Friday, May 27, 2011

இது முடிவல்ல ஆரம்பம்...!

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. நம் அல்லது நம்முடைய உறவினர்,நண்பர்களின் பிள்ளைகளின் தேர்வு முடிவு வந்திருக்கும். இந்த நேரத்தில், நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம்.

முன்பெல்லாம் தேர்வு முடிவு வெளியானால் "பாஸா?" என்று கேட்ப்பார்கள். இப்பொழுது "எத்தனை மார்க்?" என்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும். இதிலும் சில பிரச்சினைகள் வருகிறது. அது என்னவென்றால், அதிக அளவு மதிப்பெண் எடுத்தவர்களை எல்லோரும் பாராட்டுவதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதும் தான்.

இந்த வருடம் முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர். விபரம் அறிய பார்க்க: தினமணி

இவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இவர்கள் +2 தேர்விலும் இந்த மாதிரி முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பத்தாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்றவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த சதவிகிதம் மதிப்பெண் பெறுவதில்லை என்பதை அனுபவப் பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதே மாதிரி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அப்படியே இருந்து விடுவதுமில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த என்னுடைய நண்பர் ஒருவர், இன்று ஆடிட்டராக உள்ளார்.

சிலர், +1,+2 மட்டும் ரெசிடென்சியல் பள்ளிகளில் சேர்ப்போம் என்று சேர்த்து விடுகிறார்கள். அப்படி சேர்க்கக் காரணம். அந்தப் பள்ளிகளின் விளம்பரங்கள். அவர்கள் பள்ளியில் பத்து, இருபது மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் +1 சேர்க்கையின் பொழுதே மிகச் சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். சுமாராக ஆயிரம் மிகச் சிறந்த மாணவர்களில், பத்து இருபது பேர் மேற்படி மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மேலும், சுமாராக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதில் மாணவர்களுக்கு மன ரீதியான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும். எனவே, பிள்ளைகளின் மனப்பூர்வமான விருப்பமில்லாமல்(முதலில் தலையாட்டிக்கொண்டு சேர்ந்து விடுவார்கள், பின்பு அது சரியில்லை இது சரியில்லை என்பார்கள்) இந்த மாதிரி விடுதிகளில் சேர்ப்பது எதிர்ப்பார்த்த முடிவைத் தராது என்பதே எனது அனுபவம்.

எனவே,அதிக மதிப்பெண் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றப் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நாம் சொல்ல வருவது 'இது முடிவல்ல ஆரம்பம்' என்பதே!



19 comments:

  1. ல்லூரி சேரும் வரை பெற்றொர் கண்காணித்து நல்ல வழியை காட்டவேண்டிய நேரம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பக்குவபட ஆரம்பிக்கிற வயது . எனவே பத்தாம் வகுப்பு , பொறுப்புக்களின் ஆரம்பம் மட்டுமே.

    ReplyDelete
  2. //'இது முடிவல்ல ஆரம்பம்' //
    முற்றிலும் உண்மை.அனைவரும் உணர வேண்டும்!

    ReplyDelete
  3. மதிப்பெண்கள் அதிகம் பெறுவது எப்போதும் மதிப்பான பெண்களே! நமக்கு கொஞ்சம் விட்டுத் தரமாட்டேங்க்ராங்களே! நல்ல பகிர்வு. ;-)

    ReplyDelete
  4. பத்தாம் வகுப்பு முடித்ததும் அவர்கள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் .

    ReplyDelete
  5. மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் வேண்டிய அத்தியாவசிய கருத்து , பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  6. //'இது முடிவல்ல ஆரம்பம்' //
    முற்றிலும் உண்மை. பெற்றோர் தன் பிள்ளைகளை மற்றவர்களுடன் கம்பேர் பண்ண மட்டுமே இந்த மதிப்பெண் உதவுகிறது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  7. சாகம்பரி said,

    //கல்லூரி சேரும் வரை பெற்றொர் கண்காணித்து நல்ல வழியை காட்டவேண்டிய நேரம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பக்குவபட ஆரம்பிக்கிற வயது . எனவே பத்தாம் வகுப்பு , பொறுப்புக்களின் ஆரம்பம் மட்டுமே.//

    ஆமாம், நன்றி.

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said,

    *//'இது முடிவல்ல ஆரம்பம்' //

    முற்றிலும் உண்மை.அனைவரும் உணர வேண்டும்!// *

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  9. RVS said,

    //மதிப்பெண்கள் அதிகம் பெறுவது எப்போதும் மதிப்பான பெண்களே! நமக்கு கொஞ்சம் விட்டுத் தரமாட்டேங்க்ராங்களே!//

    :-)))))!

    ************

    // நல்ல பகிர்வு. ;-)//

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  10. koodal bala said,

    //பத்தாம் வகுப்பு முடித்ததும் அவர்கள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்//

    சில மாணவர்களும் பெற்றோரும் இந்த விஷயத்தில் தெளிவாக இருப்பதில்லை என்பது உண்மையே.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. சரியான தலைப்பு. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  12. மாணவர்கள் தற்போது படிக்கும் பள்ளியில் முழு திறமையும் வெளிபடுத்தினால்,இரண்டு லட்சம் செலவு செய்யாமல் அதிக மார்க் வாங்கமுடியும் தெளிவா சொல்லிடிங்க சார்,!!!

    ReplyDelete
  13. மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் வேண்டிய அத்தியாவசிய கருத்து , பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  14. A.R.ராஜகோபாலன் said,

    //மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் வேண்டிய அத்தியாவசிய கருத்து , பகிர்ந்தமைக்கு நன்றி //

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  15. bandhu said...

    *< //'இது முடிவல்ல ஆரம்பம்' //

    முற்றிலும் உண்மை. பெற்றோர் தன் பிள்ளைகளை மற்றவர்களுடன் கம்பேர் பண்ண மட்டுமே இந்த மதிப்பெண் உதவுகிறது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்!>*

    ஆமாம், நான் சொல்ல மறந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இது பிள்ளைகளிடையே ஆரோக்கியமான உறவை வளர்க்காது என்பதை பலரும் சிந்திப்பதில்லை.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  16. ராமலக்ஷ்மி said...

    // சரியான தலைப்பு. நல்ல பகிர்வு.//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  17. manivannan said...

    //மாணவர்கள் தற்போது படிக்கும் பள்ளியில் முழு திறமையும் வெளிபடுத்தினால்,இரண்டு லட்சம் செலவு செய்யாமல் அதிக மார்க் வாங்கமுடியும் தெளிவா சொல்லிடிங்க சார்,!!!//

    நிச்சயமாக. மிக்க நன்றி.

    ReplyDelete
  18. மாலதி said...

    // மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் வேண்டிய அத்தியாவசிய கருத்து , பகிர்ந்தமைக்கு நன்றி//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  19. >>
    குடும்பக் கட்டுப்பாடு குறித்து நான் சில விஷயங்களை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியுள்ளேன். ஆனால், அதை எந்தப் பத்திரிக்கையும் வெளியிட்டது இல்லை

    ஹா ஹா ஓப்பனிங்கலயே கோபத்தோட ,ஆதங்கத்தோட ஸ்டாட்ர்ர்ட்டட்

    ReplyDelete