துறையின் உதவியோடு தலித்களை கோவிலுக்குள் அழைத்து செல்லாமல் இருக்கிறார்களே என்று வேதனையடைந்தேன். அது நிரந்தரமான தீர்வல்ல. அந்த மக்களின் அறிவுக்கண்ணை திறக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.

"எனக்கும் ஜாதிப் பேய் பிடித்திருந்தது, அனால் பெரியார் என்ற சாமியார் அதை அடித்துவிரட்டினார்" என்று எனது நண்பர் சொன்னதுதான் இங்கே எனக்கு ஞாபகம் வருகிறது.

தலித்கள் கடவுளை வணங்கும்போது மீண்டும் பெரியார் பிறக்கவேண்டும் என்பதையும் சேர்த்து வேண்டிக்கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.

Wednesday, October 7, 2009

நகைச்சுவை

இரண்டு கல்லூரி நண்பர்கள்...!

"என்னோட காதலியின் முகத்தை நிலவோட ஒப்பிட்டு கவிதை
எழுதினது தப்ப போச்சு..!"

"ஏன், என்னாச்சு?"

"நிலவுல தண்ணி இருக்குமுன்னு விஞ்ஞானிகள் சொன்னதுலேர்ந்து
அவளோட முகம் ஈரமா இருக்கு....!"

.

Sunday, October 4, 2009

கவிதை

சம்பார்த்யம்
அடுத்த வீட்டு பையன்
அதிகம் சம்பாதிக்கிறான்
என்ற தந்தையிடம்
மகன் சொன்னான்
அவன் செலவு கணக்கில்
வரி வருகிறது
அந்த செலவை
நான்
செய்வதில்லையே...!

Friday, October 2, 2009

அக்டோபர் -2 யும் நானும்...!


நான் சிறுவனாக இருந்தபோது அக்டோபர் 2 அன்று பள்ளிக்குச் செல்லவேண்டியதில்லை
என்பது மட்டும் தெரியும், வளர்ந்த பின்பு காந்திய கொள்கையில் ஈர்ப்பு
ஏற்பட்டு அதன் பொருட்டு சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றி வாழ முயற்சித்துக்
கொண்டுள்ளேன். என்னால் முழுமையாக காந்தியக் கொள்கைகளை பின்பற்ற
முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். இதில் மட்டுமாவது காந்திஜியை
(பொய் சொல்லாமல் இருக்க) பின்பற்ற வேண்டாமா?

எனது மகனுக்கு பெயர் வைக்க நினைத்தபோது "பெரியார்காந்தி" என்று பெயர்
வைக்க முடிவு செய்தேன்(எனக்கு பெரியார் கொள்கைகளும் பிடிக்கும்)
இருவருடைய கொள்கைகளிலும் துளி கூட சுயநலம் இருக்காது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.
அதன்படியே எந்தவித மத, ஜாதி அடையாளம் இல்லாமல் புதிய பெயர் வைக்க முடிவு செய்து சிந்தித்தபோது வந்ததுதான் "அமைதி விரும்பி" என்கிற பெயர்.

"அமைதி விரும்பி" என்று பெயர் வைத்ததோடு நான் முடித்துக்கொள்ள விரும்பாமல், இந்த சமுகத்தில் அமைதியை நிலைநாட்ட சிறிய அளவிலாவது அவனால் முடிய வேண்டும் என்ற நோக்கில், (அவனுக்கு மருத்துவக்கல்வி பயிலக்கூடிய தகுதி மதிப்பெண் கிடைத்தபோதும்)
மக்களுக்கு அமைதியை கொடுக்கவேண்டும் என்பதால், சட்டக்கல்வி பயில நான் அவனை சம்மதிக்க வைத்தேன். தற்போது சட்டக்கல்வி பயின்று வருகிறான். சுயனலமிலாத சிந்தனைகள் வெற்றியடையும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

காந்தியக் கொள்கைகள் என்வாழ்வில் ஏற்படுத்திய திருப்பங்கள் பல, அவற்றை பிறகொரு நாளில்
பார்ப்போம்...!
Friday, September 25, 2009

மகிழ்ச்சியாக இருக்க...!

அடுத்தவர் வருமானத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே
நமக்கு மகிழ்ச்சி....!
.

Thursday, September 24, 2009

நகைச்சுவை


"ரஜினி, விஜய் இரண்டு பேருக்கும் அரசியலுக்கு வருவதில்
என்ன சிரமம்?"

"ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆண்டவன் சொல்லணும்,
விஜய் அரசியலுக்கு வருவதற்கு அவர் அப்பா சொல்லணும்...!".

நகைச்சுவை

மருத்துவரிடம்..., நோயாளியின் மனைவி...

"உட்கார்ந்த இடத்த விட்டு எழும்ப மாட்டேங்கிறார் டாக்டர்"

"இவரோட தொழில் என்ன?"

"எம்.ட்டி.சி-ல கண்டக்டரா இருக்கிறார் சார்.

Tuesday, September 22, 2009

காட்சியும் கருத்தும்...!ஏய்..! மனிதனே
என் வயிற்றைக் கழுவ
எனக்குத் தெரியும்.

உன் அண்ணனின்
வயிற்றைக் கழுவ
உன்னால் முடிந்ததைக் கொடு....!


Sunday, September 20, 2009

போராட்டம் பல விதம்

பால் உற்பத்தியாளர்களின் போராட்ட முறை...!


Saturday, September 19, 2009

டாக்டர் YSR-ஒரு பாடம்மறைந்த
ஆந்திர முதல்வர் நமக்கு பல பாடங்களை விட்டுச் சென்றிருக்கிறார், அவர் உண்மையில் மருத்துவப்பட்டம் பெற்ற டாக்டர் என்பது அவர் மறைந்த பின்னரே எனக்கு தெரியவந்தது. அவர் இந்த அளவுக்கு புகழ்ப் பெற்றவர் என்பதும் அவர் மறைந்த பின்னரே உணர்ந்தேன்.
நாம் இன்னமும் சினிமா நடிகர்கள் மட்டுமே கவர்ச்சியானவர்கள் என்று நம்புவதால்தான் விஜய், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர்களை நம்பி, நாமும் நம் தமிழ்நாடும் செல்வதாக ஊடகங்கள் கதை கட்டிக்கொண்டுள்ளது. கவர்ச்சி என்பது சினிமாவில் மட்டும்தான் என்றால் டாக்டர் YSR மறைந்த போது துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்டார்களே, அங்கே எங்கிருந்து வந்தது கவர்ச்சி (கவர்ச்சி என்றால் மனதை ஆக்கிரமிப்பது என்று பொருள் கொள்வோ ofம்) இதன் மூலம் நாம் அறிவது, மக்களுக்கு தொண்டாற்ற அழகிய முகம் தேவையில்லை , சாதாரண முகம் கொண்டவர்கள்கூட மக்களுக்கு தொண்டாற்றினால், அவர்களுக்கு மக்கள் ரசிகர்கலாகிவிடுவார்கள் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.
சரி, இனி என்ன செய்ய வேண்டும் நாம் என்ற கேள்வி எழலாம்...! நாம் கட்சி ஆரம்பிக்க முடியாது, நம்மிடம் பணமில்லை எனவே இளைஞர்கள், படித்தவர்கள், நல்லவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் நம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். அங்குள்ள தாதாக்கள், வாரிசுகள் இவர்களை மீறி நாம் என்ன செய்துவிட முடியும் என்று தயங்கக்கூடாது. நாம் ஒருவர் உள்ளேச் சென்று அங்குள்ள இருவரை நல்லவர்களாக மாற்றினால், நமது இலட்சியம் வெற்றி பெரும்.
நண்பர் சரத்பாபு மிக அதிகம் படித்தவர், எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனால், அவர் இனி செய்யவேண்டியது அவரும் அவர் நண்பர்களும்(டாக்டர் YSR பாணியில்) தன்னை ஓர் அரசியல் கட்சியில் இணைத்துக்கொண்டு அந்த கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நல்லது செய்வதற்கு சுழ்ச்சியைப் பயன்படுத்தலாம். நல்லவர்கள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்.

Thursday, September 17, 2009

அஞ்சலி...!
நேற்று மாலை சென்னையில் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் காலமானார்கள்,
அவரைப்பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளின் இறுதியில் வானொலியில்
இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வெகு பிரபலம், அவருடைய வசிகர குரலுக்கு நானும் அடிமை,
நீண்ட நாட்களுக்கு அவருடைய குரலை மட்டுமே அறிந்த நான் ஒரு வாரப் பத்திரிகையில்
அவருடைய புகைப்படத்தைப் பார்த்தேன், அந்த எளிய முகம் அன்று வரை எனது கற்பனையில்
இருந்த முகத்தோடு நீண்ட நாட்களுக்கு ஒத்துபோகவிலை, இது எனக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவமாக
இருக்க முடியாது. என்னை சிந்திக்க தூண்டியவர்களில் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களும்
ஒருவர், அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துவோம்...!

Wednesday, September 16, 2009

நகைச்சுவை

ஹோட்டலில் ...!
கேஷியர்: "சார், நீங்க பில் பே பண்ணிட்டீங்களா...?"
சா.வந்தவர்: "அமாம் சார்...!"
கேஷியர்: "இல்லையே...!"
சா.வந்தவர்: "நல்லா பாருங்க, நூறு ரூபா கள்ள நோட்டு ஒன்னு இருக்கும்...!"

********** **************** *************

தனியார் மருத்துவ கல்லூரியில்....!
"உங்க பையனுக்கு அப்படி என்ன திறமை இருக்கு டாக்டருக்கு படிக்க வைக்க விரும்புறீங்க...?"
"அவன் கையெழுத்து ரொம்ப கிறுக்கலா இருக்கும்...!"

******** ****** *******

மருத்துவ மனையில்..!
"எனக்கு வரவர ஞாபக மறதி அதிகமாகுது டாக்டர்...!"
"அப்ப முதல்ல எனக்கு பீஸை குடுங்க, நான் வங்க மறந்துடுவேன்...!"

********* ******** *******

Tuesday, September 15, 2009

அனுபவம் பெற்றுத்தந்த வெற்றி....!

சச்சின் அனுபவம் இந்தியாயுக்கு வெற்றியை தேடித்தந்தது...!

Sunday, September 13, 2009

பொறுமை அவசியம் தேவை....!

இனி நான் சிந்திப்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன், அதனால்
உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை....!