வேதாரண்யம் வட்டம், கடினல்வயல் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் தம்பதியான திரு மா. வேம்பையன் -
திருமதி இரா. திலகா ஆகியோரின் மூத்த மகள் செல்வி வே. நிவேதிதா, அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று '+ 2' தேர்வில்
592/600 மதிப்பெண்கள் பெற்று நாகை மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார் என்கிற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று, இத்தகைய சாதனை புரிந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
பெயர் சொல்லும் தனியார் பள்ளியில் பயின்றால் மட்டுமே சாதனைகள் புரிய முடியும் என்கிற தோற்றத்தை உடைத்துள்ளதோடு, கிராமத்தில் உள்ள ஆசிரியர்களும் தன்னுடைய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் எடுப்பதற்குரிய பயற்சியை அளிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள் என்பதை உலகுக்கு தெரிவித்துள்ளது மாணவி நிவேதிதாவின் மதிப்பெண்கள். மேலும்,
வரும் காலத்தில் அரசுப் பள்ளிகளை நோக்கி பெற்றோரும், மாணவரும் நம்பிக்கையுடன் வருவார்கள் என்பதும் உறுதி!
அரசுப் பள்ளி, தமிழ் வழிக்கல்வி போன்றவைகள் குறித்து பேசியும் எழுதியும் வரும், ஆசிரியை திருமதி Uma Maheswari Gopal அவர்களுக்கும் மற்றும் A3 அமைப்பிற்கும் இந்த செய்தி மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை!
நிவேதிதா சிறப்பாக உயர் கல்விபெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் நற்பெயரைப்பெற்று தரவேண்டும் என்று வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏
No comments:
Post a Comment