Wednesday, February 29, 2012

ஒரு கோடி - ஒரு பார்வை!



விஜய் டிவியில் கடந்த மூன்று நாட்களாக 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!' நிகழ்ச்சி பார்த்து வருகிறேன். சிலர் 'குரோர்பதி' நிகழ்ச்சியோடு ஒப்பீடு செய்கிறார்கள். நான் 'குரோர்பதி' பார்க்காததால் எனக்கு அந்தப் பிரச்னையில்லை.  இந்த நிகழ்ச்சி குறித்து என் மனதில் தோன்றுவதை  பகிர்ந்துக் கொள்கிறேன். 

முதலில் சூர்யா என்பதால்,  எப்படி இருக்கும் நிகழ்ச்சி? என்று நம்மையறியாமல் டிவி முன் உட்கார வைத்தது உண்மை!  நேரம் கிடைத்தால்  தொடர்ந்து பார்க்கலாம் என்றுள்ளேன்.

நிகழ்ச்சியில் சாதாரண குடும்பத்திலிருந்து வந்து பங்கேற்ற ஒரு பெண்மணி, தனது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியாதாகிவிட்டது என்று சொல்லி அழுதார். அதற்கு, சூர்யா "அப்துல் கலாம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில்தான் படித்தார்கள்" என்று சொன்னதுடன், அரசுப்பள்ளியில் மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று தெரிவித்தது பாராட்ட வேண்டிய ஒன்று. இது போன்று விழிப்புணர்வு செய்திகள் சொல்வதை சூர்யா தொடர்வார் என்று நம்பலாம்.

சில கேள்விகள் வேடிக்கையாக உள்ளது. இதில், நடுத்தர மற்றும் சாமான்ய மக்களும், பார்க்க மற்றும் பங்கேற்க வேண்டும் என்பதில் அக்கறைக் காட்டுகிறார்கள் என்பது புரிகிறது. முதல் நாள், விழுப்புரத்திலிருந்து வந்து கலந்துக் கொண்டவர் 'தானே' புயல் பெயருக்கு லைப்லைன் வரை சென்றதும். மறு நாள், ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்து வருபவர் 2011  ஆண்டில் சாகித்திய அகாடமி விருதுப் பெற்றவரின் பெயர் தெரியாமல் வெளியேறியதும் நெருடலான விஷயங்கள்.

விஜய் டிவியும், விளம்பரமும் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதை சூர்யா சொல்லும் பொழுது தான் 'கொஞ்சம்' கஷ்டமாக உள்ளது.

சீரியலில் வரும் கற்பனை கதாப்பாத்திரங்களுக்காக  கண்ணீர்விட்டு அழும் நம் வீட்டுப் பெண்கள், அதிலிருந்து கொஞ்சம் விடுதலை அடைவார்கள் என்று நம்பலாம்.


படம் உதவி: கூகிள்

10 comments:

  1. சில கேள்விகள் வேடிக்கையாக உள்ளது. ///கேள்வியா அது...

    ReplyDelete
  2. நான் பார்க்கவில்லை, அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

    ReplyDelete
  3. நிகழ்ச்சியை இன்னும் பாக்கல....

    கோவை நேரம் சொன்னது போல கேள்விகள் வேடிக்கையாக இருந்ததாக ஒரு இணைய தளம் குறிப்பிட்டு இருந்தது,

    ReplyDelete
  4. ஜஸ்ட் மிஸ். நானும் எழுத நினைத்திருக்கிறேன். நீங்கள் எழுதினால் என்ன. நானும் எழுதுவேன்

    ReplyDelete
  5. ஐயா, ராமனின் தாயார் பெயர் தெரியாமல் லைஃப் லைனில் பார்வையாளர் உதவி எதிர்பார்த்ததும் பார்வையாளர்களில் சிலர் ( சிலர் மட்டும் )சீதை என்று குறிப்பிட்டிருந்ததும் வேதனையாக இருந்தது.

    ReplyDelete
  6. பலரும், மொக்கைக் கேள்விகள் என்று புகார் சொல்ல, நீங்க //நடுத்தர மற்றும் சாமான்ய மக்களும் பங்கேற்க வேண்டும் என்பதில் அக்கறைக் காட்டுகிறார்கள்// என்று சொல்கிறீர்கள். இருக்குமோ?

    அதைவிட, இப்படி எளிதான கேள்விகள் கேட்டால்தான், எஸ்.எம்.எஸ். வழி லாபம் சம்பாதிக்கலாம் என்றும் அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?

    ReplyDelete
  7. க்ரோர்பதியைப் பின்பற்றி நிறைய நிகழ்ச்சிகள் வரத்தொடங்கியிருக்கு,.. உண்மைக்குமே பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியா இருந்தா நல்லதுதான்.

    ReplyDelete
  8. நானும் பார்க்கவில்லை. ஆனால், கேள்விகளா அவை என்கிற ரீதியில் நிறைய பகிர்வுகளைக் கண்டேன். எளிதாகக் கேட்பது வேறு. சற்று அக்கறை காட்டலாம்.

    ReplyDelete
  9. முதல் நாள் மட்டுமே, அதுவும் கொஞ்சம் பார்த்தேன். க்ரோர்பதி பாணியைக் கொஞ்சமும் மாற்றவில்லை என்பதோடு கேள்விகளும் மிகச் சாதாரணமாக இருக்கின்றன. என்னவோ வியாபாரம்!

    ReplyDelete
  10. இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலும் நன்றியும் சொல்ல ஆசைதான். ஆனால், நேரம் கிடைக்காமல் போனதால் எழுத முடியவில்லை. எல்லோருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete