வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் கிராமத்தில் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்து, அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, கடந்த 06.11.2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த செல்வி A. சுபாஷினி B.Sc., L.L.B. அவர்களுக்கு, கருப்பம்புலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு இரா. சுப்புராமன் அவர்களின் முயற்சியால், கிராம மக்கள் சார்பாக பாராட்டு விழா 9.11.25 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு ஆளுமைகள், இளம் வழக்கறிஞருக்கு அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.
எனக்கு கிடைத்த வாய்ப்பில் "குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாக மாறுவதற்கு உதவக்கூடாது!" என்கிற எனது வேண்டுகோளை வைத்ததோடு, "பணமும், ஆடம்பரமும் நிரந்தர மரியாதையைத் தராது" என்று சொல்லி வாழ்த்தி விடைப் பெற்றேன்.
இதுபோன்ற நல்ல நிகழ்வுகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை திரு சுப்புராமன் அவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்தேன்.
வழக்கறிஞர் பேரோடும், புகழோடும் திகழவேண்டுமென்று வாழ்த்துவதோடு💐💐💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏
No comments:
Post a Comment