Sunday, January 1, 2012

புத்தாண்டு அன்று நான்!



என்னைப் பொறுத்தவரை  2011, 2012 என்று பிரித்துப் பார்க்க விரும்புவதில்லை. எல்லா ஆண்டும் ஒன்றுதான். ஆனால், ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் பொழுதும் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்கிற நினைப்பு வருவதை  இங்கு மறைக்காமல் ஒப்புக் கொள்கிறேன். 
 
 

ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும், நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், ஐந்தாறு பேருக்கு போன் செய்து பேசுவதற்குள் போரடித்து விடுகிறது. முடிந்த வரை வருடத்தில் ஒரு முறை மட்டும் பேசும் நண்பர்களுக்கு புத்தாண்டு அன்று பேசுவதை வழக்கமாக வைத்துள்ளேன். குறிப்பாக மருத்துவர்கள் சிலர் எனக்கு நண்பர்களாக உள்ளார்கள். அவர்களை முடிந்தவரை மற்ற நாட்களில் போன் செய்து தொந்தரவு செய்வதை தவிர்த்துவிடுவேன். இங்கு தொந்தரவு என்று நான் குறிப்பிடுவது மருத்துவர்களுக்கு அல்ல. அவர்களை பார்க்க காத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு. பெரும் பகுதியான மருத்துவர்கள் நோயாளி அல்லாத நண்பர்களிடம் போனில் பேசுவதை விரும்புகிறார்கள் என்பது எனது அனுபவ உண்மை! 

நாம் எதிர்பார்க்காத நண்பர்கள் நமக்கு போன் செய்வார்கள்.  இன்னும் சிலர் பெயர் போடாமல் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். யாரிடமிருந்து வாழ்த்து வருகிறது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது.  

இந்த ஆண்டு அனைவருக்கும் மிக சிறந்த ஆண்டாக அமையும் என்று நம்புவோம்.

13 comments:

  1. வாழ்த்துகள்..இந்தவருடம் நல்ல வருடமாக அமையட்டும்..



    அன்போடு அழைக்கிறேன்.
    உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

    ReplyDelete
  2. இவ்வாண்டும் சிறந்த ஆண்டாக அமைய
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  3. வணக்கம்!
    //ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் பொழுதும் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்கிற நினைப்பு வருவதை இங்கு மறைக்காமல் ஒப்புக் கொள்கிறேன்.//
    உண்மைதான். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஏதோ இப்போதுதான் 2011 பிறந்தது போல் இருக்கிறது. 2012 வந்து விட்டது. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நிச்சயமாக இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாழ்வினில் துன்பங்கள் அகலும்
    நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
    ஆண்டிது பிறக்கிறது 2012.

    உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. விடியல் வரும் என்று காத்திராமல்
    விடியலை படைப்போம்..
    மகிழ்வோம்

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  9. //நாம் எதிர்பார்க்காத நண்பர்கள் நமக்கு போன் செய்வார்கள். இன்னும் சிலர் பெயர் போடாமல் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். யாரிடமிருந்து வாழ்த்து வருகிறது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது. // உண்மை - இது பெரிய குழப்பம்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  10. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    அதிகம் தொடர்பில் இல்லாத நண்பர்களை விசாரிக்க ஒரு வாய்ப்பாக அமையும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. நன்று.

    த.ம.3

    நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete