நாமக்கல், குறிஞ்சி பள்ளியில் அமைதி விரும்பியின் நண்பராக 2004 -ஆம் ஆண்டு அறிமுகமாகியது முதல், தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் -யும், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எம்டி பொது மருத்துவமும் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் டிஎம் ருமட்டாலஜியும் முடித்து, தற்போது உதவி பேராசிரியராக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுவது வரை டாக்டர் பி. ரங்கபாஷ்யம் அவர்களைப் பற்றிய அனைத்து முன்னேற்றங்களையும் அமைதி விரும்பியின் வழியாகவும், டாக்டரிடமிருந்து நேரடியாகவும் அறிந்துள்ளேன்.
வேளாங்கண்ணி மற்றும் நாகையில் பணியாற்றிய போதும், கொரோனா காலகட்டத்திலும் மிகச் சிறப்பாக மருத்துவ சேவையை மேற்கொண்டு, நோயாளிகளின் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு கண்டதால், மக்களிடையே செல்வாக்கு பெற்றவர் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
அவர் தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரியிலும் மற்றும் தனியாகவும்
முடக்கு வாதம் (Rheumatoid Arthritis)
இளம்பிள்ளை வாதம் (Juvenile Arthritis)
முதுகெலும்பு வாதம் (Spondyloarthropathy)
மூட்டு தேய்மானம் (Osteoarthritis)
சிக்குன்குனியா ஆர்த்ரிடிஸ் (Chikungunya Arthritis)
சொரியாட்டிக் ஆர்த்ரிடிஸ் (Psoriatic Arthritis)
யூரிக் அமில வாதம் (Gouts)
எலும்புத் திண்மை குறைபாடு (Osteoporosis)
செஞ்சரும பல்லுறுப்பு நோய் (Systemic Lupus Erythematosus (SLE))
ஸ்க்லெரோடெர்மா (Scleroderma)
சோக்ரான் சின்றோம் (Sjogren Syndrome)
தசை அழற்சி (Myositis)
இரத்த நாள அழற்சி (Vasculitis)
ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia)
நோயெதிர்ப்பு குறைபாடு (Immunodeficiency)
போன்ற வியாதிகளுக்கு
மருத்துவம் பார்த்து வருகிறார் என்கிற தகவலை இங்கு பகிர்வதோடு
மருத்துவரையும், அவரது நோயாளிகளையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அவருடைய முகவரி :
Dr. பி. ரங்கபாஷ்யம் எம்டி. டிஎம்.
முடக்குவாதம், மூட்டு வலி, எலும்பு, மூட்டு தசை, இணைப்புத்திசு நோய் சிறப்பு மருத்துவர் நிபுணர்.
மாதா ஆர்த்தரைட்டிஸ் & ருமாட்டிக் சென்டர்.
3092-3093, வ.உ.சி. நகர், முதல ் தெரு, தஞ்சாவூர் - 613703.
90474 19155 & 63816 28625
No comments:
Post a Comment