எங்கள் பகுதியில் ஒருவரை சந்திக்கும் பொழுது 'என்ன, சௌரியமா?'என்பார்கள். சென்னையில் 'சாப்பிட்டாச்சா?' என்கிறார்கள். இது மாதிரி சம்பிரதாயமாக பேசினால், எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால், நாம் அப்படி பேசுவது கிடையாது. மற்றவரின் மேல் உள்ள அக்கறையில் சில விசாரணைகள் செய்வோம். அப்படி பேசும் பொழுது நம்மையறியாமல் சில நேரங்களில் சில ஏடா, கூடமான கேள்விகளை கேட்டு, எதிரில் இருப்பவர்களை சங்கடப்படுத்தி விடுவோம். அப்படியான சில கேள்விகள் இங்கே.
ஒரு பெண்ணையோ ஆணையோ புதிதாக சந்திக்கிறோம் என்றால் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டால்தான் நடப்பை தொடரலாமா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும். அப்படி அறிந்து கொள்ள சில கேள்விகள் அவசியம். அதில் சில... 'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று கேட்டால் ஆண்களாக இருந்தால் வருத்தப் படாமல் பதில் சொல்வார்கள். திருமணமாகாத பெண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் வருத்தமடைவார்கள். அதற்குக் காரணம், தனது தோற்றம் திருமணமான பெண்போல் தோன்றுகிறதோ என்று நினைத்து வருத்தமடைவார்கள்.
சரி, திருமணமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகள் உண்டா? என்று கேட்க முடியாது. அதனால், எத்தனைக் குழந்தைகள் அல்லது குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்போம். இந்தக் கேள்விக்கு, குழந்தை இல்லாத பெண்கள் மனமொடிந்து விடுகிறார்கள். 'குழந்தையும் இருக்கு' என்று வைத்துக் கொள்வோம். 'என்ன படிக்கிறார்கள், எங்கு படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள்?' என்று கேட்போம். அப்படி கேட்டால், நன்றாக பிள்ளைகள் படித்தால் இந்தக் கேள்வியை மகிழ்ச்சியுடன் எதிர் கொள்வார்கள். இல்லையெனில் கேள்விக் கேட்ட நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
என்ன வேலை பார்க்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம்? என்பன போன்ற கேள்விகள் ஆண்களை சங்கடப்படுத்தும்.
படித்து முடித்த பிள்ளைகளின் பெற்றோரிடம், உங்கள் மகனுக்கு/மகளுக்கு வேலைக் கிடைத்து விட்டதா? (வேலை கிடைத்திருந்தால், அவர்கள் மகிழ்ச்சியாக பதில் சொல்வார்கள்) அப்புறம் மகனின்/மகளின் திருமணம் குறித்தக் கேள்வி. இந்த மாதிரி கேள்வியைத் தவிர்ப்பதர்க்காகவே எனக்கு தெரிந்த பெண்மணி(மகளுக்கு வரன் அமையவில்லை) திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதையே தவிர்த்து விட்டார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று நேர்முகத் தேர்வுக் கணக்காக கேள்விக் கேட்கவும் முடியாது. சிலர், மற்றவரைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள், அடுத்தவரின் நல்லது கெட்டதுகளில் பங்கு கொள்ள மாட்டார்கள். இப்படி, யாரிடமும் அதிகம் பேசாதவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. எப்பொழுதும், மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவோ அல்லது மற்றவர்களிடம் அதிகம் பேச நினைப்பவர்களின் நிலை கத்தி மேல் நடப்பதற்கு சமம்!
.
உண்மை தான்..:)
ReplyDeleteநல்ல பதிவு :).உங்கள் எண்ணங்களை பதிந்திருக்கிறீர்கள் .ஒருவருடயை மனமும் உடையாமல் கேள்வி கேட்பது கடினம் ......சிலர் புள்ளிகள் பெற்றால் அவர்களாகவே வந்து சொல்லும் வரை நான் கேட்பதில்லை .. நல்ல புள்ளி என்றால் அவர்களாகவே வந்து சொல்வார்கள் :)
ReplyDeleteஇனிமே நான் தேவை இல்லாம அதிகம் பேச மாட்டேனுங்கோ...
ReplyDeleteநல்ல பதிவு சார். நாம் கேள்வி கேட்கும் புது யோசிச்சு தான் கேட்கணும் போல
ReplyDelete//டக்கால்டி said...
இனிமே நான் தேவை இல்லாம அதிகம் பேச மாட்டேனுங்கோ... //
:))
உங்க கிட்டே ஒரு கேள்வி.. வேணாம் ... வம்பு.. ஹா ஹா ஹா
ReplyDeleteஇங்கே நட்பு வட்டத்தில் பொதுவாக, "Whats up?" என்று கேட்டு கொள்வது உண்டு. குடும்ப விஷயங்களை சொல்ல விரும்புவர்கள் மட்டும், அந்த கேள்விக்கு பதில் சொல்லி கொள்ள வேண்டியதுதான்... அப்படி ஒரு ஜெனரல் கேள்வி கேட்க பழகிக் கொள்ள வேண்டியதுதான். :-)
ReplyDeleteஎனக்கு நீண்ட நாள்களாக என் மனதை நெருடிய தகவல்
ReplyDeleteஉண்மைதான் சார், விவரம் தெரியாமல் விசாரிப்பது கஷ்டம், எனவே கவனமாக விசாரிப்பது நல்லது
ReplyDeleteஇல்லையனில் அவர் மட்டுமல்ல நாமும் சங்கடப்பட வேண்டிருக்கும்.
உண்மைதான். கேட்காமலே இருந்தாலும் அக்கறையின்மை போல ஆகிவிடும். சித்ரா சொல்வது போல ‘பிறகு.. வேறென்ன விசேஷம்..’ என மெதுவா இழுத்தபடி கேட்பது நம்ம ஊரிலும் வழக்கமே.
ReplyDeleteபேச்சு வழக்கு உண்மையில் மாறுபட்டது தான்... நானும் பல இடங்களில் சிக்கலில் மாட்டியிருக்கேன்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபதிவர்களிடம் எப்படி உங்களுக்கு இவ்வளவு ஹிட்ஸ் என கேக்கக் கூடாது போல. ஹி. ஹி...
பேசுவது பற்றி என்னுடைய பழைய பதிவு ஒன்று.
http://aathimanithan.blogspot.com/2010/01/blog-post_20.html
இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி.
ReplyDelete