Friday, March 4, 2011

தேர்தல் தேதியும் விளைவுகளும்!

தேர்தல் தேதி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்கள். மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படும் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. ஏற்கனவே கிரிக்கெட் மாணவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கிவிட்டது. இப்பொழுது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியால் விளையப்போகும் நன்மைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
  1. குறைந்த காலத்துக்குள் தேர்தல் வருவதால் பொது சுவரில் வெள்ளையடித்து விளம்பரம் எழுதவே நேரம் பத்தாது. அதனால், தனியார் வீட்டுச் சுவர்கள் தப்பிக்கும். வீட்டு உரிமையாளருக்கு தேர்தலுக்கு பிறகு வெள்ளையடிக்கும் செலவு மிச்சம். மேலும், வீட்டு உரிமையாளருக்கு எந்தக் கட்சிக்கு சுவரைக் கொடுப்பது என்கிற பிரச்சினை கிடையாது.
  2. எப்படியும் தேர்தல் வரை எடுபிடிகளுக்கு சாப்பாடு, தங்குமிடம் அளிக்க வேண்டிய செலவு வேட்பாளருக்கு குறையும்.
  3. நாட்கள் அதிகமிருந்தால் வாக்காளரை திரும்ப திரும்ப சந்தித்து மீண்டும் மீண்டும் 'கவனிக்க' வேண்டும். இப்பொழுது ஒருமுறை சந்திக்கவே நேரம் பத்தாது.
  4. அரசியல் கட்சிகளுக்கும் நல்லதுதான். இல்லையெனில், கூட்டணி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் .
  5. நாட்கள் அதிகமிருந்தால் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவை பிரச்சாரம் என்கிற பெயரில் அதிகமாக வீணடிக்கப்படும்.
  6. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வேட்பாளர்களை களமிறக்க கட்சிகள் பயப்படும். ஏனெனில், பிரச்சாரம் செய்ய நேரமில்லை என்பதால் 'நிச்சயம் வெற்றிப் பெறுவார்' என்கிற நபர்களைத்தான் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள்.
  7. அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
8. எந்தக் கட்சி வெற்றிப் பெரும் என்று விலாவாரியாக எழுதி காகிதத்தை வீணடிக்காமல், சுருக்கமாக தங்களுடைய கணிப்பை பத்திரிகைகள் வெளியிடும்.
9. அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏப்ரல் மற்றும் மே மாத வெயிலில் பிரச்சாரம் செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

10. ஏப்ரல் 13 லிருந்து மே 13 க்குள் அரசியல்கட்சிகள் அணிமாறிக் கொள்ளலாம்.
11. மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற, மே மாத வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டியதில்லை.

இப்படியே சிந்தித்துப் பாருங்கள், இன்னும் நூறு நன்மைகள் மறைந்து கிடக்கும். எல்லாக் கட்சிகளும் எதற்கு ஒன்று சேர்கிறார்களோ இல்லையோ, தேர்தல் தேதியை மாற்ற கோரசாகக் குரல் கொடுக்கிறார்கள். அப்படி தேதி மாற்றப்பட்டால் மேற்கண்ட நன்மைகள் கிடைக்காமல் போகலாம். ஆனால், வேறு சில நன்மைகள் கிடைக்கும். அது, தேதி மாறினால் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்படும்.



9 comments:

  1. ///அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.///

    அதெல்லாம் ஏமாற்ற இந்நேரம் புது வழிகளை கண்டுபிடிசிடுவாங்க..

    சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

    ReplyDelete
  2. மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற, மே மாத வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டியதில்லை.


    ..... ஒரு நல்ல விஷயமாவது இருக்குதே!

    ReplyDelete
  3. தமிழ்வாசி - Prakash said...

    ///அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.///

    அதெல்லாம் ஏமாற்ற இந்நேரம் புது வழிகளை கண்டுபிடிசிடுவாங்க..//

    ஏமாறப் போறோம்னு தெரிந்தும் ஏமாறாமல் இருக்க முடியவில்லை.

    நன்றி சார்.

    ReplyDelete
  4. மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற, மே மாத வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டியதில்லை.


    ..... ஒரு நல்ல விஷயமாவது இருக்குதே!//

    இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

    நன்றி மேடம்.

    ReplyDelete
  5. மக்களுக்கு நன்மை நடந்தால் சரிதான்,நீங்கள் கூறுவதுபோல் அரசியல்வாதிகளின் அட்டகாசம் குறைய
    வாய்ப்பு இருக்கிறது,தேர்தல் கமிஷன் நன்றாக செயல்படுகிறது,ஆனால் சின்ன வேலையாக இருந்தாலும் படிப்புதான் முதல் தகுதி. வேட்பாளருக்கு --------வேண்டாமா ??????????

    ReplyDelete
  6. "தேர்தல் காலம் குறைக்கப்பட்டிருப்பது ஒருவகையில் நல்ல விஷயம்தான். பணம்,சாராயம்,பிரியாணி, பரிசுப் பொருட்கள் விநியோகம் எல்லாம் குறையுமே..."
    திரு.நரேஷ்குப்தா, முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி. ஜூனியர் விகடன், 9.3.11, பக்கம்-3.

    *********************************

    நமக்கு முன்னாள் தேர்தல் கமிஷனரிடமிருந்து ஆதரவு கிடைச்சிருக்கு!

    ReplyDelete
  7. manivannan said...

    மக்களுக்கு நன்மை நடந்தால் சரிதான்,நீங்கள் கூறுவதுபோல் அரசியல்வாதிகளின் அட்டகாசம் குறைய
    வாய்ப்பு இருக்கிறது,தேர்தல் கமிஷன் நன்றாக செயல்படுகிறது,ஆனால் சின்ன வேலையாக இருந்தாலும் படிப்புதான் முதல் தகுதி. வேட்பாளருக்கு --------வேண்டாமா ??????????//

    படித்தவர்கள் அரசியலைக் கண்டு ஒதுங்கும் போது, ரௌடிகள் அரசியலுக்கு வருவது தவிர்க்க முடியாதது.

    நன்றி சார்.

    ReplyDelete
  8. இந்த வருடம் சனிப்பிரளய ஆண்டு .
    தேர்தல் தேதி 13.4.2011( 4 +4 +4);4 எண் -தர்மவானின் எண்-துஷ்டர்கள் அழிந்து நல்லவர்கள் தலை தூக்குவார்கள் என்கிறது எண் சாத்திரம்;
    நடக்கும் நிகழ்சிகளும் அவ்வாறே காட்டுகின்றன.
    நமது 'பகுத்தறிவு' பகலவன்கள் இந்தத்தேதியைக் கண்டு பயப்படுவதும் இதனால்தானா என்பது 13.5.2011 தெரிந்து விடும்.
    மூடக்கதை என்று ஒதுக்காதீர்கள் ,நண்பர்காள்!

    ReplyDelete