அண்மையில் ஏசி வாங்குவதற்காக குரோம்பேட்டையில் உள்ள பிரபலக் கடையில் விசாரித்தேன். ஸ்டாக் இல்லை, ஆர்டர் கொடுத்தால் மூன்று நாட்களுக்குள் வாங்கித் தருகிறேன் என்றார்கள். ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால், ஐந்து நாட்களுக்கு பிறகு, "எங்களுக்கும் கம்பெனிக்கும் பேமென்ட் பிரச்னை இருக்கு, அதனால அனுப்ப மாட்டேங்கிறாங்க. வேணும்ன வேற பிரான்ட் யோசிங்களேன்." என்றார்கள். எனக்கு விருப்பமில்லாததால் பணத்தை வாங்கி வந்துவிட்டேன்.
பிறகு http://www.sulekha.com/ பதிவு செய்தேன். பல்வேறு கடைகளின் போன் நம்பர் எஸ் எம் எஸ் அனுப்பினார்கள். அதில்
Unitech Air Conditioner
T. Nagar, Chennai - 600017
Mobile: 9840175547
என்ற கடையின் நம்பருக்கு போன் செய்தேன். அங்கு எனக்கு கிடைத்தப் பதில்தான் இந்தப் பதிவுக்குக் காரணம்.
நான் கேட்ட ஏசி தன்னிடம் இல்லை என்று சொன்னதோடு, பிரபலக் கடையின் பெயரைச் சொல்லி அங்குச் சென்றால் உடன் வாங்கிவிடலாம் என்றார்.
நான் " உங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்களை, அடுத்தக் கடைக்கு வழிக் காட்டும், உங்கள் நல்ல உள்ளத்தைப் பாராட்டுகிறேன்" என்றேன். அதற்கு அவர், " உங்களுக்காக ஆர்டர் கொடுத்து, நான் வாங்கித் தருவதனால் ஒருவாரமாகும். இந்த சம்மர்ல ஒரு வாரம் சாமாளிப்பது எவ்வளவு கஷ்ட்டம்." என்றார். நான் தி.நகர் வந்தால் தங்களை சந்திக்கிறேன் என்று நன்றி சொல்லி வைத்துவிட்டேன். அந்த நல்ல மனிதரின் பெயரைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவில்லை! அப்பொழுது, இப்படி ஒரு பதிவு எழுதப் போகிறேன் என்று நினைக்கவில்லை.
இந்தப் பதிவின் நோக்கம், நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே! மற்றபடி, பிறரைக் குற்றம் சொல்ல வேண்டாம் என்பதால், மற்றக் கடைகளின் அடையாளத்தைத் தவிர்த்துவிட்டேன்.

Appuram... AC vaangiteengalaa?
ReplyDeleteஇருவேறு அனுபவங்கள்!! இப்படியும் மனிதர்கள், அப்படியும் மனிதர்கள்!!
ReplyDeleteஏசியில் கோடையைச் சமாளிங்க. மனிதர்களில் பலவகை.
ReplyDelete//நல்லவர்களும் இருக்கிறார்கள்// அதிலென்ன சந்தேகம்? மழை இன்னும் பெய்கிறதே?
ReplyDeleteஅட இப்படியும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅந்த நல்ல உள்ளம் கொண்டவருக்கு உங்கள் சார்பாக பாராட்டுகள்,உண்மையை சொன்னதால் உங்கள் பதிவை படிக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
ReplyDeleteநல்லவர்களும் இருக்காங்க. ஏ. சி வாங்கினீங்களா?
ReplyDeleteஇன்றே முதல் வருகை உங்கள் தளத்தில்.... நல்ல மனிதர்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் :)
ReplyDeleteஅவரைவிட நீங்கள் தான் மிக நல்லவர்.
ReplyDeleteஒரு நல்ல உள்ளத்தைக் கண்டதும் ( அவர் யாரோ... யவரோ...)அவரை மனத்தில் பதித்து எங்களுக்கும் பதித்தீர்களே....வாழ்த்துக்கள்.
நன்றி.
அந்த மனிதர் நினைத்தால் நாலு நாளில் வரும் மூணு நாளில் வரும் என்று சொல்லி உங்களிடம் பணம் வாங்கி அந்த பெரிய கடையில் வாங்கித் தந்திருக்கலாம். ஆனால் உண்மையை சொல்லியிருக்கிறார். இதுபோல மனம் எல்லோருக்கும் வருவதில்லை.
ReplyDeleteநல்ல மனிதர்.....
ReplyDeleteநீங்களும் தான்.... அவரை பற்றி பதிவிட்டு.....
இப்படியும் இருக்கிறார்கள் என பகிர்ந்தமைக்கு......
"அந்த நல்ல மனிதருக்கு பாராட்டுக்கள் ! பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் சார் !"
ReplyDeleteஅக்கறையுடன் வழி சொல்லியுள்ளார். பாராட்டுக்குரியவர். பெயரைக் கேட்டுப் பதியாததும் ஒருவகையில் நல்லதே. கடையின் உரிமையாளரெனில் பிரச்சனையில்லை. ஊழியராக இருந்தால்?
ReplyDelete