கடந்த மாதம்தான் எனக்கு கதிர்'ஸ் மின் இதழ் -ஐ பற்றிய அறிமுகம் கிடைத்தது.
அதனுடைய கட்டுரைகள், கதைகள் மற்றும் நகைச்சுவைகள் என்று அனைத்தும் மிகவும் தரத்துடனும், தமிழகளவில் பத்திரிக்கையில் தொடர்ந்து நகைச்சுவைகள் எழுதிவரும் எழுத்தாளர்களின் ஆக்கங்களுடனும், வெளியிடப்படுவதை அறிந்தேன்.
முகநூலில் எழுதலாம் என்று நினைத்திருந்த 'ஜோக்' ஒன்றை 'கதிர்ஸ்'க்கு அனுப்பினேன். அதுவும் இந்த வாரம் வந்த இதழில் வெளிவந்துள்ளது. நன்றி S.s. Poonkathir சார்.
நான் அதிகம் 'ஜோக்ஸ்' எழுதுபவனல்ல. எப்போதாவதுதான் எழுதுவேன். ஆனால், என்னுடைய பேச்சில் நகைச்சுவை மறைந்திருக்கும். அது எல்லோருக்கும் புரியாது. சில நேரத்தில் எனது பேச்சுக்கு நானே, 'கோனார் நோட்ஸ்' போடுவதுண்டு. அதுவும் புரியாமல் விழிப்போரும் உண்டு. அப்படிப்பட்டவர்களிடம், நானும் மாட்டிக்கொண்டு விழித்ததுண்டு!🙄
"நகைச்சுவையில் இரண்டு வகை உண்டு!" என்று என்னுடன் ஒருவரைப் பற்றி பேசும்போது, வழக்கறிஞர்
திரு ச. தமிழ்வேந்தன் குறிப்பிட்டார். மேலும், "அது வடிவேல் நகைச்சுவை, சந்தானம் நகைச்சுவை" என்றார். அதற்கு நான் "புரியவில்லையே!" என்றேன்.
அவர் சொன்னார், "வடிவேல் நகைச்சுவை என்பது தன்னைதானே குறைத்து மதிப்பிட்டுக்காட்டி நகைச்சுவையாக பேசுவது.
சந்தானம் நகைச்சுவை என்பது, மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டுக்காட்டி
நகைச்சுவையாக பேசுவது!" என்றார்.
அது உண்மைதான் என்பதை நாமும் அறிவோம்.
இன்றும் பலர் அடுத்தவர்களின் பலஹீனங்களை சொல்லி மற்றவர்களை சிரிக்க வைத்து தனக்குத்தானே 'நகைச்சுவையாளன்' என்ற பட்டத்துடன் அலைபவர்களுமுண்டு. அந்த நகைச்சுவைக்கு
'அவல நகைச்சுவை!' என்றும் அந்த நண்பர் குறிப்பிட்டார்.
கதிர்’ஸ் (ஜூலை 16-31, 2021) 22-வது இதழ் உங்கள் பார்வைக்கும், நண்பர்களுக்கு பகிரவும் இங்கே!
பல வருடங்களுக்கு முன்னர் விகடனில் வெளிவந்த எனது நகைச்சுவையையும் இங்கே இணைத்துள்ளேன்.
அது சரி, தலைப்பைப் பார்த்துவிட்டு
படிக்க வந்தவர்கள், "நீயும், உன் நகைச்சுவையும்!" என்று மனதில் நினைப்பது எனக்கு புரியாமலில்லை!
No comments:
Post a Comment