கருப்பம்புலத்தை சார்ந்தவன் என்பதை அறிந்த நண்பர்கள் மூலமாக, தனிப்பட்ட முறையில் வந்து கொண்டிருந்தது.
இதுநாள் வரை இந்த மருத்துவர் குறித்து நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. அவருடைய மறைவுக்கு பின்பு அவரைப் பற்றிய விபரங்கள் அறிந்தேன்.
இவரின் பெற்றோர்கள் நன்னிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், தந்தையாரின் பணி நிமித்தமாக வேதாரண்யம், தூய அந்தோணியார் மெட்ரிக் பள்ளியில் படித்தவர் என்பதோடு, படிப்பில் சிறந்தும் விளங்கியுள்ளார். மேலும், 60 ஆண்டுகளுக்கு மேலாக வேதாரண்யத்தில் 'சித்தார்த்தன் மெடிக்கல்ஸ்' என்கிற பெயரில் மருத்துவ சேவை செய்துவரும் குடும்பத்தினரின் வாரிசான திரு ஸ்ரீராம் என்பவரின் மனைவி என்பதையும் அறிந்துக்கொண்டேன்.
இவரிடம் சிகிச்சைப் பெற்ற மருத்துவப் பயனாளிகள் இவரின் சிறப்பாக கூறுவது, 'மிகவும் மனிதநேயம் மிக்கவர்' என்பதாகும்.
என்னற்ற நோயாளிகளின் இன்னலைப்போக்க வேண்டியவர், இளம்வயதில் இவ்வுலகை விட்டு சென்றது அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் வேதாரணியம் பகுதி மக்களுக்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
கடைசியாக, ஒட்டுநர்களுக்கு ஒரு வேண்டுகோள்: விவேகத்தைக் கூட்டுங்கள்; வேகத்தை குறையுங்கள்!🙏
No comments:
Post a Comment