Tuesday, March 16, 2010

எங்கே போய் முடியும் இந்த பணமாலை..?!




என்னுடைய கவலையெல்லாம் இந்தியப் பணம் எவ்வளவு பாடுபடுகிறது என்பதுதான். நம் கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டு கசங்கிவிட்டால், நமது மனது தாங்கிக் கொள்வதில்லை. கடையில் பொருட்களை வாங்கும்போது, நம் கையிலிருக்கும் புதிய நோட்டை முதலில் கொடுக்கமாட்டோம், தேடிப் பிடித்து பழைய தாளை கொடுப்போம்.

உ.பி.முதல்வருக்கு கோடிகணக்கான ரூபாய் நோட்டில் மாலை அணிவித்தார்கள் என்பதை அறிந்ததும், மனதை என்னவோ செய்கிறது. இந்த ரூபாய் நோட்டு மாலை மற்ற மாநிலங்களுக்கு பரவக்கூடாது, இதுவே எனது விருப்பம். பொறுத்திருந்துப் பார்ப்போம்.

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டை எப்படி கையாள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதை கீழே படிக்கவும்.
இது உ.பி. மக்களுக்குத் தெரியாதா?!

Clean note policy:

Reserve Bank of India has been continuously making efforts to make

good quality banknotes available to the members of public.

To help RBI and banking system, the members of public are requested to ensure the following:

Not to staple the banknotes

Not to write / put rubber stamp or any other mark on the banknotes

Store the banknotes safely to prevent any damage











Monday, March 8, 2010

மகளிர்தினம்...!

மகளிருக்கு எனது வாழ்த்துக்கள்.

இன்று நூறாவது மகளிர் தின ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிருக்கு முப்பத்தி மூன்று விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேறவுள்ளது. இனி மகளிரை அதிக அளவில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.-க்களாக பார்க்கலாம். நமது நாட்டில் அரசியலில் மகளிர் நிலை எப்படி உள்ளது? அளவுக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்தி ஆண்களைக் காலில் விழவைத்து வேடிக்கைப் பார்க்கும் மகளிர் ஒரு புறம். கணவன் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருக்கும் மகளிர் மறுபுறம்.

இன்றைய சூழ்நிலையில் கணவனோ,தகப்பனோ அரசியலில் இருந்தால் மட்டுமே அரசியல் அதிகாரத்தை பிடிக்க முடியும் என்பதே நிஜம். உண்மையில் திறமையான மகளிர் அரசியலுக்கு வந்து நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இன்றைய நிலையில் வீட்டில் மகளிர் நிலை எவ்வாறு உள்ளது? ஆண்களுக்கு அடங்கிப்போகும் நிலையில்தான் பெரும் பகுதியினர் உள்ளனர். இதற்கு காரணமாக நான் நினைப்பது, காலம் காலமாக பெண்களை அடிமைப் படுத்தி பழக்கப் பட்டது நமது சமூக அமைப்பு. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்கு அருகே தண்ணீர் கொண்டுவந்து தர தாமதித்த தாயை, மகன் தலையில் அடித்து கொன்றான் என்ற செய்தி, மகளிரின் நிலையை தெளிவாக வெளிபடுத்தும் கண்ணாடியாக உள்ளது.

பெண்களுக்கு பெண்களாலே துன்பம் வருவதும் அதிகமாக உள்ளது. மாமியார் மருமகள், நாத்தனார் போன்ற உறவுகளில் என்றைக்கும் ஆண்கள் குறுக்கிடுவதில்லை. ஆனால் இந்த உறவு எங்காவாது சுமுகமாக உள்ளதா?

பெண்களுக்கு சம அந்தஸ்த்து கிடைக்க வேண்டுமானால் நல்ல கல்வியும், சிறந்த சிந்தனையும் ஆண், பெண் இருவருக்கும் வேண்டும்...!

Monday, March 1, 2010

ஆஸ்த்மா,அலர்ஜி நோயாளிகளுக்கு...!

ஆஸ்த்மா மற்றும் அலர்ஜியால் பாதிக்கப் படுபவர்களின் வேதனையை நாம் அனைவரும் அறிவோம். அவர்களுக்கு ஒரு தீர்வு விரைவில் கிடைக்கும் என்று நம்பும் அளவுக்கு செய்தி ஒன்று கடந்த வருடம் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் நான் அந்த தகவலை படித்தபோதும், அதைப் பதிவிடத் தோணாமல் போய்விட்டது. ஆஸ்த்மா மற்றும் அலர்ஜியால் பதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இந்தப் பதிவு ஓர் ஆறுதலாகவும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்

அமெரிக்கவில் ஓர் ஆராய்ச்சியில், ரத்தத்தில் போலேட் அளவு குறைந்தால் ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது என்று முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் போலிக் ஆசிட் (folic acid ) மருந்தைச் சாப்பிட்டால் ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி நோயைத் தடுக்க முடியும்.

ஆனால் அவசரப்பட்டு இப்போது போலிக் ஆசிட் சாப்பிடவேண்டாம். எந்த அளவில் மற்றும் எவ்வளவு காலம் போலிக் ஆசிட் மருந்தை உட்க் கொள்ளவேண்டும், என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண, இன்னும் அந்த ஆராய்ச்சித் தொடரவேண்டும் என்று அந்த செய்தியில் உள்ளது.

நான் படித்தவற்றில் சிலவற்றை கீழேக் கொடுத்துள்ளேன்.
Cautioning that it's far too soon to recommend folic acid supplements to prevent or treat people with asthma and allergies, the researchers emphasize that more research needs to be done to confirm their results, and to establish safe doses and risks.

"Our findings are a clear indication that folic acid may indeed help regulate immune response to allergens, and may reduce allergy and asthma symptoms," says lead investigator Elizabeth Matsui, M.D. M.H.S., pediatric allergist at Hopkins Children's. "But we still need to figure out the exact mechanism behind it, and to do so we need studies that follow people receiving treatment with folic acid, before we even consider supplementation with folic acid to treat or prevent allergies and asthma".

மேற்கொண்டு அதிக விபரம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.