Friday, September 9, 2011

புரிந்து கொண்டேன்!

அண்மையில் டிவியில் விவேக் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.  நான் கவனித்தப் பொழுது போர்வெல் குறித்து   மக்களிடமும்  அதிகாரிகளிடமும் விழிப்புணர்வு வரும் வகையில் காட்சி அமைத்திருந்தார்கள். 'இன்னுமா  போர்வெல் தோண்டுபவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்?' என்ற யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தின் பெயர் தெரியவில்லை.   யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

இந்த செய்தியைப் பார்த்துவிட்டு தொடருவோம்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற குக்கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணறு மூடப்படாமல் அப்படியே இருந்தது.  அங்கே
விளையாடி கொண்டு இருந்த, சுதர்சன் என்ற 5 வயது சிறுவன், திடீர் என்று தடுமாறி `போர்வெல்' உள்ளே விழுந்துவிட்டான்.

அவனை உயிருடன் மீட்க்கும் முயற்சியில், சிறுவன் சிக்கி இருந்த போர்வெல் குழி அருகே ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகலமாக குழி தோண்டப்பட்டது. சிறிது தோண்டிய பின் மண் கடினமாக இருந்ததால் பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டது. 7 அடி ஆழத்திற்கு பின் கருங்கல் பாறை வந்ததால் மிஷின் மூலம் தோண்ட முடியவில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்தது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் டிரில்லர் மிஷின்கள் மூலம் குழியின் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்தது. 15 மணி நேரத்திற்கு பின் நள்ளிரவு 12.45 மணிக்கு சிறுவன் சுதர்சன் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.அந்தப் படத்தில் வரும் காட்சியில் விவேக் "போர்வெல் தோண்டும் முன்,  நூற்றி ஐம்பது ரூபாய்க்கு மூடி தயார் செய்து கொண்டு அதன் பிறகு தோண்டலாமே? இனி அதிகாரிகள், மூடி இருந்தால் மட்டுமே தோண்டுவதற்கு  அனுமதி கொடுக்க வேண்டும்" என்று சொல்வது மாதிரியான காட்சி அமைத்திருப்பார்கள். (நினைவில் உள்ளதை எழுதியிருக்கிறேன்)


 
'சினிமா மற்றும் பத்திரிகைகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வதில்லை' என்று என் மனதில் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு, 'சினிமாவைப் பார்த்து யாரும் திருந்த மாட்டார்கள்' என்பதை புரிந்து கொண்டேன். இதை ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதால் தானோ  என்னவோ, அதிகளவில் விழிப்புணர்வு செய்திகளுக்கு சினிமாத்துறையினரும் ஊடகங்களும் முக்கியத்துவம் தருவதில்லை!


இந்த செய்தி  குறித்து முழுமையாக அறிய மாலை மலர்  படிக்கவும்.


.


14 comments:

 1. மக்களிடம் விழிப்புணர்வு இன்னும் வளரவேண்டும் . தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன் .

  ReplyDelete
 2. வருத்தம் தரும் செய்தி. இது போல பல இடங்களில் பலமுறை நடக்கிறது. இருப்பினும் அலட்சியப் போக்கு தொடர்கிறது:(!

  ReplyDelete
 3. கண்டிப்பாக விழிப்புணர்வு வர வேண்டும்.

  ReplyDelete
 4. நல்ல விழிப்புனர்வு பதிவு. மக்களிடம் தான் விழிப்புணர்வு வரனும்.

  ReplyDelete
 5. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  //மக்களிடம் விழிப்புணர்வு இன்னும் வளரவேண்டும். தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 6. நல்ல பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 7. நல்லதோர் விழிப்புணர்வு பகிர்வு... எத்தனை இடங்களில், அதுவும் வடமாநிலங்களில், இதுபோல நிறைய நடந்து விட்டது.... விழிப்புணர்வு வளரவேண்டியது மிக அவசியம்....

  ReplyDelete
 8. மிகவும் கொடுமையான செய்தி. இது ஒன்றும் முதல் முறை நடை பெறவில்லை. பல ஊர்களில், மாநிலங்களில் அவ்வப்போது இம்மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன.

  கடுமையான சட்டங்களும் அதை நிறைவேற்ற நேர்மையான அதிகாரிகளும் சட்டத்தை மதிக்கும் மக்களுமே இவ்வாறாக தவறுகளை மீண்டும் நடக்காமல் தடுக்க முடியும்.

  ReplyDelete
 9. ராமலக்ஷ்மி said...

  // வருத்தம் தரும் செய்தி. இது போல பல இடங்களில் பலமுறை நடக்கிறது. இருப்பினும் அலட்சியப் போக்கு தொடர்கிறது:(!//

  ஆமாம் மேடம். எனக்கு எப்படி சொல்வதென்றே புரியவில்லை. மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 10. ரொம்ப சோகமான விஷயம் தான் இது. இனியாவது இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய போகிறோம்?

  ReplyDelete
 11. தமிழ்வாசி - Prakash said...

  //கண்டிப்பாக விழிப்புணர்வு வர வேண்டும்//

  வரும் என்றும் நம்புவோம். மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 12. Lakshmi said...

  //நல்ல விழிப்புனர்வு பதிவு. மக்களிடம் தான் விழிப்புணர்வு வரனும்.//

  ஆமாம், மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
  மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 13. Rathnavel said...

  //நல்ல பதிவு.
  நன்றி ஐயா.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 14. வெங்கட் நாகராஜ் said...

  //நல்லதோர் விழிப்புணர்வு பகிர்வு... எத்தனை இடங்களில், அதுவும் வடமாநிலங்களில், இதுபோல நிறைய நடந்து விட்டது.... விழிப்புணர்வு வளரவேண்டியது மிக அவசியம்....//

  மிக்க நன்றி.

  ReplyDelete