Thursday, March 10, 2011

சட்டம் படித்தால் வேலை கிடைக்குமா?

துணை வேந்தர் திரு. விஜயகுமார் அவர்களின் வார்த்தைகளில் கேட்போம்.

"பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான மாணவர்கள் இல்லை. சரியான ஆட்கள் இல்லாததால், சட்டம் படித்த மாணவர்கள் பார்க்க வேண்டிய வேலையை, பொறியியல் மாணவர்கள் செய்கின்றனர்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்கவும், வழக்கு குறித்த குறிப்புகள் மற்றும் ஒரு குற்றத்திற்கு வழங்கப்பட்ட நீதிகள் குறித்த குறிப்புரைகளை தயாரித்துக் கொடுக்க, இந்தியா போன்ற நாடுகளை அவர்கள் நாடுகின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள், ஆன்-லைனிலேயே கிடைக்கின்றன. அதைத் தேடி, வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். அதே போல், பீ.பி.ஓ., கால் சென்டர்களிலும், சட்டம் சம்பந்தமான வேலைவாய்ப்புகள் வருகின்றன. விமான நிலையங்கள், துறை முகங்களில் ஏற்றுமதி, இறக்குமதியில் வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு போன்றவற்றில், வக்கீல்களின் பங்கு முக்கியமானது.

பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும், இதே போல் வரிவிதிப்புகள், சட்ட திட்டங்கள் வழக்கத்தில் இருப்பதால், இத்துறையில் தனித்துவம் வாய்ந்த சட்ட மாணவர்கள், வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற முடியும். பொறியியல் படிப்பைப் போலவே, சட்டம் படிக்கவும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உதவித் தொகை உள்ளது.

குறிப்பிட்ட துறை அடிப்படையிலான சட்டங்களை தெரிந்து கொள்ள, குறுகியகால சான்றிதழ் படிப்பும் தற்போது உள்ளது. பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் படிப்பாகவும் சில சட்டப் படிப்புகள் உள்ளன. சட்ட படிப்புடன், ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மைமிக்கவராக தங்களை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், சட்டப் படிப்பு, வேலைவாய்ப்பை அள்ளித் தரும்"

நன்றி; தினமலர்

16 comments:

  1. இதை படித்ததும் நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன் :))

    ReplyDelete
  2. நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி

    ReplyDelete
  3. என்னவோ போங்க, அந்த அடிதடியைப் பாத்தபிறகு, சட்டம் படிக்கவைக்கலாம்னு கொஞ்சநஞ்ச ஆசை இருந்தவங்களும் ஆசையைத் தலைமுழுகிட்டு பொறியியலே கதின்னு ஆகிருப்பாங்க.

    ReplyDelete
  4. மோகன் குமார் said...
    இதை படித்ததும் நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன் :))//

    ஆமாம் சார். மற்றவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    //வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான மாணவர்கள் இல்லை//

    இதைத்தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் சிந்தித்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

    ReplyDelete
  5. Lakshmi said...
    நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி//

    நல்ல தகவல் என்று ஏற்றுக் கொண்ட தங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
    நன்றி மேடம்.

    ReplyDelete
  6. ஹுஸைனம்மா said...
    என்னவோ போங்க, அந்த அடிதடியைப் பாத்தபிறகு, சட்டம் படிக்கவைக்கலாம்னு கொஞ்சநஞ்ச ஆசை இருந்தவங்களும் ஆசையைத் தலைமுழுகிட்டு பொறியியலே கதின்னு ஆகிருப்பாங்க.//

    ஆமாம் மேடம். இப்படியே எல்லோரும் ஒதுங்கிப் போகக்கூடாது அப்படின்னுதான், நான் படிச்ச விஷயத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்கவே இந்தப் பதிவு.

    இதைவிட கொடுமையாக, நாவரசு கொலை செய்யப்பட்ட போதும் யாரும் மருத்துவம் படிக்காமல் நிறுத்தவில்லை. ஆனால், சட்டக் கல்வி பயிலும் மாணவர்கள் காலம் காலமாக நடந்து கொள்ளும் விதம்தான் காரணம்.

    இப்பொழுது நிலைமை கொஞ்சம் தேவலாம். கடந்த வருடம் பி.ஏ.பி.எல்.(ஹானர்ஸ்) சென்னையில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளி(school of excellence in law, chennai)-யில் சேரத் தகுதி மதிப்பெண்
    190/200 என்பதை பலர் அறிவதில்லை.
    இந்த மாதிரி சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்றால் நிச்சயம் சட்டக்கல்வி மேம்படும் என்றும் நம்பலாம்.

    'அமைதி விரும்பி' பி.ஏ.பி.எல்.(ஹானர்ஸ்) இந்த வருடம் முடிக்க உள்ளார். அதன் பிறகு விபரமாக சட்டக் கல்விக் குறித்து தொடர்ந்து பதிவெழுத உள்ளேன்.பயப்படாதீங்க!

    படித்து கருத்து சொல்லியதற்கு, நன்றி மேடம்.

    ReplyDelete
  7. இன்றைய சூழ்நிலையில் சட்டம் படித்தால் வேலை கிடைக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நல்ல செய்தி.

    ReplyDelete
  8. No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
    நன்றி

    ReplyDelete
  9. நீங்கள் கூறுவதுபோல் திறமையானவர்கள் அதிகம் இல்லை.சட்டம் படித்தவர்கள் யாரும் வேலைக்கு
    அலைவதில்லை,அவசியமும் இல்லை,திறமையை வெளிபடுத்தினால் போதும்,தற்போது வக்கீல் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவது இல்லை,

    ReplyDelete
  10. தகவல்கள் நம்பிக்கையளிக்கும் பலருக்கு..எந்தத் துறையில்தான் சிக்கல் இல்லை? பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  11. வணக்கம்.நலம்தானே?நல்ல தகவலாக இருக்கிறது.நன்றி.

    ReplyDelete
  12. Nihilnivethen said...
    இன்றைய சூழ்நிலையில் சட்டம் படித்தால் வேலை கிடைக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நல்ல செய்தி.//

    நன்றி.

    ReplyDelete
  13. InternetOnlineJobHelp said...

    No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... //

    உங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  14. manivannan said...

    தற்போது வக்கீல் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவது இல்லை.//

    நன்றி.

    ReplyDelete
  15. பாச மலர் / Paasa Malar said...

    தகவல்கள் நம்பிக்கையளிக்கும் பலருக்கு..எந்தத் துறையில்தான் சிக்கல் இல்லை? பகிர்வுக்கு நன்றி..//

    நன்றி.

    ReplyDelete
  16. விமலன் said...

    வணக்கம்.நலம்தானே?நல்ல தகவலாக இருக்கிறது.நன்றி.//

    நலமே, உங்கள் பிளாக் பக்கம் இன்றுதான் வந்தேன். நன்றாக உள்ளது. நேரம் கிடைக்கும் பொழுது படித்து கருத்துக்களை எழுதுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete