Wednesday, September 15, 2010

விபத்துக்கு பின்னே ஆபத்து - ஒரு பார்வை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி மாணவன் அந்தப் பள்ளியின் பேருந்து மோதிய  விபத்தில் இறந்துவிடுகிறான். இதனையறிந்த அந்த மாணவனின் ஊரைச் சேர்ந்த உறவினர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை தீக்கிரையாக்கிவுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக அந்தப்பள்ளியில் படித்த  மாணவர்களோ, ஆசிரியர்களோ சிக்கிக்கொள்ளவில்லை. இல்லையென்றால்  விவசாயக்கல்லூரி  மாணவர்களை இழந்தைப் போன்று  பலரை இழக்க வேண்டியதிருந்திருக்கும். 

பள்ளி மாணவனின் இறப்பில் நேரடித் தொடர்பு   அந்தப் பேருந்தை ஒட்டிய ஓட்டுனருக்கு  மட்டுமே.  ஒரு விபத்து நடந்தால் அதில் சம்பந்தப்பட்ட,  பாதிக்கப்பட்ட இருவருக்குமே பொறுப்பு உள்ளது.  இந்த விபத்து அந்த மாணவனின் கவனக்குறைவாலும் நிகழ்ந்திருக்கலாம் என்பதை நாம் மறுக்க முடியாது. எது எப்படியோ தண்டிக்கப்பட வேண்டியவர் அந்த ஓட்டுனர் மட்டும்தான். ஆனால், நடந்தது என்ன? பேருந்தை எரித்ததோடு பள்ளியையும் அதனுள் இருந்த ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் சான்றிதழ்களும் எரிக்கப்பட்டிருக்கிறது.   தாளாளரின் கார் மற்றும் வீடும் தப்பிக்கவில்லை. இந்த வன்முறைக் கும்பலின் வெறிச்செயலை  யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு விபத்துக்குப் பின்னும் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டால், நினைக்கவே பயமாகவுள்ளதுஇதைவிட கொடுமையான விபத்து கடந்த ஆண்டு,  வேதாரணியம் அருகே நடந்தது நினைவிருக்கும். அப்பொழுது, ஒன்பது குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர்.
. அன்றைய நிலையில் அந்த விபத்துக்கு முழுக்காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்குத்தான் என்பதை அனைவரும் அறிந்தபோதும், இதுமாதிரி யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்பதையும் நாம் இங்கு நினைவு கொள்ளவேண்டும். 


அண்மையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனை உறுதி செய்தபோது,
இதுபோல்  வன்செயல்  மீண்டும் நிகழாமல் இருக்க, இந்தத் தீர்ப்பு உதவும் என்றே
அனைவரும்   நினைத்தோம். ஆனால், அந்த சம்பவம் நிகழ்ந்த தர்மபுரிக்கு அருகிலேயே  இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதால்,  நம்மையெல்லாம் எதிர்காலத்தை நினைத்து  கவலைப்பட  வைக்கிறது. எத்தனைப் பேருக்கு தண்டனைக் கொடுத்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். கல்வியறிவும், தெளிவான சிந்தனையும், சுயநலமற்ற தலைவர்களும் கிடைத்தால்தான், நமது நாட்டு மக்கள் திருந்த வாய்ப்புள்ளது. அதுவரை சட்டமும் நியமும் மற்றவர்களுக்குத்தான் என்ற நினைப்பு
மாறப் போவதில்லை. .

25 comments:

 1. கல்வியறிவும், தெளிவான சிந்தனையும், சுயநலமற்ற தலைவர்களும் கிடைத்தால்தான், நமது நாட்டு மக்கள் திருந்த வாய்ப்புள்ளது. அதுவரை சட்டமும் நியமும் மற்றவர்களுக்குத்தான் என்ற நினைப்பு
  மாறப் போவதில்லை.


  .... எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. நல்லது விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.

  ReplyDelete
 2. அண்ணே,பதிவு சூப்பர்.எழுத்து மட்டும் இன்னும் கொஞ்சம் பெரிசு பண்ண முடியுமா?னு பாருங்கண்ணே

  ReplyDelete
 3. Chitra said...
  கல்வியறிவும், தெளிவான சிந்தனையும், சுயநலமற்ற தலைவர்களும் கிடைத்தால்தான், நமது நாட்டு மக்கள் திருந்த வாய்ப்புள்ளது. அதுவரை சட்டமும் நியமும் மற்றவர்களுக்குத்தான் என்ற நினைப்பு
  மாறப் போவதில்லை./


  .... எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. நல்லது விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.//

  நம்பிக்கைதான் வாழ்க்கை.
  நன்றி மேடம்.

  ReplyDelete
 4. சி.பி.செந்தில்குமார் said...
  அண்ணே,பதிவு சூப்பர்.எழுத்து மட்டும் இன்னும் கொஞ்சம் பெரிசு பண்ண முடியுமா?னு பாருங்கண்ணே//

  தங்களின் பாராட்டுக்கு நன்றி சார்.
  எழுத்தை பெரிதாக்கிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 5. கல்வி மிகவும் அவசியம் . அது மட்டுமே மனிதனை மனிதனாக்கும் . உண்மையான கருத்துகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. கூட்டம் சேரும் போது அடிப்படை அறிவும்,தர்க்க நியாயங்களும் ஒழிந்துபோவதுதான் வன்முறைக்கு காரணம்.

  நீங்கள் சொல்லியிருப்பதுபோலவே சமுதாய மாற்றம் தேவை.

  ReplyDelete
 7. //ஒவ்வொரு விபத்துக்குப் பின்னும் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டால், நினைக்கவே பயமாகவுள்ளது//

  உண்மைதான்..

  ReplyDelete
 8. மதுரை சரவணன் said...
  கல்வி மிகவும் அவசியம் . அது மட்டுமே மனிதனை மனிதனாக்கும் . உண்மையான கருத்துகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்//

  நன்றி சார்.

  ReplyDelete
 9. velji said...
  கூட்டம் சேரும் போது அடிப்படை அறிவும்,தர்க்க நியாயங்களும் ஒழிந்துபோவதுதான் வன்முறைக்கு காரணம்.

  நீங்கள் சொல்லியிருப்பதுபோலவே சமுதாய மாற்றம் தேவை.//

  நல்ல கருத்து. நன்றி.

  ReplyDelete
 10. அமைதிச்சாரல் said...

  //ஒவ்வொரு விபத்துக்குப் பின்னும் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டால், நினைக்கவே பயமாகவுள்ளது//

  உண்மைதான்..//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 11. சிந்திக்க வைக்கும் பதிவு அமைதி அப்பா. வன்முறைக்குப் பெயர் தட்டிக் கேட்பது அல்ல என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 12. இதுபோன்று வன்முறை செயலில் ஈடுபடுவோர் "படித்து கிழித்தவர்கள்..." இப்போது "எரிக்கிறார்கள்...". சிந்தனையை தூண்டும் பதிவு.

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  ReplyDelete
 13. மிகவும் சிந்தித்து எழுதப்பட்ட நல்ல பதிவு நன்றி

  ReplyDelete
 14. The problem is not about the accident.People were angry about the management for quite sometime. The accident triggered the anger and end up in big clash.

  ReplyDelete
 15. ரெண்டு, மூணு பேர் கூடிட்டாலே அங்க அறிவு மழுங்கி, அளவுக்கதிகமா உணர்ச்சி வசப்பட ஆரம்பிச்சுடுறாங்க.

  ReplyDelete
 16. ராமலக்ஷ்மி said...
  சிந்திக்க வைக்கும் பதிவு அமைதி அப்பா. வன்முறைக்குப் பெயர் தட்டிக் கேட்பது அல்ல என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

  உங்களுடைய பாராட்டுக்கு என்னுடைய
  நன்றி மேடம்.

  ReplyDelete
 17. RVS said...
  இதுபோன்று வன்முறை செயலில் ஈடுபடுவோர் "படித்து கிழித்தவர்கள்..." இப்போது "எரிக்கிறார்கள்...". சிந்தனையை தூண்டும் பதிவு.
  அன்புடன் ஆர்.வி.எஸ்.//

  தங்களுடைய கருத்துக்கும் பாராட்டுக்கும், நன்றி சார்.

  ReplyDelete
 18. மோகன் குமார் said...
  மிகவும் சிந்தித்து எழுதப்பட்ட நல்ல பதிவு நன்றி//

  தங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் மட்டுமே நான் தொடர்ந்து எழுதுவதற்கு காரணமென்றால் அது மிகையல்ல.
  நன்றி சார்.

  என்னைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கும் இங்கே நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

  .

  ReplyDelete
 19. Sridhar said...
  The problem is not about the accident.People were angry about the management for quite sometime. The accident triggered the anger and end up in big clash.//

  வணக்கம் ஸ்ரீதர் சார்,
  நான் ஊடகங்கள் வாயிலாகப் படித்தைக்கொண்டு இதை எழுதிவுள்ளேன்.

  மேலும் பல்வேறு ஊடகங்கள் வன்முறையை சித்தரித்து எழுதியவிதம், எனக்கு தாங்கமுடியாத
  வேதனையைக் கொடுத்தது.


  வன்முறையை எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பொழுது, தவறு செய்பவர்களை சட்டத்தின் பிடியில் மாட்டிவிட எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. பள்ளி நிர்வாகம் தவறு செய்தால் அதை சட்டத்தின் உதவியோடுதான் தண்டித்திருக்க வேண்டும். அதை விடுத்து இந்த மாதிரி வன்முறைகள், பல அப்பாவிகள் வாழ்வை வீனடித்துவிடும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.


  தாங்கள் வந்து கருத்துக் கூறியமைக்கு நன்றி.
  தொடர்ந்து வாருங்கள்.

  .

  ReplyDelete
 20. அன்பின் அமைதி அப்பா

  ஒருவனாக இருக்கும் வரை நல்லவன் - கூட்டமாக சேர்ந்து விட்டாலோ அவர்கள் கெட்டவர்களாகி விடுகிறார்கள். உணர்ச்சிக்கும், வன்முறையினால் ஏற்படும் சிறிய மகிழ்ச்சிக்கும் அடிமையாகி விடுகிறார்கள். சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். என்ன செய்வது .....

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 21. ஹுஸைனம்மா said...
  ரெண்டு, மூணு பேர் கூடிட்டாலே அங்க அறிவு மழுங்கி, அளவுக்கதிகமா உணர்ச்சி வசப்பட ஆரம்பிச்சுடுறாங்க.//

  ஆமாம், உண்மைதான்.
  தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றி மேடம்.

  ReplyDelete
 22. cheena (சீனா) said...
  அன்பின் அமைதி அப்பா
  ஒருவனாக இருக்கும் வரை நல்லவன் - கூட்டமாக சேர்ந்து விட்டாலோ அவர்கள் கெட்டவர்களாகி விடுகிறார்கள். உணர்ச்சிக்கும், வன்முறையினால் ஏற்படும் சிறிய மகிழ்ச்சிக்கும் அடிமையாகி விடுகிறார்கள். சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். என்ன செய்வது .....
  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா//

  தாங்கள் சொல்வது சரிதான். ஆனால், தனியாக இருந்தாலும் கூட்டமாக இருந்தாலும் நாகரிக வளர்ச்சியடைந்த மனிதனாக, எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதே நமது ஆசை!

  தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 23. அடப்பாவமே... ரெம்ப அநியாயங்க இது...

  ReplyDelete
 24. மக்களின் மனப்போக்கின் மாற்றம் அவ்வளவு ஆரோக்யமாக இல்லை என்பது நன்கு தெரிகின்றது.

  ReplyDelete