Sunday, October 10, 2010

நீங்க ஜூனியரா, சீனியரா...?

ஜூனியர், சீனியர் பிரச்சனை ஒவ்வொரு நிலையிலும் உள்ளது. அண்மையில் நான் சந்தித்தவர்களில் பலர் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அவற்றின் விளைவே இந்தப்பதிவு.


அண்மையில், திருச்சி அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள், விடுதியில் தங்களுக்குள் மோதிக்கொண்ட விபரம் அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் ஜூனியர், சீனியர் வேறுபாடே! கல்லூரியில் மட்டுமல்ல படித்து பணியில் சேர்த்த பின்பும், இது தொடர்வதுதான் வேதனை. எனது உறவினர் பெண், சென்னையின் பிரபல எலும்பு முறிவு சிக்கிச்சை மருத்துவனையில் அண்மையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியில் சேர்ந்தார். அங்கு, அவருக்கு முன்னாள் பணியில் சேர்ந்தவர்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றி, அவர் சொன்னதைக்கேட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். தனியார்த்துறையிலும், இப்படியா என்பதுதான் எனது அதிர்ச்சிக்குக் காரணம்.


அரசு அலுவலகங்களில், ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தாலும் அவர் சொல்வதைத்தான் மறுநாள் சேர்ந்தவர் கேட்கவேண்டும். எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் ஜூனியர் ஜூனியர்தான். சிலர், "நாங்கள் சீனியர் எங்களை வேலைப்பார்க்க சொல்லலாமா?" என்றுகூட கேட்பவர்களும் உண்டு. சீனியர் என்பதால், அதற்குரிய ஊதிய உயர்வை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், எல்லா வேலையும் ஜூனியர்தான் செய்ய வேண்டும் என்பது எப்படி சரியாகும்? இது நாகரிக உலகத்தில் உள்ள அடிமைத்தனமேயன்றி, வேறு என்ன?


சில நல்ல சீனியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்கள் எல்லோருடனும் கலந்து பழகுவார்கள். வேலையையும் பகிர்ந்து 'ஈகோ' பார்க்காமல் செய்வார்கள். சீனியரின் அனுபவம் ஜூனியருக்குப் பயன்படும் என்பது உண்மைதான். அதேபோல், ஜூனியரின் புத்திசாலித்தனத்தை சீனியர் பயன்படுத்தலாமே!


சீனியர் என்று அலட்டிக்கொள்ளும் நபர்களில் பெரும்பகுதியினருக்கு தன்னம்பிக்கை, திறமை மற்றும் புத்திசாலித்தனம் குறைவாக இருக்கும். அதனால்தான், அவர்கள் மற்றவரைவிட தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள, இந்த சீனியர் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.


எனது நண்பர் வீட்டில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஓயாமல் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால், எனது உறவினர் வீட்டில் உள்ள இரட்டைக் குழந்தைகள், ஒருவரோடு மற்றவர் அன்பாக பழகுவதும், நட்போடும் இருப்பதும் நான் அறிந்தவையே. இதில், நான் புரிந்துகொண்டது எனது நண்பர் வீட்டில் இரட்டையர்களாக இருந்தபோதும் அக்கா, தங்கை என்று பிரித்து சொல்வார்கள். ஆனால், எனது உறவினர் வீட்டில் இன்றுவரை, முதலில் பிறந்தது யார் என்ற விபரத்தைச் சொல்லமாட்டார்கள். அதுவே அவர்களின் ஒற்றுமைக்குக் காரணமாக நான் நினைக்கிறேன்.


இப்படி சீனியர், ஜூனியர் வேறுபாடு மாமியார் மருமகளில்(வீட்டிற்கு முதலில் வந்தவர்) ஆரம்பித்து, மூத்த மாப்பிள்ளை முறுக்கு வரை அடக்கம். இது வலைப்பூக்களிலும் வந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்?!
இந்த மாதிரியான வேறுபாடுகள் பல வழிகளில் நம் முன்னேற்றத்திற்கும், மன அமைதிக்கும் இடையூறாக இருப்பதை நாம் அறிவோம். இனியாவது இந்த மாதிரி வேறுபாடுகள் பார்க்காமல், நட்புடனும் அன்புடனும் இருப்போம்.


ஜூனியரின் வேகமும்,சீனியரின்(ஒரு வினாடி முன்னாள் பணியில் சேர்ந்தவர் அல்ல) விவேகமும் சேர்ந்தால், வெற்றி நிச்சயம்.

அது சரி, நீங்க ஜூனியரா, இல்ல சீனியரா...?

15 comments:

  1. enaku munnal irupavargaluku nan junior. enaku pin varubvargaluku nan senior

    ReplyDelete
  2. ஜூனியர் - சீனியர் சிந்தனைகள்
    ------------------------------------------------------
    ஜூனியர் விகடன் அப்படின்னு பேர் வச்சாலும் நல்லா சீனியாராத்தன் போவுது...
    ஜூனியர் எப்படி இருக்கான்னு அப்படின்னு நம்ம பையனை கேட்டா வாயெல்லாம் பல்லு நமக்கு...
    ஜூனியர் ஜூனியர் அப்படின்னு கமல் கைல பொம்மை பிடிச்சி பாடினது சூப்பர் ஹிட்..

    என்ன சார் தலை நரைத்து சீனியர் ஆயிட்டீங்க.. அப்படின்னு யாராவது கேட்டா டென்ஷன் ஆயிட்றோம்.
    வாழ்க்கைல சுகர் வந்து "சீனி"யர் ஆயிட்டா வருத்தப்படறாங்க.
    சீனியர் சிட்டிசனுக்கு கன்செஷன் அப்படின்னா சந்தோஷப் படறோம்...

    போதும்... இத்தோட நிறுத்திக்கறேன்... அமைதி அமைதி...

    ReplyDelete
  3. மிட்டாய் தானே நான் வந்து எடுத்துதரேன்னு சொன்னா.. இல்ல நான் பெரியபையன் நானே எடுத்துப்பேன்னுவான் .. என் பையன்..
    அதே தண்ணி தானா எடுத்துக்கமாட்டான்.. ச்சொல்வான்..
    நான் சின்னப்பையன் தானே யாரச்சும்
    ஹெல்ப் செய்யனும் அப்படின்னு..
    :)
    ஜூனியரோ சீனியரோ தன்வேலையை
    நடத்திக்க
    தெரிஞ்சவங்களா இருக்காங்க..ஆனா
    ஜீனியரானாலும் சீனியரா இருந்தாலும் ஏமாந்து வேலை செய்யறவங்கள எந்த லிஸ்ட்ல சேக்கிறது..

    ReplyDelete
  4. இந்த ஜூனியருக்கு, சீனியர், நீங்கள் தந்த அறிவுரைக்கு நன்றி. :-)

    ReplyDelete
  5. //ஜூனியரின் வேகமும்,சீனியரின்(ஒரு வினாடி முன்னாள் பணியில் சேர்ந்தவர் அல்ல) விவேகமும் சேர்ந்தால், வெற்றி நிச்சயம்.//

    சரியாச் சொன்னீங்க அமைதி அப்பா.

    தலைப்பு... நான் சீனியருக்கு ஜூனியர். ஜூனியருக்கு சீனியர். ஹி..!

    ReplyDelete
  6. இது ரொம்பப் பிரச்சனையான விசயம் தான்.. நான் எப்போதும் ஜீனியர் தான்...
    என் தள வருகைக்கம் இணைப்பக்கம் நன்றி சகோதரம்

    ReplyDelete
  7. LK said...

    enaku munnal irupavargaluku nan junior. enaku pin varubvargaluku nan senior//

    ஆமாம் சார், இந்த உண்மை பலருக்குத் தெரியவில்லையே!

    ReplyDelete
  8. RVS said...

    ஜூனியர் - சீனியர் சிந்தனைகள்
    ------------------------------------------------------
    ஜூனியர் விகடன் அப்படின்னு பேர் வச்சாலும் நல்லா சீனியாராத்தன் போவுது...
    ஜூனியர் எப்படி இருக்கான்னு அப்படின்னு நம்ம பையனை கேட்டா வாயெல்லாம் பல்லு நமக்கு...
    ஜூனியர் ஜூனியர் அப்படின்னு கமல் கைல பொம்மை பிடிச்சி பாடினது சூப்பர் ஹிட்..

    என்ன சார் தலை நரைத்து சீனியர் ஆயிட்டீங்க.. அப்படின்னு யாராவது கேட்டா டென்ஷன் ஆயிட்றோம்.
    வாழ்க்கைல சுகர் வந்து "சீனி"யர் ஆயிட்டா வருத்தப்படறாங்க.
    சீனியர் சிட்டிசனுக்கு கன்செஷன் அப்படின்னா சந்தோஷப் படறோம்...

    போதும்... இத்தோட நிறுத்திக்கறேன்... அமைதி அமைதி...//

    நிறைய எழுதிட்டீங்க, ஒரு பதிவே போட்டிருக்கலாம் சார்! நன்றி.

    ReplyDelete
  9. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    மிட்டாய் தானே நான் வந்து எடுத்துதரேன்னு சொன்னா.. இல்ல நான் பெரியபையன் நானே எடுத்துப்பேன்னுவான் .. என் பையன்..
    அதே தண்ணி தானா எடுத்துக்கமாட்டான்.. ச்சொல்வான்..
    நான் சின்னப்பையன் தானே யாரச்சும்
    ஹெல்ப் செய்யனும் அப்படின்னு..
    :)
    ஜூனியரோ சீனியரோ தன்வேலையை
    நடத்திக்க
    தெரிஞ்சவங்களா இருக்காங்க..ஆனா
    ஜீனியரானாலும் சீனியரா இருந்தாலும் ஏமாந்து வேலை செய்யறவங்கள எந்த லிஸ்ட்ல சேக்கிறது..//

    நல்ல கருத்தைச் சொல்லிவுள்ளீர்கள்.

    ReplyDelete
  10. Chitra said...

    இந்த ஜூனியருக்கு, சீனியர், நீங்கள் தந்த அறிவுரைக்கு நன்றி. :-)//

    என்ன...?!

    ReplyDelete
  11. ராமலக்ஷ்மி said...

    //ஜூனியரின் வேகமும்,சீனியரின்(ஒரு வினாடி முன்னாள் பணியில் சேர்ந்தவர் அல்ல) விவேகமும் சேர்ந்தால், வெற்றி நிச்சயம்.//

    சரியாச் சொன்னீங்க அமைதி அப்பா.

    தலைப்பு... நான் சீனியருக்கு ஜூனியர். ஜூனியருக்கு சீனியர். ஹி..!//

    நல்ல பதில்.

    ReplyDelete
  12. ம.தி.சுதா said...

    இது ரொம்பப் பிரச்சனையான விசயம் தான்.. நான் எப்போதும் ஜீனியர் தான்...
    என் தள வருகைக்கம் இணைப்பக்கம் நன்றி சகோதரம்//

    தாங்களும் இந்தப் பக்கம் வந்ததற்கு
    நன்றி சார்.

    ReplyDelete
  13. ஜுனியரோ, சீனியரோ - நல்ல விஷயத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதே நல்லது. இது புரிந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை.

    ReplyDelete
  14. ராம்ஜி_யாஹூ said...

    nice//

    நன்றி.

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...

    ஜுனியரோ, சீனியரோ - நல்ல விஷயத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதே நல்லது. இது புரிந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை.//

    நிச்சயமாக..., நன்றி.

    ReplyDelete