மூக்கு முட்ட சாப்பிட்டவனைப் பிடித்துவைத்து மீண்டும் ஒரு விருந்து சாப்ப்பிடச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் உள்ளது, இப்பொழுது நடக்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. வரும் எட்டாம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ளது. டோனி சென்னை வந்து விட்டார். இதைக் கேட்டவுடன், என் மனநிலை மேற் சொன்ன விருந்து சாப்பிட்டவனின் நிலைக்கு சென்றுவிட்டது.
நம்முடைய நீண்ட நாளைய கனவு, இப்பொழுதான் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் ஹீரோக்களாகவும், யாருமே வெல்ல முடியாதவர்களாகவும் திகழ்வதாக நினைத்து மகிழ்ச்சியில் உள்ளோம். இந்நிலையில், நாளை ஐபிஎல்-யில் நமது வீரர்கள் சரியாக விளையாடாமல் போனால், உதாரனத்திற்கு டோனியோ, காம்பிரோ ஜீரோவில் அவுட்டானால், நம்முடைய இப்போதைய சந்தோஷம் காணாமல் போய்விடுமே! எனவே கிரிக்கெட் ரசிகர்கள், இப்பொழுது உள்ள மகிழ்ச்சியை கொஞ்ச நாள் அனுபவிக்க நினைத்தால், ஐபிஎல் பார்ப்பதை தவிர்க்கலாம் என்பதே என் யோசனை. எனவே இந்த ஐபிஎல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படாது என்பதே எனது எண்ணம். பொறுத்திருந்து பார்ப்போம்.
அது நாட்டுக்காக.... இது பிசினஸ்க்காக.... ஹி,ஹி,ஹி,ஹி...
ReplyDeleteenakkum appadithaan thonuthu. intha IPL popular aagaathu enpathe en karuththum.
ReplyDeleteபெர்னாட் ஷா அன்று சொன்னார்//22 முட்டாள்கள் விளையாடுகிறார்கள் 22000 முட்டாள்கள் பார்க்கிறார்கள்// இன்று அளவு அதிகமே.
ReplyDelete120 கோடி முட்டாள்கள்.
சகாதேவன்
பணம் இவர்களையும் கிரிக்கெட் வாரியத்தினையும் பாடாய் படுத்துகிறது :(
ReplyDeleteஐ பி எல் கிரிக்கெட் நான் பார்பதில்லை,காரணம் நமக்கு பிடித்த வீரர்கள் எதிர் அணிலும் இருப்பதால்.
ReplyDeleteவெற்றி தோல்விக்கு மிகப்பெரிய வரவேற்ப்பு இல்லை,இதனால் உலக கோப்பை மகிழ்சிக்கு பாதிப்பு இருக்காது சார்,
அ.அப்பா. தினம்தினம் மெகாத்தொடர் போல கிரிக்கெட் நடத்தினாலும் நம் ஜனம் பார்க்கும். அவர்கள் கல்லா நிறையும். ஒன்றும் செய்வதற்கில்லை. ;-))
ReplyDeleteChitra said...
ReplyDelete//அது நாட்டுக்காக.... இது பிசினஸ்க்காக.... ஹி,ஹி,ஹி,ஹி.//
ஆமாம் மேடம். நன்றி.
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete//enakkum appadithaan thonuthu. intha IPL popular aagaathu enpathe en karuththum.//
பொறுத்திருந்து பார்ப்போம் சார். நன்றி.
@சகாதேவன்
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி சார்.
வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete//பணம் இவர்களையும் கிரிக்கெட் வாரியத்தினையும் பாடாய் படுத்துகிறது :(//
ஆமாம் சார். நன்றி.
manivannan said...
ReplyDelete//இதனால் உலக கோப்பை மகிழ்சிக்கு பாதிப்பு இருக்காது சார்//
மகிழ்ச்சித் தொடரவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
RVS said...
ReplyDelete//அ.அப்பா. தினம்தினம் மெகாத்தொடர் போல கிரிக்கெட் நடத்தினாலும் நம் ஜனம் பார்க்கும். அவர்கள் கல்லா நிறையும். ஒன்றும் செய்வதற்கில்லை. ;-))//
வேற என்ன சொல்றது. நன்றி சார்.
//இந்த ஐபிஎல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படாது//
ReplyDeleteசார் இதுல எவ்ளோ வியாபாரம் தெரியுமா?? நாளைக்கு இது பற்றி பதிவு போட்டால் அதுக்கு ராயல்ட்டி கேட்டாலும் கேப்பாங்க சாரே!!
சரி சரி இங்க வந்து கமென்ட் போடுங்க நண்பர்களே!!
http://sagamanithan.blogspot.com/
ஜெலுசில் குடித்து விட்டு IPL-க்கு தயாராகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது:)! நீங்கள் சொன்ன மாதிரி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteசொல்லப்போனா, கூடுதல் பொறுப்பு வந்து இன்னும் நல்லா விளையாடுவாங்கன்னும் நினைக்கலாமே..
ReplyDeleteசகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...
ReplyDelete// சரி சரி இங்க வந்து கமென்ட் போடுங்க நண்பர்களே!!
http://sagamanithan.blogspot.com///
வந்து கமென்ட் போட்டாப் போச்சு!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//ஜெலுசில் குடித்து விட்டு IPL-க்கு தயாராகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது:)! //
:-))))))))!
நன்றி மேடம்.
////டோனியோ, காம்பிரோ ஜீரோவில் அவுட்டானால், நம்முடைய இப்போதைய சந்தோஷம் காணாமல் போய்விடுமே! /////
ReplyDeleteநிச்சயமாக இல்லை அப்படி கருதபவன் ஒரு விளையாட்டு வீரனாகவோ ரசிகனாகவோ இருக்கத் தகுதியற்றவனாவான்...
அமைதிச்சாரல் said...
ReplyDelete//சொல்லப்போனா, கூடுதல் பொறுப்பு வந்து இன்னும் நல்லா விளையாடுவாங்கன்னும் நினைக்கலாமே//
நிச்சயமா நீங்க சொல்றது சரிதான். ஆனா, சச்சினை அவுட்டாக்கி அஸ்வின் கொண்டாடுவதை, இந்த சூழ்நிலையில் நமது மனது ஏற்றுக்கொள்ளாது என்பதுதான் என் நிலைபாடு. ஏதோ, இந்தியா எல்லா வேற்றுமைகளையும் மறந்து உலகக் கோப்பையில் ஒன்றாகிவிட்டதாக அனைவரும் நினைத்து மகிழ்ந்தோம். அது குறிகிய காலத்தில் அழிந்து போவதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே எனது இந்தப் பதிவுக்குக் காரணம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
@@♔ம.தி.சுதா♔
ReplyDeleteவெற்றியை கொஞ்ச காலம் கொண்டாடாமல், அதற்குள் ஐபிஎல் பற்றி பேச வேண்டியதுள்ளதே என்பதுதான் என்னைப் போன்ற சராசரி ரசிகர்களின் எண்ணம்.
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
நீங்க சொன்ன மாதிரி ஒரு வித சலிப்புத்தான் வருது. ஒரு மாசமாவது இடைவெளி கொடுத்திருக்கலாம்.
ReplyDeleteஹுஸைனம்மா said...
ReplyDelete//நீங்க சொன்ன மாதிரி ஒரு வித சலிப்புத்தான் வருது. ஒரு மாசமாவது இடைவெளி கொடுத்திருக்கலாம்.//
நன்றி மேடம்.
பொன்னர் சங்கர் படத்தின் 'முத்தாயி' திவ்யா பரமேஸ்வரனிடம்...
ReplyDelete"ஐ.பி.எல்லில் உங்களுக்கு பிடித்த அணி?"
"உலகக்கோப்பையை இந்தியா வென்ற மகிழ்ச்சியிளிருந்து இன்னும் மீளவில்லை. அதனால், ஐ.பி.எல். பார்க்கும் ஆர்வமே போய்விட்டது."
-சூரிய கதிர். மே 1-15, 2011, பக்கம்-1.