Monday, November 22, 2010

எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு?

எனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

'ஐந்து வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி' என்று எங்கள் பகுதியில் குறிப்பிடுவார்கள்.

நான் சந்தித்த சகோதர யுத்தத்தை இங்கு சொன்னால் அனைவருக்கும் புரியாது. அதானால், அனைவருக்கும் தெரிந்த உதாரணத்தை சொன்னால் மட்டுமே நன்றாக இருக்கும்.


அண்மையில் பா.ம.க. நிறுவனத் தலைவரின் தம்பி, காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை அனைவரும் அறிவோம். ஒரே குடும்பத்தை சார்ந்த ஆறு பேர் கொலைக்கு, சகோதர சொத்துச் சண்டையே காரணாம் என்றும் சொல்லப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கொல்லப்பட்டதும், அம்பானி சகோதரர்கள் அடித்துக் கொண்டதும், பங்காளிகள் ராகுல் காந்தியும, வருண் காந்தியும் நேரெதிர் கட்சியில் உள்ளதும்
நாடறியும்.

நண்பர்களிடம் விட்டுக் கொடுப்பவர்கள் கூட, அண்ணன் தம்பியிடம் விட்டுக் கொடுப்பதில்லை என்பதுதான் எதார்த்தம். அண்ணனின் முன்னேற்றத்தை தம்பியோ, தம்பியின் முன்னேற்றத்தை அண்ணனோ தாங்கிக் கொள்ளமுடிவதில்லை. இதற்கு உளவியல் ரீதியாக ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். அதைப்பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்று.

இதை தவிர்க்க முடியாதா என்றால், இனி வரும் காலங்களில் ஒரு குழந்தை இருந்தால் மட்டுமே அது முடியும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றால் அவர்களுக்கும் நிம்மதி இருக்காது. நீங்களும், கடைசிக் காலத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு இடையே பந்தாடப்படுவீர்கள்.

சரி, "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் சகோதரர்களுடன், உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பழகுங்கள்.

உங்கள் பெற்றோரை "அண்ணன் கவனிக்கவில்லை, தம்பி கவனிக்கவில்லை, நான் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும்" என்கிற ரீதியில் நடத்தாதீர். இது போன்று, சிந்தித்து நடந்தால் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள்,அண்ணன் தம்பி அல்லது தங்கை பிரச்சினைகளுக்கு விதிவிலக்காக இருக்கலாம்.

அண்ணன் தம்பி உறவு என்றதும், உங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயர்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல....! இது குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பதிவு மட்டுமே!
.

43 comments:

 1. உங்கள் பெற்றோரை "அண்ணன் கவனிக்கவில்லை, தம்பி கவனிக்கவில்லை, நான் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும்" என்கிற ரீதியில் நடத்தாதீர்.///
  இந்த எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டால் முதியோர் இல்லமே தேவையில்லை.

  ReplyDelete
 2. இன்னும் விரிவாக, விவரமாக எழுதியிருக்கலாம் இந்தப் பதிவை.

  //இதற்கு உளவியல் ரீதியாக ஏதேனும் காரணம்//

  சிறு வயதில் பெற்றோர், மூத்த மகன் அல்லது கடைக்குட்டி என்று கொடுத்த செல்லங்கள், காட்டிய சில பாரபட்சங்கள் போன்றவையும் அடிமனதில் இருக்கலாம்.

  ReplyDelete
 3. பதிவை ரசித்தாலும் தங்கள் தீர்வை ( ஒரு குழந்தை போதும்) என்னால் ஏற்க முடிய வில்லை. பல விதங்களில் இரு குழந்தை இருப்பது நல்லது என நினைக்கிறேன். இது என் தனி பட்ட கருத்து.

  பெற்றோரை எந்த குழந்தை வைத்து கொள்வது என்ற கோணத்தில் நீங்கள் சொல்வது ஓரளவு சரி; ஆனாலும் எல்லோருக்கும் ஒரே பிள்ளை என்றால், மகனை பெற்றவர்கள் அவர்கள் மகனுடன் இருக்க, பெண்ணை பெற்றவர்கள் யாருடன் இருப்பார்கள்? :(

  ReplyDelete
 4. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


  www.ellameytamil.com

  ReplyDelete
 5. karthikkumar said...
  உங்கள் பெற்றோரை "அண்ணன் கவனிக்கவில்லை, தம்பி கவனிக்கவில்லை, நான் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும்" என்கிற ரீதியில் நடத்தாதீர்.///
  இந்த எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டால் முதியோர் இல்லமே தேவையில்லை.//

  அனைவருக்கும் அன்பு, பாசம், நேசம், வேண்டுமென்பதே நமது நோக்கம்.
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. //இனி வரும் காலங்களில் ஒரு குழந்தை இருந்தால் மட்டுமே அது முடியும்//

  மிக மிகத் தவறான அறிவுரை. ஒற்றைக் குழந்தைகளிடம் கேட்டுப்பாருங்கள் ஏனென்று.

  ReplyDelete
 7. ஹுஸைனம்மா said...
  இன்னும் விரிவாக, விவரமாக எழுதியிருக்கலாம் இந்தப் பதிவை.//

  உண்மைதான் மேடம். நான் நினைத்தை அப்படியே எழுதவில்லை. தாங்களோ, நண்பர்களோ இது குறித்து அவசியம் இன்னும் சிறப்பாக எழுதுவேண்டும் என்று விரும்புகிறேன்.
  ******
  /இதற்கு உளவியல் ரீதியாக ஏதேனும் காரணம்/

  சிறு வயதில் பெற்றோர், மூத்த மகன் அல்லது கடைக்குட்டி என்று கொடுத்த செல்லங்கள், காட்டிய சில பாரபட்சங்கள் போன்றவையும் அடிமனதில் இருக்கலாம்.//

  நிச்சயமாக இதுவும்,ஒப்பீடும் காரணாமாக இருக்கலாம்.

  நன்றி மேடம்.

  ReplyDelete
 8. மோகன் குமார் said...
  பதிவை ரசித்தாலும் தங்கள் தீர்வை ( ஒரு குழந்தை போதும்) என்னால் ஏற்க முடிய வில்லை. பல விதங்களில் இரு குழந்தை இருப்பது நல்லது என நினைக்கிறேன். இது என் தனி பட்ட கருத்து./


  ரசித்து படித்தமைக்கு நன்றி.

  இன்று பல குழந்தைகளைப் பெற்ற, 'பெற்றோர்' படும்பாட்டை நாடறியும். அதன் விளைவாகத்தான் இப்படி ஒரு கருத்தை எழுதினேன். உங்கள் சகோதரர்களுடன் தாங்கள் கொண்டுள்ள பாசம் தங்கள் எழுத்துக்கள் பேச்சுக்கள் வழியாக நான் அறிந்ததே, தாங்கள் விதி விலக்கில் வந்து விடுகிறீர்கள். சகோதரச் சண்டைக்கு, படித்தவர்கள் படிக்காதவர்கள், ஏழை பணக்காரர்கள் என்கிற விதிவிலக்கு இல்லை என்பதையும் தாங்கள் அறிவீர்கள். அதனால் இப்படி ஒரு தீர்வு சொன்னேன்.
  ***************************

  பெற்றோரை எந்த குழந்தை வைத்து கொள்வது என்ற கோணத்தில் நீங்கள் சொல்வது ஓரளவு சரி; ஆனாலும் எல்லோருக்கும் ஒரே பிள்ளை என்றால், மகனை பெற்றவர்கள் அவர்கள் மகனுடன் இருக்க, பெண்ணை பெற்றவர்கள் யாருடன் இருப்பார்கள்?//

  ஒரு குழந்தை என்று வந்த பிறகு, மகன் மகள் என்கிற பேதம் ஒழிந்துவிடும். ஆறு பேர்(கணவன் மனைவி மற்றும் இருவரின் பெற்றோர்) ஒரே குடும்பமாக வாழலாம். எங்கள் குடும்பத்துடன் எங்களது மருமகளின் பெற்றோரும் வாழ்வார்கள் என்ற எண்ணத்தையும் இப்போதே வளர்த்துக் கொண்டுள்ளேன்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 9. ஹுஸைனம்மா said...

  //இனி வரும் காலங்களில் ஒரு குழந்தை இருந்தால் மட்டுமே அது முடியும்//

  மிக மிகத் தவறான அறிவுரை. ஒற்றைக் குழந்தைகளிடம் கேட்டுப்பாருங்கள் ஏனென்று.//

  உண்மைதான் மேடம். எங்களது மகன்
  'அமைதி விரும்பி' அடிக்கடி வருத்தப்படும் விஷயம்தான். இருந்தாலும், ஒரு குழந்தை என்ற எங்களுடைய முடிவு 22 வருடங்களாகத் தவறாகப் படவில்லை.

  பிரச்சினைகளே உருவாகாமல் இருக்கவே என்னுடைய தீர்வு. சகோதர யுத்தத்தை தவிர்க்க/தடுக்க தெரிந்தவர்களுக்கு இது பொருந்தாது.

  மீண்டும் நன்றி மேடம்.

  ReplyDelete
 10. மணிபாரதி said...
  Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....

  www.ellameytamil.com//

  இணைத்து விட்டேன். நன்றி.

  ReplyDelete
 11. துவாபரயுகத்திலேயே அண்ணன்-தம்பிகள் (சிற்றப்பன் - பெரியப்பன் மக்கள்) சண்டை ஆரம்பமாகிவிட்டது. கலியுகத்தில் அது உடன்பிறந்தோருடன் கத்தி காட்டும்படியான விரோதத்தில் இருக்கிறது. இப்பொழுது பராமரிக்கும் சக்தி பொறுத்தே பெற்றுக்கொள்வது ஒன்றா இரண்டா என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் கலியுகத்தில் கூட ராம-லக்ஷ்மணர்களாக இருக்கும் சகோதரர்களை நான் பார்க்கிறேன். சிந்தனையை தூண்டும் பதிவுதான் சந்தேகமில்லை. ;-)

  ReplyDelete
 12. RVS said...
  துவாபரயுகத்திலேயே அண்ணன்-தம்பிகள் (சிற்றப்பன் - பெரியப்பன் மக்கள்) சண்டை ஆரம்பமாகிவிட்டது. கலியுகத்தில் அது உடன்பிறந்தோருடன் கத்தி காட்டும்படியான விரோதத்தில் இருக்கிறது. இப்பொழுது பராமரிக்கும் சக்தி பொறுத்தே பெற்றுக்கொள்வது ஒன்றா இரண்டா என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் கலியுகத்தில் கூட ராம-லக்ஷ்மணர்களாக இருக்கும் சகோதரர்களை நான் பார்க்கிறேன். சிந்தனையை தூண்டும் பதிவுதான் சந்தேகமில்லை. ;-)//

  உங்களுடைய கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 13. நல்லதொரு சிந்தனையைத் தூண்டக்கூடிய பதிவு. அண்ணன் - தம்பி சண்டை பலகாலமாக நடந்து வருவது தானே. அதற்காக ஒரு குழந்தையுடன் நிறுத்தினாலும் பிரச்சனைதான். சிறு வயதிலேயே அவர்களுக்கு நல்ல எண்ணங்களை பயிற்றுவிக்க வேண்டும். பெற்றோர்களும் முன்மாதிரியாக இருந்தால் நல்லது.

  ReplyDelete
 14. வெங்கட் நாகராஜ் said...
  நல்லதொரு சிந்தனையைத் தூண்டக்கூடிய பதிவு. அண்ணன் - தம்பி சண்டை பலகாலமாக நடந்து வருவது தானே.//

  உண்மைதான். இப்பொழுது, எங்கும் பேசப்படுவதால்தான் இந்தப் பதிவு. பாராட்டுக்கு நன்றி.

  *****************************

  அதற்காக ஒரு குழந்தையுடன் நிறுத்தினாலும் பிரச்சனைதான்.//

  சகோதரர்கள் என்றால் சண்டைதான் என்பதால், ஒரு குழந்தைதான் தீர்வு என்று குறிப்பிட்டுள்ளேன்.

  *****************************

  சிறு வயதிலேயே அவர்களுக்கு நல்ல எண்ணங்களை பயிற்றுவிக்க வேண்டும். பெற்றோர்களும் முன்மாதிரியாக இருந்தால் நல்லது.//

  உண்மைதான், இதுதான் என் நோக்கமும்.

  நன்றி சார்

  ReplyDelete
 15. //ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் சகோதரர்களுடன், உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பழகுங்கள்.//

  இதுதான் சரி. மற்றபடி ஒரு குழந்தை என்பது தீர்வல்ல. அதற்கான உங்கள் பதிலையும் பார்த்துக் கொண்டேன்:)!

  ReplyDelete
 16. ராமலக்ஷ்மி said...

  //ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் சகோதரர்களுடன், உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பழகுங்கள்.//

  இதுதான் சரி. மற்றபடி ஒரு குழந்தை என்பது தீர்வல்ல. அதற்கான உங்கள் பதிலையும் பார்த்துக் கொண்டேன்:)!//

  நன்றி மேடம். சகோதரர்களுடன், அன்பாக எல்லோரும் வாழ வேண்டும் என்கிற நமது எண்ணம் நிறைவேறினால் நன்று.

  ReplyDelete
 17. அரசியலில் ஆரம்பித்து அட்வைசில் முடித்திருக்கிறீர்கள்...

  ReplyDelete
 18. philosophy prabhakaran said...

  அரசியலில் ஆரம்பித்து அட்வைசில் முடித்திருக்கிறீர்கள்...//

  நன்றி சார். ஏதோ சொல்ல நினைத்தேன், எதுவோ வந்து விட்டது.:-)))))

  ReplyDelete
 19. ஹுஸைனம்மாவின் கூற்றை வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 20. goma said...

  ஹுஸைனம்மாவின் கூற்றை வழி மொழிகிறேன்.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ஒரு குழந்தை என்கிற தீர்வுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்குமுன்னு நான் நினைக்கவேயில்லை.

  நானும் கட்சி மாறிடலாமுன்னு இருக்கேன்:-))))))

  ReplyDelete
 21. அருமையான, சிந்திக்கத் தூன்டும் பதிவு!

  உங்கள் பதிவைப்படித்ததும் எனக்கு எஸ்.வி.ரங்கராவ் நடித்த அன்புச் சகோதரர்கள் படம் நினைவில் வந்தது. அண்னன் தம்பிகள் பாசத்தை அருமையாக பிரதிபலித்த படங்களில் அதுவும் ஒன்று!

  அத்த‌னை பிரிய‌மாக‌ வ‌ளர்ந்து வந்த‌‌ பிற‌கு வித்தியாச‌ங்க‌ள் வ‌ருவ‌து பொருளாத‌ர‌ ரீதியில் ஏற்ப‌டும் ஏற்ற‌‌த்தாழ்வுகளும் அதை விசிறி விடக்கூடிய இல்லத்தரசிகளும் அமைவதும்தான். கூட்டுக்குடும்பங்களில் வீட்டுப்பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையுடனுடனும் பொறுமையுடனும் சுயநலமின்றியும் நடந்து கொண்டால் பெரும்பாலான இல்லங்களில் சகோதர யுத்தங்கள் இருக்கவே இருக்காது. சின்னச் சின்ன சலசலப்புகள் வந்தால்கூட வீட்டுப்பெண்கள் அதை சரி செய்கிற அளவு பக்குவத்துடன் இருக்க வேண்டும்.

  இந்த‌ 'ஒரே குழந்தை' விஷயம் எனக்கும் உடன் பாடில்லை. சகோதர யுத்தங்கள், துரோகங்கள் வாழ்க்கையில் என்றுமே தொடர்கதைகள்தான். அதை தொண்ணூறு சதவிகிதம் மக்கள் ஏதாவதொரு சூழ்நிலையில் அனுபவிக்கத்தான் நேருகிறது. அனுபவிக்காதவர்கள் பாக்கியம் செய்தவர்கள். ஆனால் அன்பு, பாசம், பகிர்ந்து வாழ்தல், விட்டுக்கொடுத்தல் அனைத்தையும் இரன்டு மூன்று குழந்தைகள் உள்ள வீட்டில் நாம் எதையும் சொல்லிக்கொடுக்காமலேயே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இந்த அடிப்படையை அவர்கள் நிச்சயம் கற்று வளர வேண்டும். அதன் பின் அவர்கள் அதைப் பின் தொடர்வதும் மறப்பதும் அவர்கள் வாழ்க்கையின் போக்கைப் பொறுத்தது!

  இந்த‌‌ ஒரே குழந்தை விஷயத்தில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. சந்தர்ப்பவசமாக அந்த ஒரே மகன் பெற்றோரை விட்டு விலகி விட்டால் அந்த வயதான காலத்தில் பெற்றவர்களுக்கு யார் ஆறுதல்? இன்னொரு குழந்தை இருக்கும் படசத்தில் அந்த வேதனை குறையுமல்லவா?

  ReplyDelete
 22. //அமைதி அப்பா said...
  ஒரு குழந்தை என்கிற தீர்வுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்குமுன்னு நான் நினைக்கவேயில்லை.
  நானும் கட்சி மாறிடலாமுன்னு இருக்கேன்:-))))))//

  22 வருடங்கள் கழித்தா? :-))))) எதுக்கும் மறுபடியும் அமைதி விரும்பியிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள். :-)))))))) (no offence; fun only)

  ReplyDelete
 23. மனோ சாமிநாதன் said...

  அருமையான, சிந்திக்கத் தூன்டும் பதிவு!//

  பாராட்டுக்கும் நெடிய பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம்.

  *************************

  அத்த‌னை பிரிய‌மாக‌ வ‌ளர்ந்து வந்த‌‌ பிற‌கு வித்தியாச‌ங்க‌ள் வ‌ருவ‌து பொருளாத‌ர‌ ரீதியில் ஏற்ப‌டும் ஏற்ற‌‌த்தாழ்வுகளும் அதை விசிறி விடக்கூடிய இல்லத்தரசிகளும் அமைவதும்தான்//

  நூறு சதவிகிதம் உண்மை மேடம்.

  ***********************

  இந்த‌ 'ஒரே குழந்தை' விஷயம் எனக்கும் உடன் பாடில்லை//

  நீங்களும் அந்த கட்சிதானா?:-))))

  **************************

  இந்த‌‌ ஒரே குழந்தை விஷயத்தில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. சந்தர்ப்பவசமாக அந்த ஒரே மகன் பெற்றோரை விட்டு விலகி விட்டால் அந்த வயதான காலத்தில் பெற்றவர்களுக்கு யார் ஆறுதல்?//

  இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைள் உள்ள வீட்டில் முதியவர்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கிறார்கள்.
  "எல்லாத்தையும் அங்க கொடுத்துட்டு, சாகப்போற காலத்துல இங்க வந்து கிடக்குதுங்க!" அல்லது நல்ல மனதுடன் சிலர் பாதுகாத்தால், அவர்களுக்கு கிடைப்பது "எல்லாம் அவங்களே எடுத்துக்கிட்டாங்க, அதான் பார்க்கிறாங்க!" என்ற குத்தல் பேச்சு வேறு.

  இவை அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்பவர்களே அதிகம். இதையும் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

  ஒரு குழந்தையோ, இரண்டு குழந்தையோ பெற்றோரின் வளர்ப்பு முக்கியம்.

  இப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது. நாம், நமது சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமது பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டதுதான் இந்தப் பதிவு. இது சிறிதளவாவது மற்றவர்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.

  நமது மக்கள் தொகைதான் நமக்கு பிரச்சினை என்று நான் கருதுவதால், இந்தப் பதிவை அந்த விழிப்புணர்வுக்கும் பயன்படுத்தலாமே என்று நினைத்தேன். அது 'பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான' கதையாகி விட்டது:-)))))

  இது முடிவல்ல ஆரம்பம்!

  மேடம், உங்கள் நேரத்தை செலவிட்டு, என்னுடைய பதிவுலக வரலாற்றில்(?!) முதன்முதலாக இவ்வளவு பெரிய பின்னூட்டம் எதுதிய உங்களுக்கு என் நன்ன்ன்ன்றி.

  ReplyDelete
 24. ஹுஸைனம்மா said...
  22 வருடங்கள் கழித்தா? :-))))) எதுக்கும் மறுபடியும் அமைதி விரும்பியிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள். :-)))))))) (no offence; fun only)//

  ஈசியா, கட்சி மாற முடியாது போல இருக்கே?!:-)))))

  ReplyDelete
 25. நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் என் அண்ணனும் சிறு வயதில் ஒற்றுமையாகதான் இருந்தோம் நான் இல்லாமல் எங்க அண்ணனும், என் அண்ணன் இல்லாமல் நானும் எங்கேயும் போக மாட்டோம், இன்றோ நிலைமை தலைகீழ். ஆனால் சண்டை என்று பெரிதாக வந்ததில்லை.

  ReplyDelete
 26. தங்கள் கட்டுரை படித்தேன், பிற வாசகர்களின் பின்னூட்டங்களையும் படித்தேன். அண்ணன்‍ தம்பி பிரச்சினைகளைத் தவிர்க்க 'ஒரு குழந்தை மட்டுமெ (ஆணோ பெண்ணோ)' என்கிற நோக்கம் முற்றிலும் தவறானது. இது தொடர்ந்தால், பின் வரும் சமூகத்தினருக்கு அத்தை, மாமா, சிற்றப்பா, பெரியப்பா, அதன் மூலம் சிற்றன்னை, பெரியம்மா போன்ற பிற உறவினர் என்று ஒரு சமூகம் இருப்பதே தெரியாமல், 'அப்படீன்னா என்ன' என்று கேட்கும் மனோபாவம் இப்போதே பல குடும்பங்களில் உள்ளது, இது மேலும் தழைக்கும் என்பது என் கருத்து. அண்ணன் தம்பி, அல்லது அக்கா தங்கை உறவுகளில் நல்ல பரஸ்பர புரிந்துணர்வும் உண்மையான ரத்த பாசமும் சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட்டால்தான் அது போன்ற பிரச்சினைகளைக் களைய முடியும்.

  சில நண்பர்கள் அண்ணன் தம்பி போல் புரிந்துணர்வுடன் பழகுவதைப் பார்க்கிறோம்; இதையே மாற்றுக் கோணத்தில் ஏன் யோசிக்கக் கூடாது? வேற்று குடும்பத்திலிருந்து வந்த நண்பர்களுடனே அட்ஜஸ்ட் செய்து கொண்டு புரிந்துணர்வுடன் பழகும்போது, நாம் ஏன் நம் உடன்பிறப்புடன் அன்புடனும் வாஞ்சையுடனும் பழகக்கூடாது என்று யோசித்தாலும் பிரச்சினக்களைத் தவிர்க்கலாம்.

  ReplyDelete
 27. THOPPITHOPPI said...
  நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் என் அண்ணனும் சிறு வயதில் ஒற்றுமையாகதான் இருந்தோம் நான் இல்லாமல் எங்க அண்ணனும், என் அண்ணன் இல்லாமல் நானும் எங்கேயும் போக மாட்டோம், இன்றோ நிலைமை தலைகீழ். ஆனால் சண்டை என்று பெரிதாக வந்ததில்லை.//

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நம்மை நாமே திரும்பிப் பார்க்க, இந்தப் பதிவு உதவினால் மகிழ்ச்சி.

  ReplyDelete
 28. Sivasankaran said...

  //சில நண்பர்கள் அண்ணன் தம்பி போல் புரிந்துணர்வுடன் பழகுவதைப் பார்க்கிறோம்; இதையே மாற்றுக் கோணத்தில் ஏன் யோசிக்கக் கூடாது? வேற்று குடும்பத்திலிருந்து வந்த நண்பர்களுடனே அட்ஜஸ்ட் செய்து கொண்டு புரிந்துணர்வுடன் பழகும்போது, நாம் ஏன் நம் உடன்பிறப்புடன் அன்புடனும் வாஞ்சையுடனும் பழகக்கூடாது என்று யோசித்தாலும் பிரச்சினக்களைத் தவிர்க்கலாம்.//

  உண்மைதான். இது போல் சிந்தித்து நமது சகோதரர்களுடன் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ முயற்சிப்போம்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 29. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  http://mathisutha.blogspot.com/

  ReplyDelete
 30. நன்றி. நானும் புதியதாக ஒரு ப்ளாக் கடை திறந்திருக்கிறேன், நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்.
  http://solaiyooran.blogspot.com/
  ஆங்கிலத்தில் புலமை இருப்பினும், எனக்கு தமிழில் ஏதாவது எங்காவது கண்ணில் இன் விருப்பங்களுக்கேற்ற தகவல், பின்னூட்டங்கள், கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். எழுத்தாளர்களில் சுஜாதா, பாலகுமாரன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் எழுத்துக்கள் நான் தொடர்ந்து வாசிப்பதில் சில. இன்னும் நிறைய எழுத, ஆர்வம்தான். சந்திப்போம்.

  ReplyDelete
 31. சமீபத்தில் குடும்பம் ஒரு கதம்பம் (விசு) திரைப்படம் மறு ஒளிபரப்பு செய்தார்கள், அதில் வரும் ஒரு காட்சி நினைவில் வந்தது, அது இக் கட்டுரைக்கு உகந்ததாக தோன்றியது.

  சென்னையில் ஒரு ஒண்டிக் குடித்தன குடியிருப்பில் கணவன்‍ மனைவி இருவருமே வேலைக்குச் செல்வார்கள். ஒரு நாள் கணவர் கிணற்றடியில் துணி துவைக்கும்போது அவர் நண்பருடன் உரையாடிக் கொண்டிருப்பார். அப்போது அக் கணவனின் மனைவி 'அவசரமாக வேறு வேலை உள்ளது, என் ரவிக்கைக்கு சற்று பொத்தான் தைத்துக் கொடுக்குமாறு' கேட்பார். கணவரும் 'சரி' செய்கிறேன் என்பார். நண்பர் அவரிடம் கேட்பார் 'என்ன சார், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த இந்த வேலைதான் செய்யணும் என்று உள்ளதே, உங்களுக்கு இது மாதிரி மனைவியின் ரவிக்கைக்கு பொத்தான் தைக்கும் வேலை எல்லாம் செய்ய வெட்கமாக இல்லையா' என்று. அதற்கு கணவர் சொல்வார் 'அந்த ரவிக்கையைத் தைத்துக் கொடுப்பார், வெளி மனிதர் என் மனைவியின் ரவிக்கையைத் தைக்கும் போது, நான் அவள் கணவன் அவளது உடைக்கு இது மாதிரி சிறு உதவிகள் செய்வதில் என்ன தவறு? என்பார். இந்த உதாரணம் அண்ணன் தம்பி உறவில் ஒற்றுமை வேண்டி குறிப்பிடுகிறேன். அத் திரைக்கதையின்படி அவர்கள் அப்படி இருப்பது ஒரு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக இருவரும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் ஓடும் என்கிற நிலை. இருப்பினும் அந்த புரிந்துணர்வு குடும்பத்தில் எல்லோருக்கும் இருந்தால் குடும்பங்களில் பிரிவினை என்பதே வராதே?

  ReplyDelete
 32. ம.தி.சுதா said...

  அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  http://mathisutha.blogspot.com/ //

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 33. Sivasankaran said...

  நன்றி. நானும் புதியதாக ஒரு ப்ளாக் கடை திறந்திருக்கிறேன், நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்.
  http://solaiyooran.blogspot.com/ //

  உங்கள் பிளாக் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 34. "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.

  குழந்தைகளுக்கு அது தானே எப்படி என்று புரியாத புதிராக உள்ளது?

  ReplyDelete
 35. சோலையூரான் said...

  //வெளி மனிதர் என் மனைவியின் ரவிக்கையைத் தைக்கும் போது, நான் அவள் கணவன் அவளது உடைக்கு இது மாதிரி சிறு உதவிகள் செய்வதில் என்ன தவறு? என்பார். இந்த உதாரணம் அண்ணன் தம்பி உறவில் ஒற்றுமை வேண்டி குறிப்பிடுகிறேன். அத் திரைக்கதையின்படி அவர்கள் அப்படி இருப்பது ஒரு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக இருவரும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் ஓடும் என்கிற நிலை. இருப்பினும் அந்த புரிந்துணர்வு குடும்பத்தில் எல்லோருக்கும் இருந்தால் குடும்பங்களில் பிரிவினை என்பதே வராதே? //

  நச்ன்னு ஒரு உதாரணம் சொல்லி, அதை அண்ணன் தம்பி உறவுக்கு ஒப்பிட்டது அருமை! நன்றி சார்.

  ReplyDelete
 36. புரியாத புதிர்..! said...

  "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.

  குழந்தைகளுக்கு அது தானே எப்படி என்று புரியாத புதிராக உள்ளது?//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 37. நல்ல சிந்தனையை தூண்டக்கூடிய பதிவு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

  ReplyDelete
 38. இடுகையும் பின்னூட்டங்களும் செம போடுபோடுதே :-)))

  ReplyDelete
 39. Lakshmi said...
  நல்ல சிந்தனையை தூண்டக்கூடிய பதிவு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 40. அமைதிச்சாரல் said...
  இடுகையும் பின்னூட்டங்களும் செம போடுபோடுதே :-)))//

  உங்களின் உளமார்ந்த பாராட்டுக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 41. ///சரி, "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் சகோதரர்களுடன், உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பழகுங்கள்.////


  சத்தியமான வார்த்தைகள் சார்
  விட்டு கொடுத்தவர்கள் கெட்டு போனதில்லை
  கெட்டு போனவர்கள் விட்டு கொடுத்ததில்லை

  எல்லோரும் படித்து பின்பற்றவேண்டிய கருத்து சார்

  ReplyDelete
 42. senthilkumar k to ஜேவி

  அண்ணன் தம்பி உறவில் பெற்றோரின் பங்கை கேளுங்கள், புத்திரசோகத்தை விட பெத்தவங்களுக்கு
  மிகபெரிய சோகம் தருவது பெற்ற பிள்ளைகளுக்கிடையே
  உள்ள ஏற்ற தாழ்வுதான்..இதற்காக பெற்றோர் செய்யும் சில முயற்சிகள் அண்ணன் தம்பிக்கிடையே நிரந்தர
  பகையை ஏற்படுத்திவிடக்கூடும்...!

  ReplyDelete