Wednesday, December 31, 2025

திரு மு. இராஜகோபால் (FCI) மறைவு!

கடினல்வயல் திரு கா. தியாகராசன் (KT) அவர்களின் சம்பந்தியும், திரு K. T. கார்த்தி அவர்களின் மாமனாரும், திருமதி இந்துமதி அவர்களின் தந்தையும் நாகை மாவட்டம், வேதாரண்யம் வடடம், கோவில்பத்து கிராமத்தைப் பூர்வீகமாகவும் சென்னை, அம்பத்தூரை இருப்பிடமாகக் கொண்டவரும், இந்திய உணவுக் கழகத்தில்(FCI) பணியாற்றி ஓய்வுபெற்ற 
திரு மு. இராஜகோபால் அவர்கள் 31.12.25 அதிகாலை இயற்கையெய்தினார் என்கிற செய்தியறிந்து வருத்தமுற்றேன். 

அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதோடு, மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர்.  
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
அன்னாரின் இழப்பு அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு பேரிழப்பாகும். 

இந்தத் துயர நிகழ்வினை தாங்கும் சக்தியை, அவரது அன்பைப்பெற்ற அனைவருக்கும் இயற்கை அளிக்க வேண்டுமென்று வேண்டுவதோடு, எனது ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்கிறேன்.

No comments:

Post a Comment