Saturday, September 24, 2011

பொறுமையை சோதித்த விஜய் டிவி!


நேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்தும் பத்து மணி முதல் குடும்பத்தினருடன் சேர்த்து விட்டேன். 'சூப்பர் சிங்கர் சீனியர் 3' பட்டத்தை யார் பெறப்  போகிறார்கள் என்று அறிவதில் அனைவருக்கும் ஓர் ஆர்வம். ஆளுக்கொரு பெயரை சொல்லி, அவர்தான் வெற்றிப் பெறுவார் என்று குடும்பத்தில் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் போல் தனித்து நின்றோம்.



எனக்கு பத்து மணிக்கு மேல் விழித்திருப்பது மிகவும் கடினமான விஷயம். பதினோரு மணிக்கு அறிவிப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பிறகு, இன்னும் அரை மணி நேரத்தில் அறிவித்து விடுவார்கள் என்று நினைத்து ஒவ்வொரு அரை மணி நேரமும் கடந்துக் கொண்டிருந்தது. கடைசியாக மறுநாள் அதாவது  இன்று   24/9/2011 காலை 1.10 மணியளவில் சாய் சரண் பட்டத்தை வென்றதாக அறிவித்தார்கள். 

இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது சிறு வயது பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள்தான் அதிகம். மறு நாள் பள்ளிக்கோ வேலைக்கோ செல்ல வேண்டிய அவர்கள், இவ்வளவு நேரம் விழித்திருப்பார்களா? அந்த நேரத்தில் போடப்படும் விளம்பரங்கள் மீது வெறுப்புதான் வருகிறது.  இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் 'விஜய் டிவி' பார்வையாளர்களின் மீதும் அக்கறைக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இது போன்ற பொறுமையை சோதிக்கும் நிகழ்ச்சிகளால், என்னைப் போன்ற சாதாரண ரசிகர்கள் டிவி பார்ப்பதையே நிறுத்தி விடுவார்கள்.

.

32 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்... அவர்களுக்கு விளம்பரம் போடவே நேரம் போதவில்லை.... நான் பத்தரை மணிக்கே தூங்கி விட்டேன். வீட்டில் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்... பார்த்துக்கொண்டு இருந்தவர்களில் பலர் இப்போது தூங்கிக் கொண்டு இருக்கவேண்டும்....

    ReplyDelete
  2. இந்த விளம்பரங்கள் தொல்லை எல்லா சேனல்களிலுமே இருக்கு. நிகழ்ச்சி பாக்கவே வெறுப்பா
    இருக்கு.

    ReplyDelete
  3. நான் பார்ப்பதில்லை:)!

    ReplyDelete
  4. ஆமாம் நானும் இந்த கொடுமையை அனுபவித்தேன்..

    ReplyDelete
  5. ஒன்பது மணி அடிச்சா தூங்கணுமுங்க, இப்படி இடியட் பாக்ஸே கதின்னு கெடந்தா எப்படி?

    ReplyDelete
  6. உண்மை தான். இழு இழு வென இழுத்து வெறுக்கடித்து விட்டார்கள். யார் ஜெயிப்பார் என்கிற சஸ்பேன்சால் மட்டுமே பார்க்க வேண்டியதாயிற்று

    ReplyDelete
  7. அன்பின் அமைதி அப்பா - யார் 40 லச்ச ரூவா வூட்ட வாங்கப் போறாங்கன்னு பாக்கறதுக்காக உக்காந்துருந்தேன் = லேசுல சொல்ல மாட்டேண்ணுட்டாணுங்களே ! ம்ம்ம்ம் = நட்புடன் சீனா

    ReplyDelete
  8. உபக ஆதங்கம் தான் எனக்கும்

    ReplyDelete
  9. இதுல இதுக்கு pay channel வேற...

    ReplyDelete
  10. இந்த எழவ இவ்வளவு பொறுமையாக பார்த்த சனங்கள் , சிக்னலில் சிறிது நேரம் பொறுமையாக இருக்கமாட்டார்கள்.

    ReplyDelete
  11. WE in srilanka too watched until early morning to justify who would win the title.because my family voted for SANTHOSH thru online

    ReplyDelete
  12. பொறுமையைச் சோதிக்கும் விளம்பரங்களும் நிகழ்ச்சிகளும்..

    ReplyDelete
  13. வெங்கட் நாகராஜ் said...

    // பார்த்துக்கொண்டு இருந்தவர்களில் பலர் இப்போது தூங்கிக் கொண்டு இருக்கவேண்டும்....//

    ஆமாம், பலரும் இதைத்தான் சொன்னார்கள்.

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  14. Lakshmi said...

    // இந்த விளம்பரங்கள் தொல்லை எல்லா சேனல்களிலுமே இருக்கு. நிகழ்ச்சி பாக்கவே வெறுப்பா இருக்கு.//

    அளவுக்கு மிஞ்சினால்...? இதுவும் அப்படித்தான். அன்று இரவு ஒருவரின் பொறுமையை அதிகப் பட்சமாக சோதித்தார்கள்...

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  15. ராமலக்ஷ்மி said...

    //நான் பார்ப்பதில்லை:)!//

    அப்பாடா.. தப்பித்தவர்கள் லிஸ்ட்ல இருக்கீங்க மேடம்:-)))!

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  16. !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    //ஆமாம் நானும் இந்த கொடுமையை அனுபவித்தேன்..//

    என்னத்த சொல்றது? இத்தோடு விட்டுவோம்.

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  17. Kanchana Radhakrishnan said...

    //unmai...
    Thanks for sharing//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  18. DrPKandaswamyPhD said...

    // ஒன்பது மணி அடிச்சா தூங்கணுமுங்க, இப்படி இடியட் பாக்ஸே கதின்னு கெடந்தா எப்படி?//

    முயற்சி செய்யணும் சார்!

    மிக்க நன்றி.

    ReplyDelete
  19. மோகன் குமார் said...

    //உண்மை தான். இழு இழு வென இழுத்து வெறுக்கடித்து விட்டார்கள். யார் ஜெயிப்பார் என்கிற சஸ்பேன்சால் மட்டுமே பார்க்க வேண்டியதாயிற்று//

    தாங்களும் இது குறித்து எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  20. cheena (சீனா) said...

    /அன்பின் அமைதி அப்பா - யார் 40 லச்ச ரூவா வூட்ட வாங்கப் போறாங்கன்னு பாக்கறதுக்காக உக்காந்துருந்தேன் = லேசுல சொல்ல மாட்டேண்ணுட்டாணுங்களே ! ம்ம்ம்ம் = நட்புடன் சீனா //

    ஆமாம், யார் வெற்றிப் பெற போகிறார்கள் என்று பார்க்கிற ஆர்வம்தான் காரணம்.

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  21. I am writing from abroad. I can't get Vijay TV directly. However, the next morning, I could see the entire program without any commercials on the website. My not getting Vijay TV is thus a blessing in disguise.

    ReplyDelete
  22. தமிழ்வாசி - Prakash said...

    //உங்க ஆதங்கம் தான் எனக்கும்//

    இது ஒட்டு மொத்த டிவி பார்வையாளர்களின் ஆதங்கம் தான். இனியும், இப்படி நடந்தால் பார்வையாளர்கள் குறைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    நன்றி சார்.

    ReplyDelete
  23. விச்சு said...

    //இதுல இதுக்கு pay channel வேற...//

    இதுதான் காசுக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறது என்பதோ!

    நன்றி சார்.

    ReplyDelete
  24. Thennavan said...

    //இந்த எழவ இவ்வளவு பொறுமையாக பார்த்த சனங்கள் , சிக்னலில் சிறிது நேரம் பொறுமையாக இருக்கமாட்டார்கள்.//

    ஆமாம், எனக்கும் இப்படி சந்தேகம் வரும். இருந்த போதும், நானும் சில நேரங்களில் மெதுவாக செல்லும் வாகனத்தின் பின்னால் செல்ல பொறுமையில்லாத காரணத்தால் தேவையில்லாமல் அவசரப்பட்டு முந்திச் செல்ல முயற்சி செய்வேன். ரோட்டுக்குச் சென்றுவிட்டாலே ஓர் அவசரம் நம்மை தொற்றிக் கொள்கிறது. இது அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  25. BANU NIYAZ said...

    //WE in srilanka too watched until early morning to justify who would win the title.because my family voted for SANTHOSH thru online//

    பார்த்துட்டு புலம்ப வச்சிட்டாங்க. இனி அவங்க புலம்புவாங்கன்னு நினைக்கிறேன்!
    மிக்க நன்றி.

    ReplyDelete
  26. இராஜராஜேஸ்வரி said...

    // பொறுமையைச் சோதிக்கும் விளம்பரங்களும் நிகழ்ச்சிகளும்..//

    ஆமாம் மேடம், அன்றைக்கு கடைசி வரை நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு 'பொறுமையின் சிகரம்' அப்படின்னு பட்டம் கொடுக்கப் போறதா ஒரு செய்தி வருது:-)))))))))))))!

    நன்றி மேடம்.

    ReplyDelete
  27. FOOD said...

    // பொறுமை இழந்துவிடுவோம்.//

    நன்றி சார்.

    ReplyDelete
  28. D. Chandramouli said...

    //I am writing from abroad. I can't get Vijay TV directly. However, the next morning, I could see the entire program without any commercials on the website. My not getting Vijay TV is thus a blessing in disguise.//

    'தப்பிச்சிட்டேன்'னு ஆங்கிலத்தில் சொல்லிட்டீங்க!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  29. bala said...

    // யார் ஜெயிச்சா என்னங்க பாட்டு கேட்டமா போனமான்னு இருக்கணும்//

    இனி பாட்டுக் கேட்கக்கூட பயமாத்தான் இருக்கு.
    'வலி தாங்க முடியல' சார்!

    மிக்க நன்றி.

    ReplyDelete
  30. நான் பார்ப்பதில்லை

    ReplyDelete
  31. Nihilnivethen said...

    //நான் பார்ப்பதில்லை//

    ரொம்ப நல்ல விஷயம்.

    மிக்க நன்றி.

    ReplyDelete