Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday, December 31, 2010

2010- விமர்சனம்.

எல்லோரும் சினிமாவுக்கு விமர்சனம் எழுதுறத படிக்கும் பொழுது, நாமும் இப்படி எழுதலாமே என்று தோன்றும். ஆனால், அதற்கு சினிமா பார்க்கணுமே! அதனால்தான் இப்படி விமர்சனம் எழுதி, என்னுடைய ஆசையை நிறைவு செய்து கொள்கிறேன். "அதற்கு, நாங்கதான் கிடைச்சோமா?" என்பது என் காதில் விழுகிறது!

கடந்த வருடம் நமக்கு பல அனுபவங்களை கொடுத்திருக்கிறது. அதில், தலையாயது இந்திய அளவில் பல்வேறு ஊழல்கள் நடந்தது மற்றும் வெளியில் தெரிந்தது.
தனிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பலருக்கு நல்ல ஆண்டாகவே இருக்கலாம்.
என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைச் சிறப்பாகவே இருந்தது. ஆனால், அலுவலகத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தேன். உறவினர்களுக்கும் பல்வேறு இழப்புக்கள், இன்னல்கள்.


பிளாக் பற்றி சொன்னால் நிறைவான ஆண்டுதான். கடைசியில் கொஞ்சம் சுமாராக அமைத்துவிட்டது.

அரசியல்வாதிகளுக்கும் அப்படி ஒன்றும் மகிழ்சியான ஆண்டாக அமையவில்லை. அது, ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற வேறுபாடு கிடையாது.
வேலைவாய்ப்பில் பரவாயில்லை ரகம்.

அதிகப்பட்ச மகிழ்ச்சியை அடைந்தவர்கள் ரஜினி ரசிகர்கள் மட்டுமே!

மொத்தத்தில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்ணே கடந்த ஆண்டு பெற்றுள்ளது .

எது எப்படியோ, புது வருடம் சிறப்பாக அமையும் என்று நம்புவோம்.

மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய பிளாக் வலைச்சரத்தில் இங்கே திரு. ரமேஷ்- ரொம்ப நல்லவன் (சத்தியமா) அவர்களால் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அவருக்கு என்னுடைய நன்றிகள்.

உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

.