Friday, May 21, 2010

எந்தப் படிப்பில் சேரலாம்?

ஒருவழியாக +2 வரை குழப்பமில்லாமல் பிள்ளைகளை படிக்க வைத்தாயிற்று, இனி என்ன படிக்க வைப்பது, எதை படிக்க வைத்தால் சீக்கிரம் வேலையும் சமூக அந்தஸ்த்தும் கிடைக்கும் என்று தெரியாமல், குழப்பத்தில் இன்றைய பெற்றோர் உள்ளனர்.

நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலில் இப்படி ஆரம்பிப்பார்கள் "பிள்ளையை எதுல சேர்க்கப் போறிங்க?" உடனே நாம், ஒரு படிப்பின் பேரைச் சொன்னால், நிச்சயமாக அவர்கள் அதற்கு அளிக்கும் பதில் . "எல்லோரும் ஏதேதோ படிக்க வைக்கிறாங்க, நீங்க இப்படி சொல்றீங்களே!" உடனே நாம் சொன்ன படிப்பின் பாதகங்களை பட்டியலிடுவார்கள். அதே நேரம் எல்லோரும் சேரும் பிரபல படிப்பாக இருந்தால், எதுவும் சொல்லமாட்டார்கள். மேலும் நமக்கு அவர்கள் சில யோசனைகளை வழங்குவார்கள். அவை பெரும்பாலும் நமது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளப்படாமலிருக்கும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனநிலையில பொறியியல் படிப்பை வெறுக்கும் சூழலே உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. இதற்கு காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வேலையில்லாமல் அவதிப் படுவதும் காரணமாக இருக்கலாம். இப்பொழுது கல்லூரியில் சேர உள்ளவர்கள், இன்ஜினியரிங் படிக்க விரும்பி +1 சேர்ந்தவர்கள் கூட, இடைப்பட்ட காலத்தில் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்கிற ஆசையை விட்டுவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த பல்வேறு ஊர்களைச் சார்ந்த, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிள்ளைகளின் மனநிலை அறிந்தே இதைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு குறிப்பிட்ட படிப்பு மட்டுமே சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்டக் கல்லூரி மட்டுமே சிறந்தது என்பதெல்லாம்
சரியானவையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தனியார் கல்லூரிகளில் படித்த மருத்துவர்களோ மற்ற துறையைச் சார்ந்தவர்களோ அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் தற்பொழுது நான் அறிந்த, சில துறையைச் சார்ந்தவர்கள் அந்த துறையில் சிறப்பாகவும், ஈடுபாட்டோடும் பணிபுரிபவர்களை, விசாரித்ததில் (குறிப்பாக மருத்துவர்கள் ) அவர்களில் பெரும் பகுதியினர், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே மிக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் படவேண்டாம். கிடைக்கின்ற கல்லூரியில், கிடைக்கின்ற பாடத்தில் சேர்ந்து படிப்பதே சிறப்பாக அமையும்.

எந்த துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும் அதை சிறப்பாக படித்தால் மட்டுமே எதிர் காலம் உண்டு.
நம்முடைய வாழ்வியல் உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட தொழிலை எல்லோரும் செய்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல,
அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி வெட்டுபவர் முதல் துணி தைப்பவர் வரை. பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை. ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை. எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.

எந்த குழப்பமும் அடையாமல் உங்களுடைய பொருளாதார சூழ்நிலை, பிள்ளையின் திறமை, ஆர்வம், போன்றவைகளை மனதில் கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுங்கள். படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் எந்த கௌரவத்துக்கும் இடம் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் சேர்கிறார்கள் அல்லது நமது பிள்ளையை புதிய படிப்பில் சேர்க்க வேண்டுமென்றோ (சில பெற்றோருக்கு தனது பிள்ளை யாரும் படிக்காத படிப்பை, படிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்) நினைக்காதீர்கள்.

பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி & மைக்ரோ பயாலஜி போன்ற இன்னும் சில படிப்புகளுக்கு வெறும் பட்டப் படிப்பு மட்டும் போதாது, முது நிலை மற்றும் டாக்டரேட் வரை படிக்க வேண்டும். அப்பொழுதான் வேலை கிடைக்கும். எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோ டெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.

முதலில் எல்லா படிப்பிற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள். பிறகு எது சரியென்று தோன்றுகிறதோ அதில் சேர்த்துவிடுங்கள். உங்களுக்கு பொருளாதார வசதியிருந்தால், சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன நிம்மதியும் அமைதியும் கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.

மாணவர்களுக்கு, உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

"ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

40 comments:

 1. //
  மாணவர்களுக்கு உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.///

  மிக சரி. சரியான நேரத்தில் சரியான பதிவு. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தேவையான நேரத்தில் அவசியமான பதிவு.

  //"ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்.
  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

  உங்கள் நண்பர் சொல்வதே சரி:)!

  ReplyDelete
 3. மிகவும் நல்ல பதிவு...

  ’’முதல் அரசியல்வாதி வரை. எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.’’

  ஆமங்க அவங் திறமைதான்...ரொம்ப படிக்காதவங்க கூட திறமயால் உயர்ந்து இருகாங்க...

  ’’’எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோ டெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.’’’


  ஆமாம் எங்க குடும்பத்திலும் 2பேர் இருக்காங்க.பின் சம்பந்தம் இல்லாத வேலையில் சேர்தார்கள்...

  ’’’சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன நிம்மதியும் அமைதியும் கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.’’’

  ஆசை இருக்கு வீசை இல்லயே!!!!!!!!!

  ReplyDelete
 4. நல்ல எண்ணத்துடன் எழுதப்பட்ட நல்ல பதிவு. நன்றி சார்

  ReplyDelete
 5. நல்ல பதிவு. இஞ்ஞினியரிங் படிப்பில் ஆர்வம் குறையவில்லை. கல்லூரிகள் பெருகிவிட்டது . அதனால் அதற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆசிரியர்கள் என்றும் சரியாக தான் இருப்பார்கள் நம் குறைகள் மறைக்கவே அவர்களை குறைகூறுகினஆறனர்.அதற்கு மும் துணைப்போகிறோம். நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்து தர வேண்டிய்து பெற்றோர் கையில் உள்ளது.
  நல்ல ஆலோசனைகள் வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. படிப்புகள் பெருகிவிட்டன. எப்படியாவது ஒரு படிப்பு படித்து ஒரு வேலைக்குப் போக வேண்டுமென்பதுதான் சாதாரண இளைஞனின் ஆசை. ஒரு நடுத்தர வர்க்க பெற்றோர் ஆசைப்படுவதும் அதுதான்.

  சரியான படிப்பு எது என்று என் போன்று ஆசிரியத்தொழிலில் இருந்து ரிடையர்டு ஆனவர்களினாலேயே சொல்ல முடியவில்லை.

  ReplyDelete
 7. LK said...

  //
  மாணவர்களுக்கு உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.///

  மிக சரி. சரியான நேரத்தில் சரியான பதிவு. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்//

  பெரும் பகுதியான மாணவர்கள் குறைகள் சொல்லிகிறார்கள். இது நமது கலாச்சாரமாகி விட்டது. மற்றவர்களை குறை சொல்பவர்கள் புத்திசாலியாக சித்தரிக்கப் படுவத்தின் விளைவு.

  ReplyDelete
 8. ராஜ நடராஜன் said...

  மைக்ரோபயாலஜி!//

  ஸ்பெல்லிங் சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

  ReplyDelete
 9. ராமலக்ஷ்மி said...

  தேவையான நேரத்தில் அவசியமான பதிவு.

  //"ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்.
  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

  உங்கள் நண்பர் சொல்வதே சரி:)!//

  எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 10. //malar said...

  மிகவும் நல்ல பதிவு...

  ’’முதல் அரசியல்வாதி வரை. எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.’’

  ஆமங்க அவங் திறமைதான்...ரொம்ப படிக்காதவங்க கூட திறமயால் உயர்ந்து இருகாங்க...

  ’’’எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோ டெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.’’’


  ஆமாம் எங்க குடும்பத்திலும் 2பேர் இருக்காங்க.பின் சம்பந்தம் இல்லாத வேலையில் சேர்தார்கள்...

  ’’’சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன நிம்மதியும் அமைதியும் கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.’’’
  !!!!!!!!!//

  நன்றி மேடம்.

  ஆசை இருக்கு வீசை இல்லயே...
  நான் இதுவரையில் கேள்விப் பட்டதில்லை. எனக்கு புதிய பழ மொழியை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 11. மோகன் குமார் said...

  நல்ல எண்ணத்துடன் எழுதப்பட்ட நல்ல பதிவு. நன்றி சார்//

  நன்றி சார்.
  எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

  ReplyDelete
 12. //மதுரை சரவணன் said...

  நல்ல பதிவு. இஞ்ஞினியரிங் படிப்பில் ஆர்வம் குறையவில்லை. கல்லூரிகள் பெருகிவிட்டது . அதனால் அதற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆசிரியர்கள் என்றும் சரியாக தான் இருப்பார்கள் தம் குறைகள் மறைக்கவே அவர்களை குறைகூறுகின்றனர்.அதற்கு நாமும் துணைப்போகிறோம். நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்து தர வேண்டிய்து பெற்றோர் கையில் உள்ளது.
  நல்ல ஆலோசனைகள் வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்//

  எனது பதிவை ஆலோசனையாக கருதிய உங்களுக்கு நன்றி.

  குறை சொல்வது வீட்டிலேயே ஆரம்பித்து விடுக்கிறது. இது என்ன தோசையா? இந்த ஸ்வீட் தானா? இது போன்ற கேள்விகள் கேட்காத பிள்ளைகள் உண்டா?

  ReplyDelete
 13. //Dr.P.Kandaswamy said...

  படிப்புகள் பெருகிவிட்டன. எப்படியாவது ஒரு படிப்பு படித்து ஒரு வேலைக்குப் போக வேண்டுமென்பதுதான் சாதாரண இளைஞனின் ஆசை. ஒரு நடுத்தர வர்க்க பெற்றோர் ஆசைப்படுவதும் அதுதான்.

  சரியான படிப்பு எது என்று என் போன்று ஆசிரியத்தொழிலில் இருந்து ரிடையர்டு ஆனவர்களினாலேயே சொல்ல முடியவில்லை.//

  உண்மைதான் சார்.
  இன்று வேலை வாய்ப்பு உள்ள படிப்பாகத் தெரிவது நாளை வெட்டிப் படிப்பாக மாறிவிடுகிறது. அதனால்தான் என்னவோ எல்லோரும் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்கள். எல்லோரும் மருத்துவராகிவிட்டால் யார்தான் நோயாளி?!

  ReplyDelete
 14. சரியான நேரத்தில் அருமையான பதிவு.

  ReplyDelete
 15. "ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்.


  ..... ஒவ்வொரு மாணவரின் திறமை, interests மற்றும் கனவுகள் வேறு படும். ....... ஆனால், பலரின் ஆசை, "நிறைய சம்பாதிக்கணும்" என்று மட்டும் இருப்பதால், மற்றவரின் வெற்றிகரமான அனுபவ அறிவுரைகளை அப்படியே பின்பற்றுகிறார்களோ என்னவோ?

  நல்லா எழுதி இருக்கீங்க...... பாராட்டுக்கள்!

  follow செய்கிறேன். இனி உங்கள் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்.

  ReplyDelete
 16. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும் இந்த நேரத்திற்கு ஒளி கொடுக்கும் பதிவு.

  ReplyDelete
 17. அவசியமான பதிவு!

  //"ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்.//.... ந‌ண்ப‌ர் சொல்வ‌து உண்மைதான்!

  ReplyDelete
 18. //வெங்கட் நாகராஜ் said...
  சரியான நேரத்தில் அருமையான பதிவு.//

  நன்றி சார்,

  ReplyDelete
 19. Chitra said...
  சரியான நேரத்தில் அருமையான பதிவு.
  "ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்.
  ..... ஒவ்வொரு மாணவரின் திறமை, interests மற்றும் கனவுகள் வேறு படும். ....... ஆனால், பலரின் ஆசை, "நிறைய சம்பாதிக்கணும்" என்று மட்டும் இருப்பதால், மற்றவரின் வெற்றிகரமான அனுபவ அறிவுரைகளை அப்படியே பின்பற்றுகிறார்களோ என்னவோ?
  நல்லா எழுதி இருக்கீங்க...... பாராட்டுக்கள்!
  follow செய்கிறேன். இனி உங்கள் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்.//

  உங்கள் பாராட்டுக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 20. //Advocate P.R.Jayarajan said...
  கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும் இந்த நேரத்திற்கு ஒளி கொடுக்கும் பதிவு.//

  மிகவும் நன்றி சார். உங்கள் பிளாக் படித்தேன்.மிக நல்ல சேவை செய்து வருகிறீர்கள்.நன்றி.

  இன்றைய தினத்தில் எல்லாப் படிப்புக் குறித்தும் மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விழிப்புணர்வு உள்ளது. ஆனால் சட்டப் படிப்பு மட்டும் ஒருவராலும் கண்டுகொள்ளப் படவில்லை.

  எனது மகன் சட்டம் படிப்பதால், நான் அதை பற்றி எழுத விரும்பவில்லை.(தனது பிள்ளைகள் படிக்கும் படிப்பை உயார்வாக சொல்லும் பெற்றோரில், நானும் ஒருவனாகிவிடுவேன் என்பதால்)
  தாங்கள் அதற்கு தகுதியான நபர் என்பதால், தங்கள் சட்டப் பார்வை இதழிலும், பிளாக்கிலும் தொடர்ந்து எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி வேண்டுகிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 21. //Priya said...
  அவசியமான பதிவு!
  //"ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்.//....
  ந‌ண்ப‌ர் சொல்வ‌து உண்மைதான்!//

  உங்கள் கருத்துக்கு, நன்றி மேடம்.

  ReplyDelete
 22. கருத்துள்ள இடுகை... அருமை

  ReplyDelete
 23. சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனை. கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 24. தினமணி வலைப்பூ-ல் வெளியிட்ட தினமணி ஆசிரியர் அவர்களுக்கும், தினமணி வழியாக வந்து படிக்கும் அனைவருக்கும் நன்றி.


  உங்கள் கருத்தை சொல்லிவிட்டு செல்லலாமே!

  ReplyDelete
 25. //அஹமது இர்ஷாத் said...
  கருத்துள்ள இடுகை... அருமை//

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், நன்றி.

  ReplyDelete
 26. //அக்பர் said...
  சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனை. கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி சார்.//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 27. அருமையான பதிவு JV sir.
  மிகவும் பின்தங்கிய/மோசமான கல்லூரில் - மிகசிறந்த 10 மாணவர்கள் இருகிறார்கள்.
  நாம் அதில் ஒருவராக இருக்கவேண்டும். படிப்பும், வேலையும் தனி நபர் திறமை, கடின முயற்சி பொருத்தது.

  ReplyDelete
 28. நல்ல பதிவு. இப்போதைக்கு தேவையான பதிவும் கூட. நன்றி
  நண்பர்கள் யாரேனும் கீழக்கண்ட கல்லூரிகளில் இஞினியரிங் படிக்க ஆண்டுக்கு தோராயமாக எவ்வளவு செல்வாகும் என்பது தெரிந்தால் கூறவும்.
   
  குமரகுரு கோவை
  மெஃப்கோ சிவகாசி
  கொங்கு ஈரோடு
  IRTT ஈரோடு

  ReplyDelete
 29. mani said...
  அருமையான பதிவு,
  மிகவும் பின்தங்கிய/மோசமான கல்லூரியில் - மிகசிறந்த 10 மாணவர்கள் இருகிறார்கள்.நாம் அதில் ஒருவராக இருக்கவேண்டும். படிப்பும், வேலையும் தனி நபர் திறமை, கடின முயற்சி பொருத்தது.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 30. //"உழவன்" "Uzhavan" said...
  நல்ல பதிவு. இப்போதைக்கு தேவையான பதிவும் கூட. நன்றி
  நண்பர்கள் யாரேனும் கீழக்கண்ட கல்லூரிகளில் இஞினியரிங் படிக்க ஆண்டுக்கு தோராயமாக எவ்வளவு செல்வாகும் என்பது தெரிந்தால் கூறவும்.
  குமரகுரு கோவை
  மெஃப்கோ சிவகாசி
  கொங்கு ஈரோடு
  IRTT ஈரோடு//
  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், நன்றி.

  ReplyDelete
 31. "ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல,அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி வெட்டுபவர் முதல் துணி தைப்பவர் வரை. பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை"

  உண்மை. படிப்பில் மட்டும் தங்கியிருக்கவில்லை. தொழில் செய்பவரின் திறமையும் ஈடுபாடும், அர்ப்பணிப்பும்தான் மிக முக்கியம் எனப் படுகிறது

  ReplyDelete
 32. Dr.எம்.கே.முருகானந்தன் said...
  "ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல,அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி வெட்டுபவர் முதல் துணி தைப்பவர் வரை. பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை"
  உண்மை. படிப்பில் மட்டும் தங்கியிருக்கவில்லை. தொழில் செய்பவரின் திறமையும் ஈடுபாடும், அர்ப்பணிப்பும்தான் மிக முக்கியம் எனப் படுகிறது//

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 33. //ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்//

  அதையேதான் நானும் சொல்கிறேன் அமைதி அப்பா.[அனுபவம்தான்]

  வெகு அருமையாய் எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 34. அன்புடன் மலிக்கா said...
  //ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்//

  அதையேதான் நானும் சொல்கிறேன் அமைதி அப்பா.[அனுபவம்தான்]

  வெகு அருமையாய் எழுதியிருக்கீங்க.//

  தங்களின் பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 35. விகடன் குட் பிளாக்ஸ்-ல் வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

  ReplyDelete
 36. தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் சார்..

  ReplyDelete
 37. //Riyas said...
  தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் சார்..//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 38. நிறைய சிந்தனைகளை மனதில் நிழலாட செய்த பதிவு. நன்றி.

  நம் சமூகத்தில் உள்ள ஒரு வித்தியாசமான சிக்கல் இது. சமீபத்தில் ஒரு மனவியல் நிபுணர் சொன்னார். வெளிநாட்டில் பதினெட்டு வயதிற்கு பிறகு தன் வாழ்வை அந்த இளைஞனே கவனித்து கொள்ள வேண்டும். இங்கே நம் நாட்டிலோ அந்த இளைஞனை படிக்க வைத்து, வேலைக்கு சேர்த்து, திருமணம் சேர்த்து வைத்து பிறகு முதலிரவிற்கு நாள் குறிப்பது வரை பெற்றோர்கள் தலையிடுகிறார்கள். இச்சூழலில் எப்படி ஒருவரது தனிப்பட்ட விருப்பங்கள்/ஆவல்/லட்சியம் பூர்த்தியாகும்? அதன் நீட்சியாகவே இந்த சிக்கலை பார்ப்பது சரியாக இருக்கும்.

  ReplyDelete
 39. சாய் ராம் said...

  //நிறைய சிந்தனைகளை மனதில் நிழலாட செய்த பதிவு. நன்றி.//

  உங்களுடைய பின்னூட்டம் சிறப்பு. மிக்க நன்றி சார்.

  ReplyDelete