Monday, September 8, 2025

டாக்டர் மு. அபூர்வநிலா MBBS., DGO.

💐💐💐வாழ்த்துகள்💐💐💐

திருத்துறைப்பூண்டி, விட்டுக்கட்டி வள்ளுவர் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் 
திரு க. முருகானந்தம் மற்றும் ஆசிரியை திருமதி ஆ. மணிமலர் தம்பதியினரின் ஒரே வாரிசாகிய செல்வி மு. அபூர்வநிலா அவர்கள் 2022 -ஆம் ஆண்டு MBBS முடித்தவர், தொடர்ந்து மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவத்தில் (DGO) உயர் கல்வியையும் தற்போது முடித்துள்ளார். 

டாக்டர் மு. அபூர்வநிலா MBBS., DGO. அவர்கள் விரைவில் தனது மருத்துவ சேவையை வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் பயனடையும் வகையில் தொடங்கவுள்ளார் என்கிற நற்செய்தியை தங்களுடன் பகிர்ந்துக்கொள்வதோடு, தனது துறையில் முத்திரைப் பதித்து மக்கள் மருத்துவர் என்கிற பெயரையும் புகழையும் பெறவேண்டுமென்று வாழ்த்துவதோடு💐💐💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்.🙏🙏

மருத்துவர் எம்பிபிஎஸ் முடித்தபோது, நாம் எழுதிய வரலாற்றுடன் கூடிய வாழ்த்தைப்படிக்க இங்கே செல்லவும்



Friday, September 5, 2025

நல்லாசிரியர் திரு ச. அன்பழகன்!

பள்ளியில் படிக்கின்ற காலத்தில் தம்பியின் நண்பராக அறிமுகமான போதிலும், 1999 ஆம் வருடம், ஜூன் மாதம் நாகப்பட்டினம், நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் எங்களது மகன் அமைதி விரும்பி ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது, அங்கு தமிழாசிரியராக பணியாற்றியதன் காரணமாக திரு ச. அன்பழகன் அவர்கள் எங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இணைந்துவிட்டார். 

அமைதி விரும்பியின் முன்னேற்றத்தில் அவரின் பங்களிப்பும் உண்டு என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

அப்போதே, மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். நாங்கள் சென்னை வந்த பிறகு, அவரின் தொடர்பு குறைந்துவிட்டது. 

பின்நாட்களில் நாகப்பட்டினம் மாவட்டம், பஞ்சநதிக்குளம், விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகள் பற்றி நண்பர்கள், முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தபோது, அப்பள்ளியின் முதல்வராக நண்பர் 
திரு ச. அன்பழகன் அவர்கள் பணியாற்றுவதை
அறிந்து மகிழ்ந்தேன்.  

தனது தொடர் உழைப்பால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகள் என்று அனைவரிடத்திலும் நற்பெயர் பெற்றதன் விளைவாக, இன்றையதினம் தமிழக அரசின் நல்லாசியர் விருதைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றதோடு, எனது வாழ்த்துகளை💐💐💐 இங்கு தெரிவித்து, இனிவரும் காலத்தில் தொடர்ந்து பல சாதனைகளை அவர் நிகழ்த்த வேண்டுமென்று இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏