Friday, April 2, 2010

ஏ.சி.வாங்க போறிங்களா...? இதைப் படிங்க முதலில்..!

அண்மையில் எனது நண்பருடன் நீண்ட நேரம் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததது, பேச்சு பல தளங்களில் பயணித்தது. கடைசியாக வெயில் பற்றிப் பேசினோம். இந்த வெயிலைப் பற்றி விரிவாக பேசினார் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வெயிலை சமாளிக்க வீட்டில் ஏ.சி. இல்லாமல் வாழமுடியாது என்று நான் கூறினேன், அதற்கு அவரின் பதில் எனக்கு ஆச்சர்யாமாக இருந்தது. “இது வெயிலின் ஆரம்பம், கொஞ்சம் கூடுதலான தாக்கம் நமது உடலில் ஏற்படுத்தும். இதுவரை நாம் மிதமான வெப்பநிலையில் பழகிவிட்டு, திடீரென்று வெப்பநிலையில் மாறுதல் ஏற்படும்பொழுது, நமது உடலில் தடுமாற்றம் ஏற்படுவது இயற்கையே. கொஞ்ச நாட்கள் சென்றுவிட்டால், இந்த வெப்பநிலைக்கு தகுந்தவாறு நம் உடல்நிலை மாறிவிடும். அதுவரை அளவுக்கு அதிகமான நீர் மற்றும் உடலுக்குக் குளிச்சியான பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் உட்க்கொண்டால், வெப்பநிலை மாறுபாட்டிலிருந்து தப்பிக்கலாம்”

மேலும் சில செய்திகளையும் சொன்னார். “கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்(இரட்டையர்கள்) அவர்களின் வீடு, கார் இரண்டிலும் ஏ.சி. இருப்பதால், ஏ.சி.இல்லாத வகுப்பில் பாடம் படிக்க முடியாமல், வருகையைப் பதிவு செய்துவிட்டு காருக்குள் சென்று அமர்ந்துகொள்வார்களாம். இத்தனைக்கும் நன்றாக படிக்கூடிய மாணவர்கள் மேலும் வகுப்பை புறக்கணிக்க விரும்பாதவர்கள். அந்த மாணவர்களின் செயலை எப்படி எடுத்துக்கொள்வது?! வீடு, கார் என்று குளிரில் வாழ்ந்துவிட்டு வகுப்பின் வெப்பநிலையை அவர்கள் உடல் ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதுதான் காரணம்”

நண்பரின் இந்த விளக்கத்தை கேட்டப்பின்பு நானும் என்னுடையக் கருத்தை மாற்றிக்கொண்டேன். இப்பொழு நான் சந்திப்பவர்களிடம் "வெயிலைப் பற்றி கவலைப்படாதீர்கள். கொஞ்சநாளில் நமது உடல் இந்த வெப்பநிலையை ஏற்றுக்கொள்ளும் அவசரப்பட்டு ஏ.சி.வாங்கி கஷ்டப்படவேண்டாம். வீடு,கார்,அலுவலகம் எல்லாமே ஏ.சி. என்றால், அது சரியாக இருக்கும்" என்று சொல்லிவருகிறேன்

ஏ.சி. வாங்க விரும்பும் எனது குடும்பத்திற்கான பதிவு இது.
உங்களுக்கு?!

18 comments:

 1. நல்ல பதிவு.
  உண்மைதான். நம் உடல் வசதிகளுக்கு பழகிவிட்டால், அதற்கே அடிமையாகி விடுகிறது. இயற்கையோடு இயைந்து வாழ முடியாமல் போகிறது.

  ReplyDelete
 2. அம்பிகா மேடம்,
  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 3. நல்ல பதிவு சார் நன்றி

  ReplyDelete
 4. மோகன் சார், நன்றி.

  ReplyDelete
 5. நான் படித்து, வேலைக்கு சென்று சில வருஷங்கள் வரை மின் விசிறி கூட இல்லாமல் இருந்தோம். அப்போது எல்லாம் உடல் நன்றாகத்தான் இருந்தது. ஒன்றும் ஆகிவிடவில்லை.

  மேலும் சுற்றுப்புற சூழ்நிலை நன்கு இருக்க வேண்டுமென்றால், வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தால் குளுமை நன்கு இருக்கும்.

  ஏசி என்பது இரண்டாம் பட்சமாகிவிடும்.

  ReplyDelete
 6. வணக்கம் ராகவன் சார்,
  முதல் முறையாக வந்து தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

  //வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தால் குளுமை நன்கு இருக்கும். //

  உண்மைதான்.
  ஆனா, இருக்கிற மரத்தை வெட்டாம இருக்காங்களான்னு பார்ப்போம்..

  எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மிகப்பெரிய பணக்காரர், மெத்தப் படித்தவர் மேலும் பிள்ளைகள் மற்றும் மருமகள் மென் பொருள் துறையில் வல்லுனர்கள், ஆனால் அவர்கள் வீட்டில் காலையில் விறகு அடுப்பில்தான் வெந்நீர் போடுகிறார்கள்.ஒரே புகை மூட்டம், பொல்லுஷன்,குளோபல் வார்மிங் பற்றி அவர்களுக்குத் தெரியாததா?

  படித்தவர்கள் அனைவரும் சிந்திப்பதில்லை என்பதற்கு அந்த குடும்பம்மே சிறந்த உதாரணம்.

  ReplyDelete
 7. கண்டிப்பாக ஏசி என்பது அத்தியாவசியமில்லாத ஒன்று தான்..

  ஆனால், நமது உடலை பொருத்தவரை எந்த ஒரு கால நிலையிலும் ஒரே உடல் வெப்ப நிலையை தான் கொண்டிருக்கும்.. உடலிலிருந்து வெளிவரும் வெப்பத்தின் அமைப்பு தான் மாறுபடும்..

  அதிக வெயிலாய் இருந்தால் நம் உடலில் இருந்து வியர்வையாயும், மாய்ஸ்ட்ராயும் (லேட்டண்ட் ஹூட்) அதிக வெப்பம் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.. இதுவே குளிர் காலமென்றால், வெப்ப இழப்பு வெப்ப நிலை குறைவாலயே உடல் வெப்ப நிலையை சமப்படுத்திக் கொள்ளும்..

  எல்லா இடத்திலும் ஏ சி என்றால் பிரச்சினை இல்லை தான்..

  அதே போல அட்லீஸ்ட்.. மனிதன் நிம்மதியா தூங்கறதுக்காது இந்த மாதிரி கம்பர்ட்டா ஏ சி இன்ஸ்டால் பன்னலாம் தானே? மத்த நேரத்தில தான் வெயில் தாளிக்குது..:)

  ReplyDelete
 8. Rithu`s Dad said...

  //அதே போல அட்லீஸ்ட்.. மனிதன் நிம்மதியா தூங்கறதுக்காது இந்த மாதிரி கம்பர்ட்டா ஏ சி இன்ஸ்டால் பன்னலாம் தானே? மத்த நேரத்தில தான் வெயில் தாளிக்குது..:)//

  உண்மைதான் சார்.
  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
  இந்த பதிவே கடன்பட்டு ஏ.சி. வாங்க முற்படும் மற்றும் ஏ.சி.வாங்க வசதி இல்லாமல் அவதிப்படும் எண்ணற்ற குடும்பத்தையும் மனதில்கொண்டு எழுதினேன். அவர்கள் இந்த வெயிலைத் தாங்கிக்கொள்ள மனதை தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம். மற்றபடி ஏ.சி. வைத்துக்கொள்ளும் தகுதி உள்ளவர்கள் தாராளமாக வைத்துக்கொள்ளலாம் என்பதில் நான் மாறுபடவில்லை.

  ReplyDelete
 9. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 10. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 11. நல்ல பதிவு.

  ///அம்பிகா மேடம்,///

  சொல்வதை நானும் அதரிக்கிறேன் அமைதி அப்பா.

  ReplyDelete
 12. prabhadamu said...

  நல்ல பதிவு.

  ///அம்பிகா மேடம்,///

  சொல்வதை நானும் அதரிக்கிறேன் அமைதி அப்பா. //

  நன்றி பிரபாதாமு மேடம்.

  ReplyDelete
 13. nice blog sir. innikuthan unga blog padichen nalla eluthareenga. vaalthukal

  ReplyDelete
 14. LK said...

  nice blog sir. innikuthan unga blog padichen nalla eluthareenga. vaalthukal//

  உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி LK சார்.

  ReplyDelete
 15. நல்ல பகிர்வு சார்.

  ReplyDelete
 16. அக்பர் said...

  நல்ல பகிர்வு சார்.//


  நன்றி அக்பர் சார்.

  ReplyDelete
 17. அன்புடன் அருணா said...

  நல்ல பகிர்வு சார்.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete