எனது சிறு வயதில் வயல்களில் வேலைப் பார்ப்பவர்கள், நிழலை வைத்து நேரம் கணிப்பார்கள். இன்னும் சிலரோ சூரியனின் உயரத்தை வைத்து, நேரத்தைக் கணிப்பார்கள். காலையில் சேவல் கூவுவதுக் கூட நேரம் கணிக்கவும், காலையில் எழும்புவதற்கு அலாரமாகவும் எங்கள் கிராமத்தில் பயன்பட்டது.
நானும், மற்றவர்களுக்கு நேரம் கணிக்கும் உபகரணமாக இருந்திருக்கிறேன். அது என்னவென்றால், பள்ளியிலிருந்து மதியம் சாப்பிட வீட்டிற்கு வயல்வெளிகள் வழியே வருவேன். அப்பொழுது மதியம் ஒரு மணி என்று அறிந்துக் கொள்வார்கள். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது மாலை ஐந்து மணி என்று கணித்து வேலையை முடித்துக் கொள்வார்கள். இதை எங்கள் அப்பாவிடம், அவர்கள் சொல்லியதால் நான் அறிந்தேன்.
நான் பத்தாம் வகுப்பு படித்த பொழுது அப்பா ஒரு கடிகாரம் வாங்கிக் கொடுத்தார். அது ஆட்டோமேட்டிக் வாட்ச். அதைக் கட்டிக்கொண்டு கையை அசைக்காமல், பல நாட்கள் நடந்து சென்றது வேறு விஷயம். அந்தக் கடிகாரம், நாள் ஒன்றுக்கு ஒரு நிமிடம் கூடுதலாக் காண்பிக்கும். பத்து நாட்கள் அட்ஜஸ்ட் செய்யாவிட்டால் பத்து நிமிடம் கூடுதலாக காட்டும். இது, எனக்கு மிகவும் மனவேதனையைக் கொடுக்கும் விஷயமாக இருந்தது. கண்ணில் படும் கடிகாரம் சர்வீஸ் செய்யும் அனைவரிடமும் எனது கடிகாரத்தை சரி செய்யக் கொடுப்பேன், அவர்களும் ஏதோ அட்ஜஸ்ட் செய்து தருவார்கள். ஆனால், மீண்டும் அதே பிரச்சினைதான். சிலர் ரொம்பக் கூடுதலாக அட்ஜஸ்ட் செய்து விட்டார்கள் என்றால். தினம் ஒரு நிமிடம் குறைவாகக் காட்டும்.
1999 -ல் டிஜிட்டல் வாட்ச் கிடைக்கும் வரை(தம்பி கொடுக்கும் வரை) இதே பிரச்சினையைச் சந்தித்தேன். குவார்ட்ஸ் கடிகாரம் வந்தப் பிறகு எனக்குப் பிரச்சினைக் கிடையாது. ஆனால், அதன் பிறகும் கூட நிமிடம் மட்டுமல்லாது, வினாடி கூட துல்லியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். டி.வி.யில் நீயூஸ் போடும் முன்பு நேரம் போடுவார்களே, அதைப் பார்த்து சரி செய்வேன்.
என்னைப் பொறுத்த வரை, கடிகாரம் என்பது துல்லியமாக நேரத்தைக் காட்ட வேண்டும். இன்றும் கூட நான் வேலை செய்யும் அலுவலகத்தில், உயரத்தில் மாட்டியிருக்கும் கடிகாரத்தை சிரமப்பட்டு எடுத்து நேரத்தை சரி செய்து வைத்தால். சில நாட்களில், நண்பர்கள் அதே சிரமத்தைப்பட்டு மீண்டும் நேரத்தை ஐந்து நிமிடம் கூடுதலாக மாற்றியிருப்பார்கள்.
அது சரி, உங்கள் வீட்டில் எப்படி?
நிறைய பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரை 15 நிமிடமோ 30 நிமிடமோ அதிகம் வைத்திருந்து ஒரு பயனும் இல்லை..
ReplyDelete"நாங்கள் பதினைந்து நிமிஷம் பாஸ்ட்டா வச்சிருக்கோம்" என்பார்கள்//
ReplyDeleteநமக்குத்தான் தெரியுமே கூட்டிவைத்துள்ளோம் என்று. நேரம் பார்க்கும் போதே அனிச்சையாக 15 நிமிடம் கழித்துக் கொள்வேன்
வெளிநாட்டில் இருக்கும் மகன்களின் நேரத்திற்காக நான்கரை மணி நேரம் கூட்டிக் கொள்வேன்.
கூட்டலும், கழித்தலுமாக வாழ்க்கை வேகமாக ஓடுகிறது.
அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
சுவாரஸ்யமான பதிவு. முதலிருவரின் கருத்தே என்னுடையது. மாற்றி வைப்பதால் பயனில்லை. மாற்றத்தை நம் சுறுசுறுப்பில் காட்ட வேண்டும்:)!
ReplyDeleteஉண்மை தான்..
ReplyDeleteபலபேரு வீடுகளில் அடிக்கடி நானும் பாத்திருக்கேன். என்னைப்பொறுத்தவரை
ReplyDeleteகடிகாரம் கரெக்டாக டைம் காட்டினாதான் திருத்தி.
எங்க வீட்டுக் கடிகாரம் எப்பவுமே கரக்ட் டைம்தான்.கொஞ்சம் வேகமாவோ, மெள்ளவோ போனால், உடனே சரியான நேரத்துக்கு மாற்றி விடுவேன்!
ReplyDelete(எனக்குக் கல்லூரி போனபின்தான் கைக்கடிகாரம்!)
எனக்கு கடிகாரத்தில நேரம் சரியா இருக்கணும்,நாமதான் மாறனும்,நேரத்தை மாற்றி வைப்பது பிடிக்காது சார்,தங்களின் பழைய நினைவுகள் அருமை
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said,
ReplyDelete//நிறைய பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரை 15 நிமிடமோ 30 நிமிடமோ அதிகம் வைத்திருந்து ஒரு பயனும் இல்லை..//
மிக்க நன்றி சார்.
இராஜராஜேஸ்வரி said,
ReplyDelete//அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். //
மிக்க நன்றி மேடம்.
ராமலக்ஷ்மி said,
ReplyDelete//மாற்றி வைப்பதால் பயனில்லை. மாற்றத்தை நம் சுறுசுறுப்பில் காட்ட வேண்டும்:)! //
நன்றாக சொல்லியிருகிறீர்கள்,எல்லோரும் பின்பற்ற வேண்டிய விஷயம்.
நன்றி மேடம்.
Lakshmi said,
ReplyDelete// என்னைப்பொறுத்தவரை கடிகாரம் கரெக்டாக டைம் காட்டினாதான் திருப்தி. //
நிச்சயமா மேடம். நன்றி மேடம்.
சென்னை பித்தன் said,
ReplyDelete//(எனக்குக் கல்லூரி போனபின்தான் கைக்கடிகாரம்!) //
உங்களிடம் சுவாரஸ்யமான ஒரு பதிவு இருக்கும் போல?! எதிர்ப்பார்க்கிறோம்.
மிக்க நன்றி சார்.
manivannan said,
ReplyDelete//தங்களின் பழைய நினைவுகள் அருமை//
மிக்க நன்றி சார்.
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html
எங்கள் வீட்டிலும் 15 நிமிஷம் fast தாங்க... என்னமோ இந்த பழக்கத்த மாத்திக்க முடியல... பெரிய கொடுமை என்னனா பெரும்பாலும் அது fastனு தெரிஞ்சே இன்னும் பத்து நிமிஷம் தூங்குவோம்னு தூங்கறது... ஆனாலும் என்னமோ மனோதத்துவம்... :))
ReplyDelete