Wednesday, April 21, 2010

நடப்பது என்ன...?

கடந்த சில நாட்களில் நடப்பவைகளை நினைத்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன், அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்...

பல்லாவரத்தில் கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் காரை ஓட்டிச் சென்று, மேலிருந்து
கீழே ரயில்வே பாதையில் விழுந்து அடிபட்ட டிரைவர் பற்றிய செய்தி. அதிர்ஷ்டவசமாக ஹை டென்ஷன் மின்சார கம்பியில் அந்த கார் விழவில்லை, மேலும் அந்த சமயத்தில் தொடர்வண்டி வரவில்லை. இல்லையென்றால் விபத்து எப்படி முடிந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.


முசிறியில் +2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மாயமான செய்தி. பிறகு மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வேறுகதை.


தர்மபுரியில் +2 விடைத்தாளை திருத்திய பிறகு, கிழித்து கழிப்பறையில் வீசிய ஆசிரியையின் செயல்.


வேதாரணியம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வில் ரவீந்தரன் என்கிற மாணவனுக்கு, கணிதத்தில் முதலில் 92 மதிப்பெண் போடப்பட்டு பின்பு அது மறுகூட்டலில் 97 ஆக உயர்ந்துள்ளது. மொத்த மதிப்பெண்ணும் 473 லிருந்து 478 ஆக உயர்ந்தது.அந்த மாவட்டத்தில் 474 மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்த 35 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது.
ஆனால் மாணவன் ரவிந்த்ரனுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை.

பல வழிகளில் முயற்சித்தும் லேப்-டாப் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் நீதிமன்றம் சென்று லேப்-டாப் கிடைப்பதற்கான நீதிமன்ற உத்திரவும் பெற்றுள்ளான். அதற்கு உதவி புரிந்த வழக்கறிஞர் திரு.காசிநாத பாரதியையும் பாராட்டவேண்டும். இவர் பல பொதுநல வழக்குகளைத் தொடர்பவர் என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாமே நமக்கென்ன என்ற அலட்சியத்தால் வந்ததுதான்.

பல்லாவரத்தில் அந்த பாலத்தின் முகப்பில் சிறு கல்லைவைத்திருந்தாலோ அல்லது கயிற்றை கட்டியிருந்தாலோ அந்த விபத்தைத் தடுத்திருக்கலாம்.

தபால்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் இருநூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதவேன்டியக் கட்டாயம்.


விடைத்தாளை கிழித்த ஆசிரியைக்கு தெரியுமா அதை எழுதிய மாணவன் மற்றும் பெற்றோரின் தூக்கமில்லா இரவுகளைப் பற்றி?

மாணவன் ரவீந்தரன் விஷயத்துக்கு வருவோம். மாணவன் தேர்வில் கூட்டலை தவறாகப் போட்டால் அவனது வாழ்வு பாழாகும், இங்கு விடைத்தாளில் தவறாகப் கூட்டல் போட்டது ஆசிரியர் ஆனால் அவதிப்பட்டது மாணவன். என்ன வினோதம் பாருங்கள்.

தொலைக்காட்சியில் காசு வாங்கிக்கொண்டு அழுவும் பெண்களைப் பார்த்து அழுவும் நாம், மேலே பாதிக்கப் பட்டவர்களுக்காக சிறிது நேரம் வருத்தப்படுவதுக் கூடயில்லை என்பது மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

39 comments:

 1. என்ன நடக்கிறது தமிழகத்தில். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். மனதில் கவலை உண்டாகிறது. :((

  ReplyDelete
 2. //அந்த பாலத்தின் முகப்பில் சிறு கல்லைவைத்திருந்தாலோ அல்லது கயிற்றை கட்டியிருந்தாலோ அந்த விபத்தைத் தடுத்திருக்கலாம்.//

  அவர்கள் உயிர்களை மதித்திருந்தால்.

  //நமக்கென்ன என்ற அலட்சியத்தால் வந்ததுதான்//

  சரியாகச் சொன்னீங்க. எத்தனை பேரின் மன உளைச்சல்களுக்கு காரணமாகின்றன இத்தகைய அலட்சியங்கள்.

  ReplyDelete
 3. நீதி புதைக்கப்பட்டு பல நாள் ஆகிவிட்டதுபோலும்

  ReplyDelete
 4. நிச்சயமாக நாம் எங்கே போய்கொண்டிருக்கிறோம் என தெரியவில்லை. மனிதம் எனும் புனிதம் குறைந்து வருவது நிச்சயம் மனிதனுக்கு அழகல்ல

  ReplyDelete
 5. // முகுந்த் அம்மா said...

  என்ன நடக்கிறது தமிழகத்தில். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். மனதில் கவலை உண்டாகிறது. :((//

  நன்றி முகுந்தம்மா.

  ReplyDelete
 6. // ராமலக்ஷ்மி said...

  //அந்த பாலத்தின் முகப்பில் சிறு கல்லைவைத்திருந்தாலோ அல்லது கயிற்றை கட்டியிருந்தாலோ அந்த விபத்தைத் தடுத்திருக்கலாம்.//

  அவர்கள் உயிர்களை மதித்திருந்தால்.

  //நமக்கென்ன என்ற அலட்சியத்தால் வந்ததுதான்//

  சரியாகச் சொன்னீங்க. எத்தனை பேரின் மன உளைச்சல்களுக்கு காரணமாகின்றன இத்தகைய அலட்சியங்கள்.//

  நன்றி, ராமலக்ஷ்மி மேடம்.

  ReplyDelete
 7. // malgudi said...

  நீதி புதைக்கப்பட்டு பல நாள் ஆகிவிட்டதுபோலும்//

  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 8. // எட்வின் said...

  நிச்சயமாக நாம் எங்கே போய்கொண்டிருக்கிறோம் என தெரியவில்லை. மனிதம் எனும் புனிதம் குறைந்து வருவது நிச்சயம் மனிதனுக்கு அழகல்ல//

  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 9. ரொம்ப நல்ல பதிவு சார்; உங்கள் வலி புரிகிறது. இது போல் நல்ல, கெட்ட கனமான விஷயம் தொடர்ந்து எழுதுங்கள். இந்த பதிவிற்கு உங்களுக்கு கிடைத்த பின்னூட்டம், ஓட்டு இவையே இதனை பலர் விரும்பியதை காட்டுகிறது (சில நேரம் நல்ல பதிவிற்கு இவை இரண்டும் கிடைக்காமல் போய்டும் )

  ReplyDelete
 10. //மோகன் குமார் said...

  ரொம்ப நல்ல பதிவு சார்; உங்கள் வலி புரிகிறது. இது போல் நல்ல, கெட்ட கனமான விஷயம் தொடர்ந்து எழுதுங்கள். இந்த பதிவிற்கு உங்களுக்கு கிடைத்த பின்னூட்டம், ஓட்டு இவையே இதனை பலர் விரும்பியதை காட்டுகிறது (சில நேரம் நல்ல பதிவிற்கு இவை இரண்டும் கிடைக்காமல் போய்டும் )//

  உங்களுடைய கருத்துக்கும் வரவுக்கும் நன்றி, மோகன் சார்.

  ReplyDelete
 11. //எத்தனை பேரின் மன உளைச்சல்களுக்கு காரணமாகின்றன இத்தகைய அலட்சியங்கள்.//

  வருத்தமும் கோபமும் வருகின்றன.
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 12. அம்பிகா said...

  //எத்தனை பேரின் மன உளைச்சல்களுக்கு காரணமாகின்றன இத்தகைய அலட்சியங்கள்.//

  வருத்தமும் கோபமும் வருகின்றன.
  நல்ல பகிர்வு.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 13. உங்களுடையது போலவே எனக்கும் ஆதங்கங்கள் இருக்கின்றன. என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. இதைப்பற்றி பேசினால் இன்றைய இளைஞர்கள், "உங்கள் காலம் முடிந்துவிட்டது, ஊருக்குப்போகிற வழியைப்பாருங்கள், இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்" என்கிறார்கள். அங்கலாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

  ReplyDelete
 14. //Dr.P.Kandaswamy said...

  உங்களுடையது போலவே எனக்கும் ஆதங்கங்கள் இருக்கின்றன. என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. இதைப்பற்றி பேசினால் இன்றைய இளைஞர்கள், "உங்கள் காலம் முடிந்துவிட்டது, ஊருக்குப்போகிற வழியைப்பாருங்கள், இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்" என்கிறார்கள். அங்கலாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 15. அரசு வேளைகளில் இருப்போர் சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்யக்கூடாது . பொறுப்புணர்ச்சி அதிகம் வேண்டும்

  ReplyDelete
 16. //"உங்கள் காலம் முடிந்துவிட்டது, ஊருக்குப்போகிற வழியைப்பாருங்கள், இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்" என்கிறார்கள். //

  instant kalam sir ithu. nalaika patthi yosika mattengaranga

  ReplyDelete
 17. //LK said...

  அரசு வேளைகளில் இருப்போர் சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்யக்கூடாது . பொறுப்புணர்ச்சி அதிகம் வேண்டும//


  நிச்சயமாக சார்,
  சேவை மனப்பான்மை மாற்றும் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளவேண்டும். சாதாரண அரசு ஊழியர்களிலிருந்து அதிகாரிகள் வரைக்கும், இது பொருந்தும்.
  நன்றி.

  ReplyDelete
 18. //LK said...

  //"உங்கள் காலம் முடிந்துவிட்டது, ஊருக்குப்போகிற வழியைப்பாருங்கள், இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்" என்கிறார்கள். //

  instant kalam sir ithu. nalaika patthi yosika mattengaranga//


  ஆமாம், அவசர உலகம்தான் ஏற்றுக்கொள்வோம். பேருந்தில் எல்லோரும் தூங்கலாம், ஓட்டுனர் தூங்கமுடியுமா? அதுபோல், மற்றவர்களை விட்டுத்தள்ளுவோம், பொறுப்பானவர்கள் இதை கவனிக்க வேண்டும்தானே?
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், நன்றி சார்.

  ReplyDelete
 19. ஒரு விலங்குக்கு இருக்குற பொறுப்புணர்ச்சி கூட வருங்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாம போயிடும்னு நினைக்கிறேன்.
  இதுதான் காலம் மாறிக்கிட்டே இருக்குன்னு சொல்லுவதோ?

  ReplyDelete
 20. //பாரதி பரணி said...

  ஒரு விலங்குக்கு இருக்குற பொறுப்புணர்ச்சி கூட வருங்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாம போயிடும்னு நினைக்கிறேன்.
  இதுதான் காலம் மாறிக்கிட்டே இருக்குன்னு சொல்லுவதோ?//

  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 21. நமக்குத் தெரிந்து இத்தனை ....தெரியாமல் எத்தனையோ...

  ReplyDelete
 22. நாடு போகும் நிலையைப் பார்த்தால் ,
  அலட்சியங்கள் இல்லாமல் வாழவேண்டும் என்பதே ,இப்பொழுது ,முதன்மையான ,லட்சியமாகிவிடும் போலிருக்கிறதே

  ReplyDelete
 23. // goma said...

  நமக்குத் தெரிந்து இத்தனை ....தெரியாமல் எத்தனையோ...//

  உண்மைதான் மேடம்.

  ReplyDelete
 24. //goma said...

  நாடு போகும் நிலையைப் பார்த்தால் ,
  அலட்சியங்கள் இல்லாமல் வாழவேண்டும் என்பதே, இப்பொழுது முதன்மையான, லட்சியமாகிவிடும் போலிருக்கிறதே//

  நிச்சயமாக..., நன்றி மேடம்.

  ReplyDelete
 25. நமக்கென்ன, நாம் நல்லா இருந்தா சரிதான் என்பதுதான் தற்பொழுது மக்களின் மனநிலையாகிவிட்டது.
  இது மாறவேண்டும். பெண்கள் இரக்க மனசு படைத்தவர்கள். ஆனால், விடைதாளைக் கிழித்த ஆசிரியையை
  என்னவென்று சொல்வது? மொத்தத்தில் இப்போதைக்கு அவசியாமான பதிவு.
  -ஆர். பாலகுமார்.

  ReplyDelete
 26. //Anonymous said...

  நமக்கென்ன, நாம் நல்லா இருந்தா சரிதான் என்பதுதான் தற்பொழுது மக்களின் மனநிலையாகிவிட்டது.
  இது மாறவேண்டும். பெண்கள் இரக்க மனசு படைத்தவர்கள். ஆனால், விடைதாளைக் கிழித்த ஆசிரியையை
  என்னவென்று சொல்வது? மொத்தத்தில் இப்போதைக்கு அவசியாமான பதிவு.
  -ஆர். பாலகுமார்.//

  ReplyDelete
 27. //Anonymous said...

  நமக்கென்ன, நாம் நல்லா இருந்தா சரிதான் என்பதுதான் தற்பொழுது மக்களின் மனநிலையாகிவிட்டது.
  இது மாறவேண்டும். பெண்கள் இரக்க மனசு படைத்தவர்கள். ஆனால், விடைதாளைக் கிழித்த ஆசிரியையை
  என்னவென்று சொல்வது? மொத்தத்தில் இப்போதைக்கு அவசியாமான பதிவு.
  -ஆர். பாலகுமார்.//

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 28. உங்கள் கருத்துகள் அனைத்தும் என் மனதை மிகவும் பாதித்து விட்டது....

  ReplyDelete
 29. '''அந்த பாலத்தின் முகப்பில் சிறு கல்லைவைத்திருந்தாலோ அல்லது கயிற்றை கட்டியிருந்தாலோ அந்த விபத்தைத் தடுத்திருக்கலாம்.'''

  இப்படி நடப்பது நம்ம தாய் நாட்டில் மட்டும் தான்...

  இங்கு அந்தமாதிரி இடங்களில் மனித நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இல்லாமல் முழுமையகா தடுத்துவிடுவார்கள்....

  ஆசிரியைக்கு என்ன மன உளைச்சலோ என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தன்னையே மற்ந்த நிலையில் அந்த் உளைச்சலை அந்த பையனின் குடும்பதுக்கு கொடுத்துவிட்டார்...நிச்சயம் தான் செய்த தவறுக்கு வருந்தி இருப்பார்..செய்தது செய்ததுதான்...கஷ்டம் பையனுக்கு தான் படித்து எழுதுவது என்பது சிறு விசயமா?

  நல்ல பதிவு....

  ReplyDelete
 30. எனது மகள் படிப்பு விசயமாக கருத்து சொன்னதுக்கு நன்றி...
  அவள் தற்போது ஊரில் AIPMT வைக்கும் முதல் தேரிவில் தேர்சி பெற்று அடுத்த பரிச்சைக்கு தயாரகிவருகிராள்...
  நாங்கள் எந்த விசயத்யத்தையும் பிள்ளைகள் மேல் தினிபபது இல்லை...படிப்பு சம்பந்த்மாக முடிவெடுப்பது எல்லாமே அவள் இஷ்டம்..எது நடத்தாலும் நன்மையாக நடக்கட்டும்....

  மருத்துவதுக்கு மெரிட்டில் இடம் கிடைக்க வில்லை என்றால் வேறு படிப்பை பற்றி சிந்திக்கனும்
  அதுவும் அவளே முடிவு செய்யனும்...அவள் இஞ்ஜிநீர் இல்லாமல் கணிதம் சம்பந்த மாக படிக்க ஆசை என்று சொன்னாள் இது குறித்து உங்களுக்கு எதேனும் ஐடியா உண்டா?


  மகளுக்கு இன்னும் பரீச்சை முடிவு குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாக வில்லை.தமிழ் நாடு அரசு மருதுவ படிப்புகான விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 26 என்று அறிவித்து உள்ளது.CBSE தேர்வுக்கான முடிவு கழிந்த வருடம் மே22 ஆம் தேதி தான் வெளி வந்தது.இந்த நிலையில் முடிவு தெரிந்து படிவம் பூர்த்தி செய்து26 ஆம் தேதிக்கு முன்னர் அனுப்புவதென்பது முடியாத காரியம் ..
  இதை தினமணி பத்திரிகைக்கு நாள் நீட்டி கேட்டு அரசாங்கத்தை கேட்க்கும் படி மெயில் அனுப்பினேன்.ஓரிரு நாளில் அறிவிக்கிரோம் என்று பதிலும் அனுப்பினார்கள் இதுவரை ஒன்றும் தெரியவில்லை.

  ReplyDelete
 31. // RDK said...

  உங்கள் கருத்துகள் அனைத்தும் என் மனதை மிகவும் பாதித்து விட்டது....//

  வணக்கம் ஆர்டிகே,
  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 32. //malar said...

  /எனது மகள் படிப்பு விசயமாக கருத்து சொன்னதுக்கு நன்றி...
  அவள் தற்போது ஊரில் AIPMT வைக்கும் முதல் தேரிவில் தேர்சி பெற்று அடுத்த பரிச்சைக்கு தயாரகிவருகிராள்.../

  வாழ்த்துக்கள். மே 16 நடக்கும் தேர்விலும், அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.

  /அவள் இஞ்ஜிநீர் இல்லாமல் கணிதம் சம்பந்த மாக படிக்க ஆசை என்று சொன்னாள் இது குறித்து உங்களுக்கு எதேனும் ஐடியா உண்டா?/

  தங்கள் மகளுக்கு, மருத்துவப் படிக்க நூறு சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாகவே நம்புகிறேன்.

  தாங்கள் கேட்டதால் குறிப்பிடுகிறேன். சென்னை மேத்தமேட்டிகள் இன்ஸ்டிடுட் குறித்து தெரிந்து கொள்ளவும்.
  http://www.cmi.ac.in


  /CBSE தேர்வுக்கான முடிவு கடந்த வருடம் மே22 ஆம் தேதி தான் வெளி வந்தது.இந்த நிலையில் முடிவு தெரிந்து படிவம் பூர்த்தி செய்து26 ஆம் தேதிக்கு முன்னர் அனுப்புவதென்பது முடியாத காரியம்/

  இதைப் பற்றி ஒன்றும் அதிகம் கவலைப் படவேண்டாம். அரசு கவனித்துக்கொள்ளும். cbsc-ல் படிப்பவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்குவார்கள்.

  எனது பிளாக்கிற்கு வந்து, கருத்து சொன்னத்தற்கு நன்றி.

  ReplyDelete
 33. மிகுந்த வேதனைக்குரிய நடப்புகள்.

  ReplyDelete
 34. சமுதாயத்திற்கு தேவையான நல்ல பல கருத்துக்களை தெளிந்த சிந்தனையுடன் பகிர்ந்துகொள்ளும் தங்களின் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 35. //sugumar said...

  சமுதாயத்திற்கு தேவையான நல்ல பல கருத்துக்களை தெளிந்த சிந்தனையுடன் பகிர்ந்துகொள்ளும் தங்களின் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.//

  வணக்கம் சார், தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 36. உங்கள் தகவலுக்கு நன்றி ..
  இந்த தகவலை நானும் படித்தேன்..

  ReplyDelete
 37. மாணவன் ரவீந்தரன் விஷயத்துக்கு வருவோம். மாணவன் தேர்வில் கூட்டலை தவறாகப் போட்டால் அவனது வாழ்வு பாழாகும், இங்கு விடைத்தாளில் தவறாகப் கூட்டல் போட்டது ஆசிரியர் ஆனால் அவதிப்பட்டது மாணவன். என்ன வினோதம் பாருங்கள்.

  தொலைக்காட்சியில் காசு வாங்கிக்கொண்டு அழுவும் பெண்களைப் பார்த்து அழுவும் நாம், மேலே பாதிக்கப் பட்டவர்களுக்காக சிறிது நேரம் வருத்தப்படுவதுக் கூடயில்லை என்பது மட்டுமே உண்மையாக இருக்க முடியும். //

  மிக சரியான வார்த்தைங்க.
  அந்த வழக்கறிங்கர் திரு காசிநாதபாரதிக்கு என் பாராஅட்டுக்கள். காலதாமத கருத்துதான்..... பாராட்டனு என்று மனம் எண்ணியது. பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. //சி. கருணாகரசு said...

  மாணவன் ரவீந்தரன் விஷயத்துக்கு வருவோம். மாணவன் தேர்வில் கூட்டலை தவறாகப் போட்டால் அவனது வாழ்வு பாழாகும், இங்கு விடைத்தாளில் தவறாகப் கூட்டல் போட்டது ஆசிரியர் ஆனால் அவதிப்பட்டது மாணவன். என்ன வினோதம் பாருங்கள்.

  தொலைக்காட்சியில் காசு வாங்கிக்கொண்டு அழுவும் பெண்களைப் பார்த்து அழுவும் நாம், மேலே பாதிக்கப் பட்டவர்களுக்காக சிறிது நேரம் வருத்தப்படுவதுக் கூடயில்லை என்பது மட்டுமே உண்மையாக இருக்க முடியும். //

  மிக சரியான வார்த்தைங்க.
  அந்த வழக்கறிங்கர் திரு காசிநாதபாரதிக்கு என் பாராஅட்டுக்கள். காலதாமத கருத்துதான்..... பாராட்டனு என்று மனம் எண்ணியது. பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.//

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete