இன்று நூறாவது மகளிர் தின ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் கணவனோ,தகப்பனோ அரசியலில் இருந்தால் மட்டுமே அரசியல் அதிகாரத்தை பிடிக்க முடியும் என்பதே நிஜம். உண்மையில் திறமையான மகளிர் அரசியலுக்கு வந்து நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இன்றைய நிலையில் வீட்டில் மகளிர் நிலை எவ்வாறு உள்ளது? ஆண்களுக்கு அடங்கிப்போகும் நிலையில்தான் பெரும் பகுதியினர் உள்ளனர். இதற்கு காரணமாக நான் நினைப்பது, காலம் காலமாக பெண்களை அடிமைப் படுத்தி பழக்கப் பட்டது நமது சமூக அமைப்பு. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்கு அருகே தண்ணீர் கொண்டுவந்து தர தாமதித்த தாயை, மகன் தலையில் அடித்து கொன்றான் என்ற செய்தி, மகளிரின் நிலையை தெளிவாக வெளிபடுத்தும் கண்ணாடியாக உள்ளது.
பெண்களுக்கு பெண்களாலே துன்பம் வருவதும் அதிகமாக உள்ளது. மாமியார் மருமகள், நாத்தனார் போன்ற உறவுகளில் என்றைக்கும் ஆண்கள் குறுக்கிடுவதில்லை. ஆனால் இந்த உறவு எங்காவாது சுமுகமாக உள்ளதா?
பெண்களுக்கு சம அந்தஸ்த்து கிடைக்க வேண்டுமானால் நல்ல கல்வியும், சிறந்த சிந்தனையும் ஆண், பெண் இருவருக்கும் வேண்டும்...!
சரியா எழுதிருக்கீங்க. என்ன ஒண்ணு.. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாஸ் ஆகுற மாதிரி தெரியல
ReplyDeleteநன்றி சார்...
ReplyDelete